முன்னொரு காலத்தில், ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் ஒரு பரிசுத்தமான மனிதன் வாழ்ந்து வாழ்ந்தார். சிலர் அவரை ஞானத்தைப் பெற்ற துறவி என்றும், மற்றும் பலர் அவரை முட்டாள்தனமான விசித்திரமான மனிதர் என்றும் நினைத்தனர். குழந்தைகளுக்குப் பொம்மைகள் மற்றும் மிட்டாய்கள் கொடுத்ததால் குழந்தைகள் அவரை கிலோனா பாபா என்று அழைத்தனர். ஒரு பிச்சைக்காரன் பாணியில் அன்றாடம் தனக்கு வேண்டியதை மட்டும் இறந்து பெற்றார்.தனக்கு எது கிடைத்ததோ அரிசியோ, காய்கறிகளோ, ரொட்டியோ அதைக் கருணையுடன் ஏற்றுக்கொண்டார். அவர் ஒரு போதும் பணம் ஏற்றுக் கொண்டதில்லை. கிடைத்ததில் நிறைவுடன் காணப்பட்டார். எனினும், அவர் பிச்சை கேட்டு வந்த பொழுது பொம்மைகளையும், இனிப்பையும் கூடக் கோரினார்.

கிராம மக்கள் அவரை மதித்ததால் பிச்சை கேட்டு வந்த பொழுது, பயன்படுத்திய பொம்மைகள் மற்றும் இனிப்பு உருண்டைகளைக் கொடுத்தனர். அதை அவர் ஒரு பெரிய பையில் போட்டுக் கொண்டு கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தார். அவரது இந்த வகையான நடத்தை, அணுகுமுறை,அன்பு, அவரது முன்னிலை எல்லாம் தெய்வீகமாக இருந்தது. அவர் உண்மையிலேயே ஒரு ஞானி என்றால் எதற்காக இந்த கனமான பெரிய பையை சுமந்து செல்கிறார் என்று ஒருவருக்கும் புரியவில்லை. அவர் உண்மையிலேயே ஒரு ஞானி என்றால் ஏன் சொற்பொழிவுகள் தருவதோ, நல்லதைப் பரப்புவதோ அல்லது கடவுளின் பெயரை உச்சரிப்பதோ இல்லை என்று ஆச்சரியப்பட்டனர். மாறாக குழந்தைகளுக்குக் கொடுப்பதற்காகவே இந்த கனமான பையில் ஒரு தோட்டியைப் போல் பொம்மைகளைச் சேகரித்துக் கொண்டு, அலங்கோலமான உடையில் ஏன் வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

ஒரு நாள் ஆல மரத்தின் கீழ் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த நாற்பது வயது மதிக்கத்தக்க ஆண்கள் குழு ஒன்று அவ்வழியே சென்ற அந்தச் சாதுவை நிறுத்தியது.

தயவுசெய்து நீங்கள் எங்களுக்கு நல் உபதேசம் அளித்தால் நாங்கள் ஞானிகள் ஆனாலும் ஆகலாம். உங்களின் இந்தப் பெரிய பையில் அனைத்து வேதங்களும் இருக்கின்றன என்று எங்களுக்கு உறுதியாகத் தெரியும் என்று அவர்கள் அந்தச் சாதுவிடம் பரிகாசமாகக் கூறினார்கள்.

அந்தச் சாது அவரது பையைத் தரையில் போட்டார்.

இவ்வளவு தான். இது தான் ஞானம். இது தான் தன்னை உணர்தல். நான் இப்பொழுது உங்களுக்கு வேதங்களின் சாராம்சத்தைக் கொடுத்துள்ளேன் என்று கூறினார்.

அவரைக் குறித்த பித்துப் பிடித்தவன் என்ற தங்களது சந்தேகம் உண்மை தான் என்று அந்தக் கூட்டம் நினைத்தது.

ஆனால் அந்தக் குழுவில் இருந்த ஒரு மனிதன் விடாமல் தொடர்ந்து இதன் அர்த்தம் என்ன என்றும், ஒரு பையைக் கைவிடுவது எப்படி விழுமிய வேத அறிவிற்குச் சமமாகும் என்றும் கேட்டான். நான் சுமக்கும் இந்தப் பை ஒரு பெரும் சுமையாகும். நான் இதைக் கை விட்டு விட்டேன். இப்பொழுது நான் சுமையில்லாமல் இருக்கிறேன். இதில் தான் அனைத்தும் உள்ளது. நீங்களும் உங்கள் பையை விட்டு விடுங்கள். சுமையைச் சுமக்காதீர்கள் என்று அந்தச் சாது கூறினார்.

இவ்வளவு தான் என்றால் இதன் அடுத்த படி என்ன என்று அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவன் தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் கேட்டான். அந்தச் சாது மீண்டும் தனது பையைத் தூக்கித் தோளில் சரி செய்து கொண்டே நான் எந்தச் சுமையையும் சுமக்கவில்லை. நான் குழந்தைகளுக்காக பொம்மைகளை மட்டும் தான் ஒரு பை நிறைய எடுத்துச் செல்கிறேன் என்று கூறினார். இது விழிப்புணர்வு மற்றும் அணுகுமுறையைப் பற்றியதாகும் என்று கூறிக் கொண்டே அவரது வழியில் சென்றார்.

அங்கு உணர்ச்சிப் பூர்வமான சுமைக்கு எந்த நியாயமும் இல்லை மற்றும் உடல் பூர்வமான சுமைக்கு எந்தப் பயனும் இல்லை. உங்களின் எதிர்மறை உணர்வுகளின் சேகரிப்பை அழித்து விடுங்கள். உங்களின் கவலைகளைக் கொண்ட கனமான பையைக் காலி செய்யுங்கள். உங்களின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட சுய நினைவுகளை நீக்கிக் கொள்ளுங்கள்.

சுதந்திரமாக இருங்கள். அச்சமின்றி இருங்கள். லேசாகப் பயணம் செய்யுங்கள்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook0Tweet about this on TwitterShare on LinkedIn0Google+0Email to someone