ஓம் சுவாமி

ஆயிரம் கண்ணாடிகளால் ஆன ஓர் அரங்கம்

நாம் நமது சொந்த உலகத்தை எவ்வாறு வடிவமைக்கிறோம் மற்றும் ஒரு குறிப்பிட்ட வகை மக்களை எப்படி ஈர்க்கிறோம் என்பதை விவரிக்கும் இதோ ஒரு அழகான கதை.

சீனாவில் ஒரு குறிப்பிட்ட ஷவோலின் கோவிலில் ஒரு தனிப்பட்ட மண்டபம் உள்ளது. அதன் சுவர்கள் மற்றும் கூரையில் ஆயிரம் கண்ணாடிகள் பதித்து இருக்கிறார்கள், ஆகையால் அது ஆயிரம் கண்ணாடிகள் மண்டபம் என அழைக்கப்படுகிறது. பல துறவிகள் ஆயிரம் கோணங்களில் இருந்து தங்களைப் பார்த்து, அங்குப் பயிற்சி செய்து, தனிச்சிறப்புடைய துல்லியமான தங்களின் அசைவுகளை மிகக் கச்சிதமானதாக ஆக்கிக் கொள்கிறார்கள். ஒரு நாள் நாய் ஒன்று எப்படியோ உள்ளே நுழைந்து விட்டது. ஆயிரம் நாய்கள் அதனைச் சூழ்ந்து கொண்டதைப் பார்த்து, அது பாதுகாப்பற்று, பயமுறுத்தப்படுவது போல் உணர்ந்தது. அது தனது பற்களைத் தவிடு பொடியாகிவிடும் படிக் கடித்தது, உறுமியது மற்றும் மற்ற நாய்களைப் பயமுறுத்துவதற்காகக் குலைத்தது. இயற்கையாகவே, ஆயிரம் நாய்களும் இதைப் பார்த்துத் திரும்பி உறுமின மற்றும் குலைத்தன. இந்த நாய் சீறிப் பாய்ந்தது. ஆயிரம் நாய்களும் அதன்…read more

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
4Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email

மிகச் சிறந்த ரகசியம்

ஈர்ப்புச் சட்டத்தால் உங்கள் கனவுகள் நனவாகலாம், மற்றவர்களின் கனவு நனவாக நீங்கள் உதவி செய்தால்.

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
1Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email

மிக முக்கியமான பணி

நீங்கள் ஜென் (Zen) பாணியில் வாழப் புரிந்து கொண்டீர்கள் என்றால், நீங்கள் உங்களது வாழ்க்கைப் பாதையில் பெருமளவு முன்னேற்றத்தை அடைவீர்கள்.

உங்கள் வாழ்க்கையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியது என்ன என்று என்னைக் கேட்டால், நிச்சயமாக ஞானமடைவது அல்லது கடவுளிடம் பிரார்த்தனை செய்வது என்று நான் சொல்ல மாட்டேன். மற்றவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று கூட நான் கண்டிப்பாகக் கூற மாட்டேன். உங்களது உடல் நலத்தைப் பார்த்துக் கொள்வதே, முன்னுரிமை அளிக்கப் பட வேண்டிய முதல் விஷயம் என்று நான் சொல்வேன். இது என் பார்வையில் மட்டுமே. நான் “கண்டிப்பாக” என்று பயன்படுத்துவது, நீங்களும் “கண்டிப்பாகச்” செய்ய வேண்டும் என்ற கருத்தில் அல்ல. நன்றாக உண்பது, உடற்பயிற்சி செய்வது மற்றும் உடல் நல்ல நிலையில் இருப்பது ஆகியவையே மகிழ்ச்சியின் அடித்தளம் ஆகும். நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் மற்றவர்களுக்குச் சேவை செய்ய முடியும், தியானம் செய்ய முடியும், பிரார்த்தனை செய்ய முடியும் மற்றும் உங்களுக்குப் பிடித்த பல விஷயங்களைச் செய்ய…read more

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
3Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email

நாம் ஏன் மகிழ்ச்சியற்று இருக்கிறோம்?

நம் சந்தோஷத்தை நொடிப் பொழுதே உள்ள மற்றும் பிடிபடாமல் இருக்கும் வேனில் காலத்து மேகங்களைப் போலவும், நம் துயரங்களையும், கஷ்டங்களையும் மிகப்பெரிய கற்களையும், கற்பாறைகளைப் போலவும் நாம் ஏன் உணர்கிறோம்?

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email

நான் மகிழ்ச்சியாக இல்லை

உங்கள் கடந்த காலத்தைப் பற்றி முணுமுணுத்துக் கொண்டே இருப்பது, மகிழ்ச்சிக்கான மிகப்பெரிய தடைகளுள் ஒன்றாகும். நிகழ்காலத்தில் எந்தத் துயரமும் இல்லை.

பின்வரும் கேள்வியை யாரோ ஒருவர் மின்னஞ்சல் செய்திருந்தார். உண்மையில் அடிக்கடி இதே கேள்வியை என்னிடம் கேட்கிறார்கள். “என் உள் மனக் கொந்தளிப்பைக் குறைப்பதற்கு எனக்குச் சில ஆலோசனைகள் தேவை. நான் என் ஐம்பதுகளில் இருக்கிறேன் ஆனாலும் என் வாழ்வில் அமைதியை உணரவில்லை. வேலையில் நிலைத்து இருப்பதற்காக மற்றும் குடும்பத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காகப் போராடுவது என ஓடிஓடி உழைத்ததில் களைப்படைந்து சோர்வாக இருக்கிறேன். நான் விலைப்பட்டியலுக்குப் (பில்) பணம் செலுத்தும் ஒரு அடிமை ஆகி இருக்கிறேன்.” அனைத்துமே துயரத்தைக் கொடுக்கிறது என்ற புத்தரின் பார்வை முதலில் ஒரு நம்பிக்கையற்ற பார்வையாகத் தோன்றுகிறது, ஆனால் ஆழ்ந்து சிந்தித்தால், வாழ்வில் மிகுந்த அனுபவத்தைக் கண்டவர்களின் உண்மையும் இதை ஒத்தே இருக்கிறது. நான் பல மகிழ்ச்சியான மக்களைச் சந்திக்கிறேன். இருந்தாலும் பெரும்பாலும், மனஅழுத்தத்தில் உள்ளவர்கள் மற்றும் சோகமாக இருப்பவர்களைச் சந்திக்கிறேன். துன்பம் தானே…read more

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
1Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email
First...56789...