ஓம் சுவாமி

தியானத்தின் ஆறு கோட்பாடுகள்

திலோப்பா, அவரது தலைமைச் சீடருக்குத் தியானம் பற்றிய ஆறு குறுகிய மற்றும் ஆழ்ந்த அறிவுரைகளை வழங்கினார். தியானம் செய்யும் ஒவ்வொருவரும் அவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு சீடர் ஒரு முறை “தியானம் முடிந்தவுடன் நாம் ஏன் கடவுள்துதி செய்கிறோம்?” என்று அவரது குருவைக் கேட்டார். “நாம் அது முடிந்துவிட்டது என்று கடவுளுக்கு நன்றி செய்கிறோம்,” என்று குரு நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். இது ஒரு நகைச்சுவை என்றாலும், இந்தத் தியானமானது இவ்வாறாகத் தான் சில நேரங்களில் உணர முடிகிறது. நேர்மையாகவும் மற்றும் ஒழுக்கமாகவும் தியானிப்பவர்களைப் பொறுத்தவரை, தியானம் ஒரு நெடிய, கடினமான பயணமாகும். நீங்கள் உணர்வுகளின் மருக்களை நீக்கி, தழும்பேறிய எண்ணங்களை விட்டொழித்து, ஆசைகளின் அடுக்குகளை நீக்கி, உங்கள் மனத்தை ஒருநிலைப்படுத்த முயற்சிக்கிறீர்கள். அது எளிதல்ல. மனத்தைச் சமாதானப்படுத்தவும் மற்றும் முழுமையாக உறுதிப்படுத்தவும் பெரும் திறமை மற்றும் முயற்சி தேவைப்படுகிறது. தியானத்தின் பல்வேறு வடிவங்கள் மற்றும் பாணிகளைப் பரிசோதிப்பதில் என் வாழ்க்கையின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியை நான் முதலீடு செய்துள்ளேன். சில வழிகள் விரிவான…read more

எப்படி மன்னிப்புக் கேட்பது?

நீங்கள் உங்களது தவறுகளை மீண்டும் செய்யாமல் இருந்தாலும், எந்தச் சாக்குப்போக்கும் சொல்லாமல் இருந்தாலும் தான் மன்னிப்புக் கேட்பது உண்மையானதாகிறது.

நான் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் ஆஸ்திரேலியாவில் பல கோடி டாலர் மதிப்புள்ள ஊடக நிறுவனத்தின் மிகப்பெரிய தொழிலதிபர்கள் குழுமத்தின் முக்கியஸ்தனாக இருந்தேன். நான் ஒரு முக்கியமான இலாக்காவை நிர்வகிக்க ஆரம்பித்தேன். அப்பொழுது புதிய மென் பொருளின் ஒரு குறிப்பிட்ட பிழைபாடு எங்களுடைய நுகர்வோர்களுக்கும், வருவாய்த் துறையினருக்கும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. தொழில்நுட்பத்தில் முக்கிய பொறுப்பு நான் வகித்ததால் அப்பிரச்சனையைத் தீர்ப்பது என்னுடைய பொறுப்பாகிவிட்டது. நாங்கள் வெவ்வேறு நிறுவனங்களில் இருந்து தொழில் நுட்ப வல்லுநர்களை அழைத்தோம். யாராலும் பிரச்சனைக்கான காரணத்தை சுட்டிக் காட்ட முடியவில்லை. பல வாரங்கள் கழிந்துவிட்டன. ஆனால் எந்தவித முன்னேற்றமும் காணப்படவில்லை. ஒருநாள் மிகுந்த கவலையுடனும், சுய ஆராய்வுடனும் இரவு 1 மணிக்கு வீட்டை அடைந்தேன். நான் குளிக்க ஆரம்பித்தபோது திடீரென்று ஒரு யோசனை உதித்தது. அந்த பிரச்சனையைத் தீர்க்கும் ரகசியம் விளங்கியது. அலுவலகம் திரும்பும்…read more

சாக்ரடீஸின் மூன்று கேள்விகள்

உங்களின் அறிவின் தோற்றம் எதுவென்று எப்போதாவது கேள்வி கேட்டிருக்கிறீர்களா? “தாக்கமடைந்த மனப்பான்மை” என்ற கதவின் பின்னால் ஒரு புதிய உலகமே உங்களுக்காகக் காத்திருக்கிறது.

நான் பலமுறை “தாக்கமடைந்த மனப்பான்மை” (conditioning – கண்டிஷனிங்) இலிருந்து விதிபடுவதைப்பற்றிப் பேசுகிறேன். என்னுடைய ஒவ்வொரு வீடியோவின் முடிவிலும் “உங்களின் சொந்த உண்மையைக் கண்டறியுங்கள்” (Discover Your Own Truth – டிஸ்கவர் யுவர் ஓன் ட்ருத் ) என்ற வாக்கியம் இருக்கிறது. அது ஒன்று மட்டுமே உங்களை விடுவிக்கும் என்று அடிக்கடி சொல்கிறேன். ஆனால், “தாக்கமடைந்த மனப்பான்மை” என்றால் என்ன என்று அடிக்கடி கேட்கப்படுகிறேன்? நாம் சுய உண்மையைக் கண்டறிய வேண்டியதன் அவசியம் என்ன? என் மதம் அல்லது என் கடவுள் என்னை ஏன் விடுவிக்க முடியாது? இந்தக் கட்டுரையின் மூலம் நான் உங்களுக்கு உலகத்தை வேறு கோணத்தில் பார்க்க உதவி செய்ய முடியும் என்று எண்ணுகிறேன். எனக்கு எந்த மதம், தத்துவம், ஜாதி, பிரார்த்தனை அல்லது வழிபாட்டு முறை மீதும் எந்த ஆட்சேபனையும் இல்லை…read more

மூன்று மிக முக்கியமான கேள்விகள்

நீங்கள் இந்தக் கேள்விகளை உங்களையே கேட்டிருந்தால், உங்கள் வாழ்க்கையை ஒரு சிறிதளவு வித்தியாசமாக வாழ்ந்திருக்க முடியும். கதையைப் படிக்கவும்.

மிக முக்கியமான நபர் யார்? மிக முக்கியமான நேரம் எது? மிக முக்கியமான கர்மா எது? முன்னொரு காலத்தில் ஒரு அரசர் தன் மனதில் இந்த மூன்று கேள்விகளுடன் காலையில் கண் விழித்தார். அவர் அரசவையில் தனது அமைச்சர்களிடமும், சபையினர்களிடமும் இந்தக் கேள்விகளைக் கேட்டார். சிலர், ராஜா மிக முக்கிய நபர் என்றும், இறக்கும் தருவாய் மிக முக்கியமான நேரம் என்றும், மதத்திற்குச் செய்யும் சேவையே மிகவும் பயனுள்ள கர்மா என்றும் கூறினர். ஒருவருடைய குழந்தை அல்லது ஒருவருடைய பெற்றோர் முக்கியமானவர், பிறந்த நேரம் மிக முக்கியமான நேரம், தானம் மிக முக்கியமான கர்மா என்று பலரும் வெவ்வேறு பதில்களைக் கூறினார்கள். சிலர் கடவுள் மிக முக்கியமான நபர் என்றும், பலர் விவசாயி என்றும், சிலர் சிப்பாய் என்றும் இப்படியாகப் பலரும் பல விதமாகப் பதில் அளித்தனர்….read more

வாழ்க்கை ஒரு போராட்டம்

வாழ்க்கை என்பது உண்மையில் ஒரு போராட்டமா அல்லது அது ஒரு கண்ணோட்டமா? கதையைப் படிக்கவும்.

நான் ஒவ்வொரு மாதமும் இரண்டு முதல் மூன்று ஆயிரம் வரை மின்னஞ்சல்களைப் பார்க்கிறேன். அதில் தொண்ணூறு சதவிகிதம் ஒன்று அல்லது அதற்கு மேலும் பிரச்சனைகளுடன் போராடி வரும் மக்களுடையதாகும். அதில் சிலர் வாழ்க்கையில் போராடியும், எதிர்த்தும் என்ன செய்ய வேண்டும் என்பதறியாது தளர்ந்து முச்சந்தியில் இருப்பதாகச் சொல்கிறார்கள். இன்னும் சிலர் இயற்கை அவர்கள் மேல் இரக்கமற்றதாக இருப்பதாகக் கூறுகின்றார்கள். நினைவு தெரிந்த நாள் முதல் வாழ்க்கையே ஒரு போராட்டமாக உள்ளதாக நினைக்கின்றார்கள். ஆம், வாழ்க்கை என்பது கடினமானதாகவும், போராட்டமானதாகவும் இருக்கலாம். ஆனால் உண்மையில் அது வேறு எவருக்காவது மாறுபட்டதாக உள்ளதா? பணம் இல்லாதவர்கள் பணம் உள்ளவர்களுடைய வாழ்க்கை மிகவும் சுலபமானதாக எண்ணுகின்றார்கள். செல்வமுள்ளவர்களும், மன அழுத்தம் தரும் வணிகத்தைச் செய்பவர்களும், ஒன்பது முதல் ஐந்து மணி வரை வேலை பார்ப்பவர்களின் வாழ்க்கை நிம்மதியானது என்று நினைக்கின்றார்கள். ஆரோக்கியமானவர்கள்…read more

First...45678...