ஓம் சுவாமி

வாழ்க்கை ஒரு போராட்டம்

வாழ்க்கை என்பது உண்மையில் ஒரு போராட்டமா அல்லது அது ஒரு கண்ணோட்டமா? கதையைப் படிக்கவும்.

நான் ஒவ்வொரு மாதமும் இரண்டு முதல் மூன்று ஆயிரம் வரை மின்னஞ்சல்களைப் பார்க்கிறேன். அதில் தொண்ணூறு சதவிகிதம் ஒன்று அல்லது அதற்குமேலும் பிரச்சனைகளுடன் போராடி வரும் மக்களுடையதாகும். அதில் சிலர் வாழ்க்கையில் போராடியும், எதிர்த்தும் என்ன செய்ய வேண்டும் என்பதறியாது தளர்ந்து முச்சந்தியில் இருப்பதாகச் சொல்கிறார்கள். இன்னும் சிலர் இயற்கை அவர்கள் மேல் இரக்கமற்றதாக இருப்பதாகக் கூறுகின்றார்கள். நினைவு தெரிந்த நாள் முதல் வாழ்க்கையே ஒரு போராட்டமாக உள்ளதாக நினைக்கின்றார்கள். ஆம், வாழ்க்கை என்பது கடினமானதாகவும், போராட்டமானதாகவும் இருக்கலாம். ஆனால் உண்மையில் அது வேறு எவருக்காவது மாறுபட்டதாக உள்ளதா? பணம் இல்லாதவர்கள் பணம் உள்ளவர்களுடைய வாழ்க்கை மிகவும் சுலபமானதாக எண்ணுகின்றார்கள். செல்வமுள்ளவர்களும், மன அழுத்தம் தரும் வணிகத்தை செய்பவர்களும், ஒன்பது முதல் ஐந்து மணி வரை வேலை பார்ப்பவர்களின் வாழ்க்கை நிம்மதியானது என்று நினைக்கின்றார்கள். ஆரோக்கியமானவர்கள் பணக்காரராக வாழ்வதே உத்தமம்…read more

மனஅழுத்தத்தைக் கையாளுதல்

ஒரு மனிதன் மனஅழுத்தம் அடைந்ததே இல்லை. அவரது அண்டை வீட்டுக்காரர்களை இது குழப்பமடைய வைத்தது. மேலும் அறிந்து கொள்ள கதையைப் படிக்கவும்.

நமது உலகம் சில நேரங்களில் சமாளிக்க முடியாத இடமாக இருக்கூடும். நாம் அதைக் கொஞ்சம் சிக்கலானதாகவும், கொஞ்சம் விரைவானதாகவும் ஆக்கி விட்டோம். எல்லாம் நேற்றே செய்யப்பட வேண்டியதாகி விட்டது. நாட்கள், வாரங்கள் மற்றும் மாதங்களில் திறனை அளவிடுவது போதாது என்பதைப் போல், நாம் மணி, நிமிடங்கள், சில நொடிகளில் திறனை அளவிடத் தொடங்கி விட்டோம். இது ஏன் இப்படி இருக்க வேண்டும்? இது நேரடியாக நமது உடல் மற்றும் உணர்வுபூர்வமான நலனைப் பாதித்து மன அழுத்தத்தைக் கொடுத்துவிட்டது. இந்த உலகத்தைத் திடீரென்று மாற்ற நம்மிடம் எந்த விசைக்கருவியும் இல்லை. உண்மையில், நம்மை உடனடியாக மாற்றிக் கொள்ள அழுத்தக்கூடிய எந்த பொத்தானும் இங்கு இல்லை. ஆனால் உங்கள் வாழ்க்கை, உங்கள் பயணம், உங்கள் முன்னுரிமைகள் இவைகளின் மீதான உங்களுடைய பிரதிபலிப்பினால் உங்களுடைய சொந்த வேகத்தை தீர்மானிக்க முடியும். நீங்கள்…read more

உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?

நம்பிக்கை என்றால் என்ன? ஒரு ரோஜா எப்படிப் பூக்கிறது? கதையைப் படிக்கவும்.

எது அழகு?

அழகின் அடிப்படையில் இணைப்பின் உணர்வு ஒன்று உள்ளது. எவைகளுடன் உங்களால் இணைந்து கொள்ள முடியுமோ, அதை நீங்கள் அழகாக உணர்கிறீர்கள்.

எது அழகு? கவர்ச்சிகரமாக, பார்க்க மனம் மகிழும்படியாக உள்ள ஒன்றா அல்லது அதற்கு மேலும் ஏதாவது உள்ளதா? எந்தச் சந்தேகமும் இல்லாமல், முதன்முதலில் பார்த்தவுடன் தோன்றும் உணர்வு என்று வரும் போது, வெளிப்புறத் தோற்றத்தைத் தான் உடனடியாகப் பதிவுக் குறியீடு செய்ய முடியும். நீங்கள் அழகான ஒரு பெண் அல்லது மனிதரைப் பார்த்தால், அவர்கள் கவர்ச்சி உடையவராகத் தெரிவது இயற்கை தான். நீங்கள் திருமணமானவரோ, சமூகத்தில் அல்லது மதத்தில் உங்களது நிலைமையோ இவைகளைப்பற்றிப் பொருட்படுத்தாமல், செயற்கையாக அவர்களின் வெளிப்புற அழகை மறுக்க முடியாது. என்னைக் கேட்டால் அவ்வாறு நீங்கள் செய்தால், அது மிகவும் பரிதாபமானதாகும். வெளிப்புற அழகு அவ்வளவு தவிர்க்கமுடியாதது என்றால், நட்சத்திரங்கள், மேதைகள் மற்றும் செல்வாக்கு உரிய மக்களின் உறவுகளில் இவ்வளவு பிளவுகள் ஏன் ஏற்படுகிறது? அழகைப் பற்றிய விளக்கம், கோட்பாடு மற்றும் கருத்துக்களைப் பற்றிப்…read more

வரையருக்கப்பட்ட ஒழுக்கம்

ஒழுக்கம் பூரணமானதா? நீங்கள் ஐவரைக் காப்பாற்ற ஒருவரைக் கொல்வீர்களா? தள்ளுவண்டியைப் பற்றிய சிந்தனைச் சோதனையை வாசியுங்கள்.

அறநெறியைப் பற்றிய கேள்விகளை என்னிடம் அடிக்கடி கேட்கிறார்கள். மக்கள் இது சரியா அல்லது அது தவறா, அது நல்லதா அல்லது இது கெட்டதா என்றும் சில குறிப்பிட்ட செயல்கள் தார்மீகமானதா மற்றவை முறைகேடானதா என்றும் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறார்கள். எது நல்லது மற்றும் எது மோசமானது? நான் உங்களிடம் கேட்கிறேன் – தார்மீகமானது அல்லது முறைகேடானது என்று எப்படி நாம் வித்தியாசப்படுத்துகிறோம்? இது போன்ற கேள்விகளைக் கேட்பவர்கள் பெரும்பாலும் அறநெறியைப் பற்றிய வலுவான கருத்துக்களைக் கொண்டிருப்பார்கள். இது மோசமானதல்ல. அவர்கள் அதைப்பற்றி மிகத் தெளிவாக இருக்கிறார்கள் என்று அர்த்தம். இது அவர்களின் கருத்துக்கள் ஆனாலும், பெரும்பாலும் அவர்களுடைய சொந்த கருத்துக்களாக இருப்பதில்லை. இந்த சித்தாந்தங்கள் அவர்களுக்கு மற்றவர்களிடமிருந்து கொடுக்கப்பட்டவையாகும். ஒருவர் கண்டுபிடித்ததை பின்னால் வந்த ஒவ்வொரு தலைமுறையும் நம்ப முனைகின்றது. நீங்கள் பிரதிபலிக்க ஒரு கணம் எடுத்துக்…read more

First...34567...