ஓம் சுவாமி

நான்கு வகை கர்மாக்கள்

நீங்கள் பறிக்காத பழுத்த ஆப்பிள் என்னவாகிறது? அது தரையில் விழுகிறது. தப்பிக்க வழியேதுமில்லை.

கர்மாவின் சட்டம் பற்றிய மேலும் சில கோட்பாடுகளைத் தெளிவாக நான் விளக்குகிறேன். இன்று நான் பல்வேறு வேத நூல்களில் இருந்து எடுக்கப்பட்ட கர்மாவின் நான்கு வகைகளைப் பற்றிக் கூறப் போகிறேன். எப்பொழுதும் போல் நான் வேதத்தின் வரையறைகளை வழங்கலாம், ஆனால் இந்த விளக்கம் எனது தனிப்பட்ட கருத்தாகும், இதுவரை அறியப்பட்ட கருத்துகளிலிருந்து மாறுபட்டதாக இருக்கலாம். கீழே உள்ளது நான்கு வகையான வகைப்பாடு ஆகும். இது அந்த முத்திரைகளைப் பற்றியதான உணர்தல் ஆகும். அவை பின்வருமாறு: 1. ப்ராரப்தா, முதிர்ச்சியடைந்த, கர்மா ஒரு மரத்தில் ஒரு ஆப்பிள் பழம் இருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அது நன்கு முதிர்ந்து பழுத்து உள்ளது. அதை சரியான நேரத்தில் பறிக்க வேண்டும் அல்லது அது மரத்திலிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டு நிலத்தில் விழுகிறது. அது எப்போதும் மரத்திலேயே இருக்க முடியாது. இதேபோல்,…read more

உங்கள் கர்மாவின் கணக்கு

கர்மாவின் சட்டம்: இது ஒரு குடைராட்டினம் போன்றது தான். நீங்கள் யாராக இருந்தாலும் அல்லது எதில் சவாரி செய்தாலும் அனைத்தும் ஒரே இடத்தில் தான் முடிவடைகிறது.

கர்மாவின் கணக்கைப் பற்றிய கருத்தை உங்களுடன் நான் பகிர்ந்து கொள்கிறேன். ஒரு நல்ல சிறிய கதையே எனது இயற்கையான தொடக்கமாக உள்ளது. இதோ: ஒரு முறை ஒரு சிறிய கிராமத்தில் அனைவரும் பொருளாதார ரீதியாகக் கடனாளியாக இருந்தனர். அதன் மக்கள் உள்ளூர் வர்த்தகத்தை அடிப்படை வாழ்வாதாரமாகக் கொண்டிருந்தனர். விவசாயிகள் கடனாகப் பொருட்களை வாங்கிக் கொண்டு அறுவடைக்குப் பின்னர் பணத்தை, பணமாக உதவி செய்பவருக்குக் கொடுத்தனர். அந்தப் பண உதவி வழங்குபவர் இதற்கான முதலீட்டைக் கடனாகப் பெற்று விவசாயியிடமிருந்து பணம் கிடைத்ததும் தனது கடனை அடைத்து விடுவார். அடிப்படையில், எல்லோரும் யாரோ ஒருவரிடம் கடன்பட்டிருந்தனர். அந்த கிராமத்தில் விடுதியைப் போன்ற ஒரு உணவகம் இருந்தது. ஒரு நாள், அருகில் இருந்த ஒரு ஊரிலிருந்து ஒரு பணக்கார வியாபாரி அங்கு விஜயம் செய்தார். அன்று இரவு அங்கு தங்க எண்ணினார்….read more

கர்மாவின் சட்டம்

எப்படி ஒரு விதை செழுமையாகவும் மற்றது அழியக் கூடியதாகவும் உள்ளது? கர்மாவின் சட்டமே எல்லாவற்றிற்கும் தீர்வா?

முன்னொரு காலத்தில் தியோர்டி என்று ஒரு விஞ்ஞானி இருந்தார். ஒவ்வொரு குறிப்பிடத்தக்க நிகழ்வுக்குப் பின்னாலும் அவருக்கு ஒரு கோட்பாடு இருந்தது. அவர் தர்க்கம், கோணவியல் மற்றும் இயற்பியல் ஆகியவற்றில் இணையற்றவராக இருந்தார். அவரால் சிக்கலான சமன்பாடுகளை மனத்திலேயே சிந்தித்து எளிதில் தீர்க்க முடிந்தது. அவரால் ஒரு உயரமான அமைப்பின் நிழலைப் பார்த்து ஒரு சில விநாடிகளில் அதன் உயரத்தைக் கண்டுபிடுக்க முடிந்தது. சில விஷயங்களின் சிக்கலான செயல்பாடுகளுக்குப் பின்னால் உள்ள ஏன், எப்படி என்பவைகளை அறிந்திருந்தார். ஒரு நாள் அவர் படம் வரையும் கலைஞரான அவரது நண்பரைக் காணச் சென்றார். அவரது நண்பர், அவருடைய சமீபத்திய கலைப் படைப்புகளான சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம், தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள், மற்றும் நிலப்பரப்புகளின் அழகான படங்களைக் காட்டினார். அந்த ஓவியங்களைப் பார்த்து வெளிக்காட்ட முடியாத மகிழ்ச்சியைத் தியோர்டி அனுபவித்துப்…read more

துயரத்தின் போக்கு

துயரத்திற்கு, அதற்கென்று ஒரு சொந்த வாழ்க்கை உள்ளது. ஒரு நதி அதன் போக்கில் ஒரு வழித்தடத்தை அமைத்துக் கொள்வது போல் துயரமும், வாழ்க்கைக் கடலில் கலக்கும் முன் பாய்ந்தோட வேண்டும்.

புத்தர் ஞானம் அடைந்த பின்னர் அவரது குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்ற போது, அவருக்கு ஒரு ராஜோபசாரமான வரவேற்பு வழங்கப்பட்டது என்று கூறினார்கள். புத்தர் முன்னாளில் இளவரசராக இருந்ததைப் போல், அவரது தந்தையான ராஜா அவரை இப்பொழுதும் நடத்தினார். அமைச்சர்கள் மற்றும் அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் அவரை மிகவும் பயபக்தியோடு வரவேற்றனர். அவருடைய சொந்த மகன், இராகுலா, ஓடிவந்து அவரை இறுக்கமாகக் கட்டி அணைத்துக் கொண்டான். ஏழு ஆண்டுகளாக அவன் தனது தந்தையைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருந்தான் மற்றும் எதிர்பார்ப்போடு அவரைப் பார்க்கக் காத்திருந்தான். போதிசத்துவரின் மனைவி எஸோதராவைப் பற்றிய ரஞ்சனி ஒபேய்சேகேரேவின் இலக்கியத்தின் ஒரு காட்சியிலிருந்து நான் தொடர்கிறேன்: எஸோதரா, இராகுலாவின் தாய் அங்கு வரவில்லை. ராஜா அவளைக் கூப்பிட்டு அனுப்பினார். ஆனால் அவள், “நிச்சயமாக நான் அந்த மதிப்புக்குத் தகுதியானவளாக இருந்தால், சித்தார்த்தரே என்னை வந்து…read more

அருள் பற்றிய ஒரு கதை

தெய்வ அருளானது உங்களது மென்மையான இதயத்தைச் சிப்பியானது தனக்குள் மறைந்து குடியிருக்கும் உயிர்களைக் காப்பது போல் பாதுகாக்கிறது. இயற்கைக்கென்று ஒரு வழி உள்ளது.

ஒருநாள் நான், சுவாமி ராகவானந்தாவிடம், நான் பொதுவாக அவரை ரகு சுவாமி என்று அழைப்பேன்(நான் அறிந்த சீடர்களுள் மிகவும் விசுவாசமுள்ள சீடர், உத்வேகம் மற்றும் பற்றின்மையுடனானவர்), எனது வலைப்பதிவில் அவரது கதைகளுள் ஒன்றைப் பகிர்ந்து கொள்ள முடியுமா என்று கேட்டேன். நம்பிக்கை மற்றும் கருணை, எளிமை மற்றும் அறநெறி பற்றியதான அழகான ஒரு கதை. ஒரு பரந்த புன்னகையுடன் அவர் உடனடியாக ஒப்புக் கொண்டார். என்னுடைய வாழ்க்கைக் குறிப்பை (“இப் ட்ரூத் பி டோல்ட்” – If Truth Be Told – என்ற ஆங்கிலப் புத்தகம்) நீங்கள் படித்திருந்தால், உங்களுக்கு ஏற்கனவே ரகு சுவாமியைத் தெரிந்திருக்கும். நான் இமாலயக் காடுகளில் தியானம் செய்த போது என்னைக் கவனித்துக் கொண்ட பிரதீப் பிரம்மச்சாரிதான் இவர். கிட்டத்தட்ட 33 ஆண்டுகளுக்கு முன்பு ரகு சுவாமி, 7 வயதாக இருந்த…read more

First...23456...