ஓம் சுவாமி

அருள் பற்றிய ஒரு கதை

தெய்வ அருளானது உங்களது மென்மையான இதயத்தைச் சிப்பியானது தனக்குள் மறைந்து குடியிருக்கும் உயிர்களைக் காப்பது போல் பாதுகாக்கிறது. இயற்கைக்கென்று ஒரு வழி உள்ளது.

ஒருநாள் நான், சுவாமி ராகவானந்தாவிடம், நான் பொதுவாக அவரை ரகு சுவாமி என்று அழைப்பேன்(நான் அறிந்த சீடர்களுள் மிகவும் விசுவாசமுள்ள சீடர், உத்வேகம் மற்றும் பற்றின்மையுடனானவர்), எனது வலைப்பதிவில் அவரது கதைகளுள் ஒன்றைப் பகிர்ந்து கொள்ள முடியுமா என்று கேட்டேன். நம்பிக்கை மற்றும் கருணை, எளிமை மற்றும் அறநெறி பற்றியதான அழகான ஒரு கதை. ஒரு பரந்த புன்னகையுடன் அவர் உடனடியாக ஒப்புக் கொண்டார். என்னுடைய வாழ்க்கைக் குறிப்பை (“இப் ட்ரூத் பி டோல்ட்” – If Truth Be Told – என்ற ஆங்கிலப் புத்தகம்) நீங்கள் படித்திருந்தால், உங்களுக்கு ஏற்கனவே ரகு சுவாமியைத் தெரிந்திருக்கும். நான் இமாலயக் காடுகளில் தியானம் செய்த போது என்னைக் கவனித்துக் கொண்ட பிரதீப் பிரம்மச்சாரிதான் இவர். கிட்டத்தட்ட 33 ஆண்டுகளுக்கு முன்பு ரகு சுவாமி, 7 வயதாக இருந்த…read more

உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?

நம்பிக்கை என்றால் என்ன? ஒரு ரோஜா எப்படிப் பூக்கிறது? கதையைப் படிக்கவும்.

சரணடைதல் என்பதன் பொருள்

சரணடைதல் என்பது ஏற்றுக்கொள்ளுதலின் ஒரு வடிவம் ஆகும். நீங்கள் ஒரு பூனைக் குட்டி அல்லது ஒரு குரங்கு போல் சரணடைய முடியும். இரண்டில் நீங்கள் எது?

பெரும்பாலான ஆத்திக மதங்கள் பக்தர்களைச் சரணடையத் தூண்டுகின்றன, அவைகள் தெய்வீகச் சித்தத்திற்குச் சரணடைவதில் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன. சில பாதைகளில் குரு, ஆன்மீக ஆசானிடம் பூரணச் சரணாகதி அடைவது தேவையாக உள்ளது. அப்படியானால், சரணடைவது என்பதன் உண்மையான அர்த்தம் என்ன? சரணடைவது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? முன் ஒரு காலத்தில், ஒரு சிறிய கிராமத்தில், ஒரு வயதான விவசாயி தனது ஒரே மகனுடன் வசித்து வந்தார். அவர்களுக்கு ஒரு சிறிய துண்டு நிலம், ஒரு மாடு மற்றும் ஒரு குதிரை சொந்தமாக இருந்தது. ஒரு நாள் அவரது குதிரை ஓடிவிட்டது. அவர்கள் தங்களது குதிரையைத் தேடிச் சென்றனர், ஆனால் பலனில்லை. அவரது மகன் மிகவும் கலக்கமடைந்து இருந்தான். அண்டை வீட்டுக்காரர்கள் அந்த வயதான விவசாயியைப் பார்க்க வந்தார்கள். “என்ன கொடுமை நடந்துள்ளது, கடவுள் உங்கள் மீது மிகக்…read more

ஆயிரம் கண்ணாடிகளால் ஆன ஓர் அரங்கம்

நாம் நமது சொந்த உலகத்தை எவ்வாறு வடிவமைக்கிறோம் மற்றும் ஒரு குறிப்பிட்ட வகை மக்களை எப்படி ஈர்க்கிறோம் என்பதை விவரிக்கும் இதோ ஒரு அழகான கதை.

சீனாவில் ஒரு குறிப்பிட்ட ஷவோலின் கோவிலில் ஒரு தனிப்பட்ட மண்டபம் உள்ளது. அதன் சுவர்கள் மற்றும் கூரையில் ஆயிரம் கண்ணாடிகள் பதித்து இருக்கிறார்கள், ஆகையால் அது ஆயிரம் கண்ணாடிகள் மண்டபம் என அழைக்கப்படுகிறது. பல துறவிகள் ஆயிரம் கோணங்களில் இருந்து தங்களைப் பார்த்து, அங்குப் பயிற்சி செய்து, தனிச்சிறப்புடைய துல்லியமான தங்களின் அசைவுகளை மிகக் கச்சிதமானதாக ஆக்கிக் கொள்கிறார்கள். ஒரு நாள் நாய் ஒன்று எப்படியோ உள்ளே நுழைந்து விட்டது. ஆயிரம் நாய்கள் அதனைச் சூழ்ந்து கொண்டதைப் பார்த்து, அது பாதுகாப்பற்று, பயமுறுத்தப்படுவது போல் உணர்ந்தது. அது தனது பற்களைத் தவிடு பொடியாகிவிடும் படிக் கடித்தது, உறுமியது மற்றும் மற்ற நாய்களைப் பயமுறுத்துவதற்காகக் குலைத்தது. இயற்கையாகவே, ஆயிரம் நாய்களும் இதைப் பார்த்துத் திரும்பி உறுமின மற்றும் குலைத்தன. இந்த நாய் சீறிப் பாய்ந்தது. ஆயிரம் நாய்களும் அதன்…read more

கடவுள் கோபம் கொள்கிறாரா?

கடவுள் உங்கள் மேல் கோபம் கொள்வார், உங்களது பாவங்கள் மற்றும் மோசமான கர்மாவுக்காக உங்களைத் தண்டிப்பார் என்பது சாத்தியமா? அப்படியானால், உண்மையில் அவர் கடவுளாக இருக்க முடியுமா?

இரண்டு கேள்விகளைப் பலர் என்னிடம் பல முறை கேட்டுள்ளனர். சமீபத்தில், நெடு நாட்களாக எனக்குத் தெரிந்த ஒரு நபர், இதே கேள்விகளைக் கேட்டார். நானும் பதிலளித்தேன். அவ்வாறு செய்த பின்னர், நான் இதை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். எதிர்காலத்தில், இந்தக் கேள்விகளைக் கேட்பவரிடம் இந்த இணைப்பைச் சுட்டிக்காட்டி விட்டு, நான் என் நேரத்தைச் சேமித்துக் கொள்ள முடியும். நான் அந்தக் கேள்விகளைத் தொகுத்து உங்களுக்குக் கூறுகிறேன்: 1. நான் குறிப்பிட்ட ஒரு தெய்வத்தை வணங்குகிறேன். நான் மற்றொரு வடிவத்தை வணங்கினால் அல்லது மற்ற நடைமுறைகளை ஆராய முற்பட்டால், அது என்னுடைய தெய்வத்தைச் சஞ்சலமடையச் செய்யுமா? 2. குரு குறையற்றவராக இருக்க முடியுமா? அல்லது வேறு எவராவது குறையற்றவராக இருக்க முடியுமா? யாவர்க்கும் மேலான கடவுள் ஒருவரே பூரணமானவராக இருக்க முடியும். என் எண்ணங்கள்;…read more

12345...