ஓம் சுவாமி

உரையாடல்களில் இருந்து ஒருமுகச் சிந்தனைக்கு

நல்ல தியானம் மற்றும் பெரிய நினைவாற்றலுக்கு, ஒரு வில்லாளனுக்குத் தேவையான ஒருமுகச்சிந்தனையை (செறிவு), தியானிப்பவர் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு நல்ல தியானிப்பவர் ஆவதற்குப் பெரிய செறிவு தேவை ஆக உள்ளது, மிகப் பெரிய தியானிப்பவர் ஆவதற்கு உச்சக்கட்ட செறிவு தேவை ஆக உள்ளது. செறிவு, குறிப்பாக ஒரு கூரான செறிவு, பயிற்சியினால் வருகிறது. எவ்வளவு அதிகமாகப் பயிற்சிக்கிறீர்களோ, அவ்வளவு நேர்த்தியாக உங்களுக்குச் செறிவு அமையும். கிருஷ்ணரின் காலத்தில் இருந்த பெரிய வில்லாளனும், வீரனுமான அர்ஜுனன், ஐந்து சகோதரர்களில் ஒருவனாவான். அவனுடைய சகோதரன் பீமன் பெரும் பசி உள்ள, கிட்டத்தட்டக் கட்டுப்பாடில்லாமல், பெரிய பெரிய கவளங்களாக விழுங்குபவன். ஒரு அமாவாசை அன்று, கும்மிருட்டில் பீமன் நடு இரவில் பசியினை உணர்ந்தான். அவன் சமையலறைக்குள் புகுந்து உணவு மற்றும் இனிப்புகளைக் கண்டுபிடித்து, அங்கேயே சாப்பிடத் தொடங்கினான்; அவன் குழந்தைப் பருவத்தில் இருந்து இவ்வாறு செய்து வந்ததால், பீமனைப் பொறுத்தவரை இது ஒரு சாதாரணச் செயல். இந்தக் குறிப்பிட்ட இரவில்,…read more

நற்குணத்தால் என்ன நன்மை?

எத்தனை விதமான நிறங்களில் மேகங்கள் இருந்தாலும், வானம் திரும்ப நீல நிறத்திற்கே சென்று விடுகிறது. உங்களுடைய நற்குணத்தைக் கைவிட வேண்டாம்.

கனடாவில் ஒரு சில வாரங்களுக்கு முன்பு அறிவுள்ள, அமைதியாகப் பேசும் ஒரு இளம் பையன் என்னிடம் வந்து, நம்மில் பலருக்கு மிகவும் சம்பந்தம் உள்ள ஒரு கேள்வியைக் கேட்டான். அவன் தனது பியானோ வாசித்தலைச் சோதிக்கும் நிகழ்ச்சிக்குச் செல்ல வேண்டும் என்றும், அவனது தாயார் அவனை மற்ற மாணவர்களுக்குக் கைதட்ட வேண்டும் மற்றும் அவர்களை வாழ்த்த வேண்டும் என்று கூறுவதாகவும் சொன்னான். “நான் எப்போதும் அதைச் செய்கிறேன் சுவாமிஜி, ஆனால் எனக்கு யாரும் கை தட்டுவதில்லை” என்றான். “மற்றவர்க்கு நல்லதே நடக்கும் என்றும் வாழ்த்தச் சொல்கிறார். நான் எப்போதும் அவ்வாறே செய்கிறேன், ஆனால் எனக்கு யாரும் நல்லதே நடக்கும் என்று சொல்வதில்லை. என்ன பிரயோஜனம்? அவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. நான் ஏன் அவர்களைப் புகழ வேண்டும்?” என்றான். அவன் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளான் என்பதையும், அவனது கண்கள்…read more

கோபத்தைக் கடப்பது எப்படி

அடிவானத்தின் பின்னால் மறையும் கதிரவனைப் போல், உங்களது கோபத்தைக் கைவிடுங்கள். அதற்கான மூன்று வழிமுறைகள் இங்கே உள்ளன.

மூன்று வகையான கோபக்காரர்கள்

மண்ணால் ஆன அரண்மனை எவ்வளவு அழகானதானாலும் அது தற்காலிகமானது தான். அலைகள் அதை அழித்துக் கரைக்குத் தள்ளி விடும். நீங்கள் எதைப் பற்றிக் கொண்டிருக்கிறார்கள்?

முன் ஒரு காலத்தில் சில குழந்தைகள் ஒரு கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் மணலில் அரண்மனைகள் மற்றும் மற்ற அமைப்புகளை மும்முரமாகக் கட்டிக் கொண்டிருந்தார்கள். சிலரிடம் மற்றவர்களை விடச் சிறப்பான கரண்டிகள், வாளிகள், குவளைகள் மற்றும் பிற கருவிகள் இருந்தன. அவர்கள் தங்களது அரண்மனைகளைக் கட்ட பல மணி நேரம் செலவிட்டனர். அவர்களில் ஒருவன் இந்தக் கட்டிடங்கள் கட்டுவதில் ஆர்வம் இல்லாமல், கவனமாகப் பார்த்துக்கொண்டிருந்தான். பின்னர் அன்று மதியம், மற்றவர்கள் தங்களது அரண்மனைகளைக் கட்டி முடிக்கும் நிலையில், அவைகளை மிதித்து, ஒரே உதையில் அவைகளைத் தகர்க்கும் ஆசையை அவனால் அடக்கமுடியவில்லை. அந்த அரண்மனைகளில் ஒன்றை அவன் உதைத்துச் சிதைத்தான். மற்ற குழந்தைகள் ஒன்றாகச் சேர்ந்து அவனை பலமாக அடித்து, குத்தி, பிளாஸ்டிக் மண்வெட்டி கொண்டு அடித்து, அவன் மேல் மணலை வீசினார்கள். அது அவனது உடலில் காயங்களையும்,…read more

இரண்டு வகையான கோபம்

ஒரு அறையைச் சூடாக வைக்க உதவும் அதே நெருப்பால் வீட்டை எரிக்கவும் முடியும். தவறாகத் திருப்பப்பட்ட உணர்வுகளின் விளைவுகளே கோபம் ஆகும்.

என் முந்தைய இடுகையைத் தொடர்ந்து, இரண்டு வகையான கோபத்தைப் பற்றி இன்று நான் விரிவாக விளக்குவேன். கோபம் இயற்கையான ஒரு மனித உணர்வு ஆகும். எவரிடம் அன்பு, இரக்கம், கருணை ஆகிய உணர்வுகள் உள்ளனவோ அவர்களைச் சுற்றி கோபம், வெறுப்பு மற்றும் அவைகளது சுற்றமும் சூழ்ந்திருக்க முடியும். எனினும், கண்டிப்புடன் இருத்தல் என்பதற்குக் கோபமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எனவே, ஒழுக்கத்திற்கான ஒரு செயல் தேவையினால் செய்யப்படுகிறது, கோபத்தினால் அல்ல, என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? கோபமானது அதிகமான எதிர்மறை ஆற்றலை ஏற்படுத்துகிறது, அது உடனடியாக உங்களைப் பலவீனமாக ஆக்குகிறது, அனைத்திற்கும் மேலே, கோபம் மற்றும் ஒழுக்கம் ஆகிய இரண்டிற்கும் உள்ள அடிப்படை வித்தியாசம் என்னவென்றால், கோபம், எதிர்பாராமலும், திடீரென்றும், அநேகமாகக் கட்டுப்பாடற்றும் வருவதாகும். ஒரு முறை ஒரு இளைஞனும் அவனைச் சுற்றி உள்ளவர்களும்…read more

12345...