என்னிடம் உள்ளவை என் சாதனைகள் அல்ல,
நான் என்ன செய்கிறேன் எனபது என் அறிமுகம் அல்ல,
இவை ‘நான் யார்’ என்பதாகிறது.
ஒரு ஒன்றுமில்லாதவன்.

நான் பாடுகிறேன் நான் சிரிக்கிறேன்,
நான் ஆடுகிறேன் நான் கைத்தட்டுகிறேன்,
இந்த முடிவில்லா படைப்பில் ஒரு சிறு தூசி,
சிறிய பனி துளிக்குள் இருக்கும் ஒரு பரந்த கடல்,
இமாலயத்தின் ஒரு ஓடை,
ஒரு அசைவில்லாத மலை,

அது தான் நான்.

நீங்களும் அது தான்.

கருணை என்பதே என் மதம் மற்றும் அன்பே என் ஒரே தத்துவம்.

(ஸ்வாமிஜி தன்னைப் பற்றித் தானே செய்து கொண்ட அறிமுகத்தின் மொழிபெயர்ப்பு.)