தினசரி அடிப்படையில், நம்பிக்கையின்மை மற்றும் ஏமாற்றம், உதவியின்மை மற்றும் காலந்தாழ்த்தல் பற்றிய கதைகளை நான் கேட்கிறேன். மிகுந்த நேர்மையுணர்வுடன் ஒரு குறிப்பிட்ட வழியில் செல்ல விரும்புவதாகவும், ஆனால் எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும், மீண்டும் பழைய பழக்க வழக்கங்களுக்குப் போய்விடுவதாகவும் பலர் என்னிடம் கூறுகிறார்கள். ஏன் நாம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தோல்வி அடைகிறோம், அல்லது வெற்றிக்கான பாதை (சிறிய முயற்சிகளில்கூட) ஏன் தடைகள் மற்றும் தடங்கல்கள் மேல் போடப்பட்டுள்ளது? எளிய மற்றும் தெளிவான வகையில் உங்களுக்கான பதில் என்னிடம் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். ஆனால் முதலில், என் அடிப்படைத் தத்துவத்தை சிறப்பித்துக் காட்டும் ஒரு சிறிய கதை. ஒரு வசதி படைத்த விவசாயி சொந்தமாகத் தென்னை மரங்கள், நிறையப் பசுக்கள் மற்றும் ஒரு சிறிய கோழிப் பண்ணையும் வைத்திருந்தார். கடல் மீது எழும்பும் அற்புதமான சூரிய…read more