பெரும் கவனச் சிதறல்களுக்கான ஆயுதங்கள்

நமது உணர்ச்சி மற்றும் ஆன்மீக நல்வாழ்வில் சமூக ஊடகங்கள் சேதம் ஏற்படுத்தி உள்ளன என்பது பெரிய உண்மையாகும்.

கடந்த மாதம் நான் சிங்கப்பூரில் இருந்து தில்லிக்கு விமானத்தில் திரும்பி வந்து கொண்டிருந்தேன். அது 5 1/2 மணி நேரப் பயணமாகும். ஏறக்குறைய 12 வயதுக்குள் இருக்கும் ஒரு பையன் ஓரத்து இருக்கையில் அமர்ந்திருந்தான். அவனுக்கும் எனக்கும் இடையே வழிப்பாதை மட்டுமே இருந்தது. அவனை அடுத்து அவனுக்கு ஒரு சில ஆண்டுகள் மூத்த அவனது சகோதரி அமர்ந்திருந்தாள். அவர்கள் தான் கடைசியாக, விமானம் புறப்படுவதற்கு ஒரு சில வினாடிகள் முன் ஏறியவர்கள். விமானம் அடுத்த 10 நிமிடங்களில் அதன் ஓடு பாதையில் இருந்தது. நாங்கள் வான்வழிக்கு வந்தவுடன் அவன், அவனது தொலைப்பேசியை வெளியே எடுத்து அதில் ஒரு வீடியோ கேம் (காணொளி விளையாட்டு) விளையாடத் தொடங்கினான். ஒரு மணி நேரம் கழித்து, அவர்களது அன்னை அவர்களைப் பார்க்க அங்கு வந்தாள். அந்தச் சிறுவன் அவர்களுடன் இரண்டு வார்த்தைகள்…read more