ஓம் சுவாமி

கஷ்டத்திலிருந்து மகிழ்ச்சிக்கு

வாழ்க்கைப் பயணத்தில், மகிழ்ச்சி என்ற ரயிலுக்கு எந்த இலக்கும் இல்லை. வாழ்க்கையே சந்தோஷமாகும்.

சில நேரங்களில் [உண்மையில், மிகவும் அடிக்கடி], ஒற்றையாக இருப்பவர்களை நான் சந்திக்கிறேன். பொதுவாக இவர்கள், தங்கள் வாழ்க்கையைச் சேர்ந்து கழிக்கத் துணையாக ஒரு சரியான நபரைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கடந்த காலத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது இன்னும் சரியான ஒரு துணையைக் கண்டு பிடிக்கவில்லை. மாலையில் வீடு திரும்பும் போது காலியாக உள்ள அவர்களது வீட்டில் அவர்களுக்காக யாரும் காத்துக் கொண்டு இருப்பதில்லை. அவர்கள் அருகில் யாரும் இல்லாததால், தானாகவே எழுந்திருக்கிறார்கள். தனிமையும் மற்றும் முதுமையிலும் தனியாகவே இருந்து விடுவோமோ என்ற எண்ணமும் அவர்களை எப்போதும் வாட்டி வதைக்கின்றன. அவர்கள் விரும்பும் அனைத்தும், அவர்களது அன்பைக் காட்டவும் அவர்களை நேசிக்கவும் ஒருவர், ஆனால் அப்படி ஒருவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அவர்கள் என்னிடம் சொல்லுகிறார்கள். பின்னர், திருமணம் ஆனவர்களையும் நான் சந்திக்கிறேன். அவர்கள் தங்கள் குடும்பத்தை நேசிக்கிறார்கள்,…read more

எண்ணத்தில் தூய்மை

உங்கள் கவனம் அனைத்தும் ஒன்றின் மேலும், உங்கள் எண்ணம் தூய்மையுடனும் இருக்கும் போது, நறுமணம் உள்ள வெற்றிப் பூக்கள் இயற்கையாகவே மலர்கின்றன.

நான் என் தொழிலில் வெற்றி பெறுவேன் என்று என்னை ஆசீர்வதியுங்கள். நான் நிறையப் பணம் ஈட்டவேண்டும் ஆனால் அவை எனக்காக அல்ல! நான் மற்ற மக்களுக்கு உதவுவதற்காக செல்வத்தைச் சேர்க்க விரும்புகிறேன். ஒரு தொழிலை உருவாக்குவதோ அல்லது பணம் சம்பாதிப்பதோ, அதனால் நாங்கள் மற்றவர்களுக்கு உதவலாம் என்பது தான் ஒரே காரணம் அல்லது முதன்மையான காரணம் என்று மக்கள் சொல்ல நீங்கள் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? பல முறை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இதைக் கேட்கும் போதெல்லாம் எனக்கு உள்ளூர சிரிப்பு வருகிறது, ஏனெனில் நிலையான தொழில்கள் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் அமைக்கப்படுபவை அல்ல. உங்கள் பொருட்களை அல்லது சேவைகளை வாங்குகிற [அல்லது பயன்படுத்துகிற] மக்களின் வாழ்வை மதிப்புள்ளதாக ஆக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அமைக்கப்பட்டவை. இத்தகைய மதிப்பில் இருந்து நீங்கள் வருவாயை ஏற்படுத்திக் கொண்டு, பின்னர்…read more

1