ஓம் சுவாமி

நீங்கள் கொடுக்கும் போது…

நாம் மற்றவர்களுக்கு எதையாவது கொடுக்கும் போது எப்படி எதிர்ப்பார்புகளுடன் கொடுக்கிறோமோ, அதே போல் இயற்கையும் நம்மிடம் எதிர்பார்த்தால் என்னவாகும்?

நாம் மற்றவர்களுக்கு எதையாவது கொடுக்கும் போது, அடுத்தவர்களுக்கு நல்லது செய்ய நம்மால் முடியும் போது, எவ்வளவு சந்தோஷமாக உள்ளது என்று நீங்கள் உணர்ந்து இருக்கிறீர்களா? நீங்கள் கொடுப்பதை மற்றவர் அக்கறையுடன் ஏற்றுக் கொண்டாலும், ஏதாவது வழியில் அதற்கு ஏற்றவாறு கைமாறு செய்தாலும், சந்தோஷத்தின் அளவு இன்னும் அதிகமாகிறது. இதுவரை அனைத்தும் நன்றாக உள்ளது. ஆயினும், பல முறை நாம் செய்த நன்மைக்கு, எதிர்பார்க்கும் கைமாறு நமக்கு வருவதில்லை. ஒன்று, மற்ற நபர் நாம் அவருக்குச் செய்யும் நன்மையைப் பாராட்டுவது இல்லை, அதை மதிப்பதில்லை, அல்லது ஒருவேளை அவர்களுக்கு அதற்கு மேல் நல்ல விதத்தில் நடந்து கொள்ளத் தெரிவதில்லை. நீங்கள் அவர்களுக்குச் செய்யக் கடமைப்பட்டிருப்பதாக அவர்கள் நினைக்கின்ற போது, அது இன்னும் கூட மோசமாகிறது. உண்மையில் நமக்குக் கிடைக்க வேண்டியதை விட அதிகமான புகழ் கொடுக்கப்படும் போது நாம்…read more

கோபத்திலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ளல்

இங்கே, உங்கள் இதயத்தில் இருந்து எரிச்சல் மற்றும் கோபத்தின் உணர்வுகளை நீக்கிக் கொள்வதற்கான, புத்தரின் ஒரு அழகான சொற்பொழிவு.

இந்த ஒரு நபர் மட்டும் தொந்தரவு தரவில்லை என்றால், எனது வாழ்க்கை மிகவும் சரியானதாக இருக்கும். நான் கலக்கமடைவதற்கு எந்தவொரு காரணமும் இருக்காது. எதுவும் அல்லது யாரும் என்னைக் கோபமூட்ட முடியாது. இது போல் எவ்வளவு முறை நீங்கள் உணர்ந்து இருக்கிறீர்கள்? இது நாம் விரும்பும் ஒரு எண்ணமாகும். உண்மையில், இது சாத்தியமற்றது. ஏனெனில் இந்தப் பிரச்சனை முற்றிலும் மற்ற நபரினால் ஏற்படுவது இல்லை. நீங்கள் உங்களது வாழ்க்கையைப் பின் நோக்கிப் பார்த்தால், நீங்கள் செலவழித்த பல வருடங்களில் அல்லது தசாப்தங்களில் நீங்கள் கோபம் கொண்ட, எரிச்சல் அடைந்த அல்லது விரக்தி அடைந்த நேரங்களில் எல்லாம் யாரோ ஒருவரோ அல்லது ஒரு காரணமோ இருந்திருப்பது புரியும். இன்று நீங்கள் இந்த நபரால் கலக்கம் அடைகிறீர்கள் என்றால், நேற்று இதே போன்ற உணர்வுகளை வேறு யாரோ ஒருவரால் அனுபவித்து…read more

1