ஓம் சுவாமி

நற்குணத்தால் என்ன நன்மை?

எத்தனை விதமான நிறங்களில் மேகங்கள் இருந்தாலும், வானம் திரும்ப நீல நிறத்திற்கே சென்று விடுகிறது. உங்களுடைய நற்குணத்தைக் கைவிட வேண்டாம்.

கனடாவில் ஒரு சில வாரங்களுக்கு முன்பு அறிவுள்ள, அமைதியாகப் பேசும் ஒரு இளம் பையன் என்னிடம் வந்து, நம்மில் பலருக்கு மிகவும் சம்பந்தம் உள்ள ஒரு கேள்வியைக் கேட்டான். அவன் தனது பியானோ வாசித்தலைச் சோதிக்கும் நிகழ்ச்சிக்குச் செல்ல வேண்டும் என்றும், அவனது தாயார் அவனை மற்ற மாணவர்களுக்குக் கைதட்ட வேண்டும் மற்றும் அவர்களை வாழ்த்த வேண்டும் என்று கூறுவதாகவும் சொன்னான். “நான் எப்போதும் அதைச் செய்கிறேன் சுவாமிஜி, ஆனால் எனக்கு யாரும் கை தட்டுவதில்லை” என்றான். “மற்றவர்க்கு நல்லதே நடக்கும் என்றும் வாழ்த்தச் சொல்கிறார். நான் எப்போதும் அவ்வாறே செய்கிறேன், ஆனால் எனக்கு யாரும் நல்லதே நடக்கும் என்று சொல்வதில்லை. என்ன பிரயோஜனம்? அவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. நான் ஏன் அவர்களைப் புகழ வேண்டும்?” என்றான். அவன் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளான் என்பதையும், அவனது கண்கள்…read more

எப்படி ஈர்க்காமல் இருப்பது

முரண்பாடுகளையும், எதிர்மறைகளையும் முழுமையாகக் கொண்டது வாழ்க்கை. ஒளி மற்றும் இருள், பனி மற்றும் சூரிய ஒளி ஆகியவை அமைதியாக இணைந்தே இருக்கின்றன. கவனம் செலுத்தவும்.

ஒரு சில நாட்களுக்கு முன், ஒரு பெருநிறுவனத்தின் அதிகாரிகளின் வரிசையில் அடி மட்டத்திலுள்ள ஒரு தொழிலாளி, தன்னுடன் வேலை பார்ப்பவருடன் ஒரு இறுக்கமான சூழ்நிலையே நிலவுவதாக என்னிடம் கூறினார். “நான் எப்போதும் எதிர்மறையானவர்களையே ஈர்ப்பது போல் உள்ளது. யாருக்கும் என்னைப் பிடிக்கவில்லை,” என்று அவர் கூறினார். “ஆனால் பின்னர் ஒரு நாள், நான் வானொலியில் அழகான ஒன்றைக் கேட்டேன். அதில் சொன்னது – வேலை தானே, வருத்தம் ஏன்? இந்த ஒற்றை வரி என் முழுப் பார்வையையும் மாற்றி விட்டது. உண்மையில் மற்றவர்களுக்கு என்னைப் பிடித்திருக்கிறதா, இல்லையா என்று கவலைப்படுவதை நிறுத்தி விட்டேன். நான் என் வேலையை மட்டுமே செய்ய வேண்டும்.” என்று கூறினார். நான் அவரது ஞானத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டு, இந்த ஞானக் குறிப்பை மனத்தில் இருத்திக் கொண்டேன்: “வேலை தானே, வருத்தம் ஏன்?” உண்மை…read more

1