அருள் பற்றிய ஒரு கதை
தெய்வ அருளானது உங்களது மென்மையான இதயத்தைச் சிப்பியானது தனக்குள் மறைந்து குடியிருக்கும் உயிர்களைக் காப்பது போல் பாதுகாக்கிறது. இயற்கைக்கென்று ஒரு வழி உள்ளது.
ஒருநாள் நான், சுவாமி ராகவானந்தாவிடம், நான் பொதுவாக அவரை ரகு சுவாமி என்று அழைப்பேன்(நான் அறிந்த சீடர்களுள் மிகவும் விசுவாசமுள்ள சீடர், உத்வேகம் மற்றும் பற்றின்மையுடனானவர்), எனது வலைப்பதிவில் அவரது கதைகளுள் ஒன்றைப் பகிர்ந்து கொள்ள முடியுமா என்று கேட்டேன். நம்பிக்கை மற்றும் கருணை, எளிமை மற்றும் அறநெறி பற்றியதான அழகான ஒரு கதை. ஒரு பரந்த புன்னகையுடன் அவர் உடனடியாக ஒப்புக் கொண்டார். என்னுடைய வாழ்க்கைக் குறிப்பை (“இப் ட்ரூத் பி டோல்ட்” – If Truth Be Told – என்ற ஆங்கிலப் புத்தகம்) நீங்கள் படித்திருந்தால், உங்களுக்கு ஏற்கனவே ரகு சுவாமியைத் தெரிந்திருக்கும். நான் இமாலயக் காடுகளில் தியானம் செய்த போது என்னைக் கவனித்துக் கொண்ட பிரதீப் பிரம்மச்சாரிதான் இவர். கிட்டத்தட்ட 33 ஆண்டுகளுக்கு முன்பு ரகு சுவாமி, 7 வயதாக இருந்த…read more