ஓம் சுவாமி

நான் மகிழ்ச்சியாக இல்லை

உங்கள் கடந்த காலத்தைப் பற்றி முணுமுணுத்துக் கொண்டே இருப்பது, மகிழ்ச்சிக்கான மிகப்பெரிய தடைகளுள் ஒன்றாகும். நிகழ்காலத்தில் எந்தத் துயரமும் இல்லை.

பின்வரும் கேள்வியை யாரோ ஒருவர் மின்னஞ்சல் செய்திருந்தார். உண்மையில் அடிக்கடி இதே கேள்வியை என்னிடம் கேட்கிறார்கள். “என் உள் மனக் கொந்தளிப்பைக் குறைப்பதற்கு எனக்குச் சில ஆலோசனைகள் தேவை. நான் என் ஐம்பதுகளில் இருக்கிறேன் ஆனாலும் என் வாழ்வில் அமைதியை உணரவில்லை. வேலையில் நிலைத்து இருப்பதற்காக மற்றும் குடும்பத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காகப் போராடுவது என ஓடிஓடி உழைத்ததில் களைப்படைந்து சோர்வாக இருக்கிறேன். நான் விலைப்பட்டியலுக்குப் (பில்) பணம் செலுத்தும் ஒரு அடிமை ஆகி இருக்கிறேன்.” அனைத்துமே துயரத்தைக் கொடுக்கிறது என்ற புத்தரின் பார்வை முதலில் ஒரு நம்பிக்கையற்ற பார்வையாகத் தோன்றுகிறது, ஆனால் ஆழ்ந்து சிந்தித்தால், வாழ்வில் மிகுந்த அனுபவத்தைக் கண்டவர்களின் உண்மையும் இதை ஒத்தே இருக்கிறது. நான் பல மகிழ்ச்சியான மக்களைச் சந்திக்கிறேன். இருந்தாலும் பெரும்பாலும், மனஅழுத்தத்தில் உள்ளவர்கள் மற்றும் சோகமாக இருப்பவர்களைச் சந்திக்கிறேன். துன்பம் தானே…read more

பேரின்பத்தை அடைய ஒன்பது நிலைகள்

ஒரு கொந்தளிப்பான மற்றும் அமைதியற்ற மனதில் இருந்து நிரந்தரமான அமைதியான மனதை அடைய மகாமுத்ரா (Mahamudra) தியானத்தில் ஒன்பது நிலைகள் உள்ளன.

மகாமுத்ராவின் ஒன்பது நிலைகள், என் கடந்த இடுகையில் தெளிவுபடுத்தியுள்ள ஒன்பது கவன நிலைகளுக்கு ஒப்பானதாகும். நான் அதிகமாக ஆர்வமுள்ள யோகிகள் அல்லது தீவிரமாகத் தியானிப்பவர்களைச் சந்திக்கச் சந்திக்க, தியானம் பற்றிய எவ்வளவு பெரிய தவறான கருத்துகள் உள்ளன என்பதை நான் உணர்கிறேன். எனக்கு உண்மையில் வலி தருவது என்னவென்றால் பெரும்பாலான நேரங்களில் இது தேடுபவரின் தவற்றால் அல்ல. தவறு செய்பவர் ஆசிரியர் – குருவானவர். ஆர்வமுள்ள பெரும்பாலானவர்களை, எதையும் செய்து காட்ட முடியாத ஆசிரியர்களே வழி நடத்துகின்றனர். இந்த ஆசிரியர்கள் அவர்களே தியானத்தின் ஆழம் வரை சென்றதில்லை. ஆனால் சில தத்துவார்த்தங்களை நன்கு தெரிந்து கொண்டு, தனது இரண்டாந்தர அறிவை அடிப்படையாகக் கொண்டு மற்றவர்களுக்கு வழிகாட்டுகின்றனர். இன்று நான் சுருக்கமாக, அமைதிக்கான ஒன்பது நிலைகளைப் பற்றியும், நாம் இரண்டு வாரங்களுக்கு முன்பு எழுப்பிய “இறுதி நிலையை அடைய…read more

1