ஓம் சுவாமி

கவனத்தின் ஒன்பது நிலைகள்

மிக ஆழமான ஒரு மனநிலையை அடைய, கவனத்தை வளர்த்துக் கொள்வது இன்றியமையாததாகும். அது படிப்படியாக நடக்கக் கூடியதும், அளவிடக் கூடியதும் ஆகும்.

எனது கடந்த வாரப் பதிப்பிற்குப் பின் எனது மின்னஞ்சல் கேள்விகளால் நிரம்பியுள்ளது. பெரும்பாலான வாசகர்களுக்கு ஒரே மாதிரியான சவால்களே இருந்தன. மிகக் குறிப்பாக, அவர்களது மனம் தியானத்தின் போது அலைபாய்கிறது என்றும், அதைத் தியானிக்கும் பொருளின் மீது திரும்பக் கொண்டுவரப் போராட வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இரண்டாவது மிகவும் பொதுவான கேள்வி, எதைப் பற்றித் தியானிப்பது? எனது கடந்த இடுகையில், எதுவும் செய்யாமல் தற்போதைய தருணத்தில் இருப்பது பற்றி எழுதியிருந்தேன். “தற்போதைய தருணத்தில் இருந்து கொண்டு, எதுவும் செய்யாமல் இருப்பது எப்படி?” என்று கேட்டுள்ளனர். அதைப் படிப்படியாகப் பார்க்கலாம். இன்று நான் மகாமுத்ரா (Mahamudra) தியானத்தின் ஒன்பது நிலைகளைப் பற்றி எழுதத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் உங்களது கடந்த வாரக் கேள்விகளைப் பெற்ற பிறகு, மனதின் ஒன்பது நிலைகளை அதாவது கவனத்தின் ஒன்பது நிலைகளை உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று…read more

தியானத்தின் ஆறு கோட்பாடுகள்

திலோப்பா, அவரது தலைமைச் சீடருக்குத் தியானம் பற்றிய ஆறு குறுகிய மற்றும் ஆழ்ந்த அறிவுரைகளை வழங்கினார். தியானம் செய்யும் ஒவ்வொருவரும் அவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு சீடர் ஒரு முறை “தியானம் முடிந்தவுடன் நாம் ஏன் கடவுள்துதி செய்கிறோம்?” என்று அவரது குருவைக் கேட்டார். “நாம் அது முடிந்துவிட்டது என்று கடவுளுக்கு நன்றி செய்கிறோம்,” என்று குரு நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். இது ஒரு நகைச்சுவை என்றாலும், இந்தத் தியானமானது இவ்வாறாகத் தான் சில நேரங்களில் உணர முடிகிறது. நேர்மையாகவும் மற்றும் ஒழுக்கமாகவும் தியானிப்பவர்களைப் பொறுத்தவரை, தியானம் ஒரு நெடிய, கடினமான பயணமாகும். நீங்கள் உணர்வுகளின் மருக்களை நீக்கி, தழும்பேறிய எண்ணங்களை விட்டொழித்து, ஆசைகளின் அடுக்குகளை நீக்கி, உங்கள் மனத்தை ஒருநிலைப்படுத்த முயற்சிக்கிறீர்கள். அது எளிதல்ல. மனத்தைச் சமாதானப்படுத்தவும் மற்றும் முழுமையாக உறுதிப்படுத்தவும் பெரும் திறமை மற்றும் முயற்சி தேவைப்படுகிறது. தியானத்தின் பல்வேறு வடிவங்கள் மற்றும் பாணிகளைப் பரிசோதிப்பதில் என் வாழ்க்கையின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியை நான் முதலீடு செய்துள்ளேன். சில வழிகள் விரிவான…read more

எப்படி மன்னிப்புக் கேட்பது?

நீங்கள் உங்களது தவறுகளை மீண்டும் செய்யாமல் இருந்தாலும், எந்தச் சாக்குப்போக்கும் சொல்லாமல் இருந்தாலும் தான் மன்னிப்புக் கேட்பது உண்மையானதாகிறது.

நான் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் ஆஸ்திரேலியாவில் பல கோடி டாலர் மதிப்புள்ள ஊடக நிறுவனத்தின் மிகப்பெரிய தொழிலதிபர்கள் குழுமத்தின் முக்கியஸ்தனாக இருந்தேன். நான் ஒரு முக்கியமான இலாக்காவை நிர்வகிக்க ஆரம்பித்தேன். அப்பொழுது புதிய மென் பொருளின் ஒரு குறிப்பிட்ட பிழைபாடு எங்களுடைய நுகர்வோர்களுக்கும், வருவாய்த் துறையினருக்கும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. தொழில்நுட்பத்தில் முக்கிய பொறுப்பு நான் வகித்ததால் அப்பிரச்சனையைத் தீர்ப்பது என்னுடைய பொறுப்பாகிவிட்டது. நாங்கள் வெவ்வேறு நிறுவனங்களில் இருந்து தொழில் நுட்ப வல்லுநர்களை அழைத்தோம். யாராலும் பிரச்சனைக்கான காரணத்தை சுட்டிக் காட்ட முடியவில்லை. பல வாரங்கள் கழிந்துவிட்டன. ஆனால் எந்தவித முன்னேற்றமும் காணப்படவில்லை. ஒருநாள் மிகுந்த கவலையுடனும், சுய ஆராய்வுடனும் இரவு 1 மணிக்கு வீட்டை அடைந்தேன். நான் குளிக்க ஆரம்பித்தபோது திடீரென்று ஒரு யோசனை உதித்தது. அந்த பிரச்சனையைத் தீர்க்கும் ரகசியம் விளங்கியது. அலுவலகம் திரும்பும்…read more

1