சாக்ரடீஸின் மூன்று கேள்விகள்

உங்களின் அறிவின் தோற்றம் எதுவென்று எப்போதாவது கேள்வி கேட்டிருக்கிறீர்களா? “தாக்கமடைந்த மனப்பான்மை” என்ற கதவின் பின்னால் ஒரு புதிய உலகமே உங்களுக்காகக் காத்திருக்கிறது.

நான் பலமுறை “தாக்கமடைந்த மனப்பான்மை” (conditioning – கண்டிஷனிங்) இலிருந்து விதிபடுவதைப்பற்றிப் பேசுகிறேன். என்னுடைய ஒவ்வொரு வீடியோவின் முடிவிலும் “உங்களின் சொந்த உண்மையைக் கண்டறியுங்கள்” (Discover Your Own Truth – டிஸ்கவர் யுவர் ஓன் ட்ருத் ) என்ற வாக்கியம் இருக்கிறது. அது ஒன்று மட்டுமே உங்களை விடுவிக்கும் என்று அடிக்கடி சொல்கிறேன். ஆனால், “தாக்கமடைந்த மனப்பான்மை” என்றால் என்ன என்று அடிக்கடி கேட்கப்படுகிறேன்? நாம் சுய உண்மையைக் கண்டறிய வேண்டியதன் அவசியம் என்ன? என் மதம் அல்லது என் கடவுள் என்னை ஏன் விடுவிக்க முடியாது? இந்தக் கட்டுரையின் மூலம் நான் உங்களுக்கு உலகத்தை வேறு கோணத்தில் பார்க்க உதவி செய்ய முடியும் என்று எண்ணுகிறேன். எனக்கு எந்த மதம், தத்துவம், ஜாதி, பிரார்த்தனை அல்லது வழிபாட்டு முறை மீதும் எந்த ஆட்சேபனையும் இல்லை…read more