ஓம் சுவாமி

மூன்று மிக முக்கியமான கேள்விகள்

நீங்கள் இந்தக் கேள்விகளை உங்களையே கேட்டிருந்தால், உங்கள் வாழ்க்கையை ஒரு சிறிதளவு வித்தியாசமாக வாழ்ந்திருக்க முடியும். கதையைப் படிக்கவும்.

மிக முக்கியமான நபர் யார்? மிக முக்கியமான நேரம் எது? மிக முக்கியமான கர்மா எது? முன்னொரு காலத்தில் ஒரு அரசர் தன் மனதில் இந்த மூன்று கேள்விகளுடன் காலையில் கண் விழித்தார். அவர் அரசவையில் தனது அமைச்சர்களிடமும், சபையினர்களிடமும் இந்தக் கேள்விகளைக் கேட்டார். சிலர், ராஜா மிக முக்கிய நபர் என்றும், இறக்கும் தருவாய் மிக முக்கியமான நேரம் என்றும், மதத்திற்குச் செய்யும் சேவையே மிகவும் பயனுள்ள கர்மா என்றும் கூறினர். ஒருவருடைய குழந்தை அல்லது ஒருவருடைய பெற்றோர் முக்கியமானவர், பிறந்த நேரம் மிக முக்கியமான நேரம், தானம் மிக முக்கியமான கர்மா என்று பலரும் வெவ்வேறு பதில்களைக் கூறினார்கள். சிலர் கடவுள் மிக முக்கியமான நபர் என்றும், பலர் விவசாயி என்றும், சிலர் சிப்பாய் என்றும் இப்படியாகப் பலரும் பல விதமாகப் பதில் அளித்தனர்….read more

வாழ்க்கை ஒரு போராட்டம்

வாழ்க்கை என்பது உண்மையில் ஒரு போராட்டமா அல்லது அது ஒரு கண்ணோட்டமா? கதையைப் படிக்கவும்.

நான் ஒவ்வொரு மாதமும் இரண்டு முதல் மூன்று ஆயிரம் வரை மின்னஞ்சல்களைப் பார்க்கிறேன். அதில் தொண்ணூறு சதவிகிதம் ஒன்று அல்லது அதற்கு மேலும் பிரச்சனைகளுடன் போராடி வரும் மக்களுடையதாகும். அதில் சிலர் வாழ்க்கையில் போராடியும், எதிர்த்தும் என்ன செய்ய வேண்டும் என்பதறியாது தளர்ந்து முச்சந்தியில் இருப்பதாகச் சொல்கிறார்கள். இன்னும் சிலர் இயற்கை அவர்கள் மேல் இரக்கமற்றதாக இருப்பதாகக் கூறுகின்றார்கள். நினைவு தெரிந்த நாள் முதல் வாழ்க்கையே ஒரு போராட்டமாக உள்ளதாக நினைக்கின்றார்கள். ஆம், வாழ்க்கை என்பது கடினமானதாகவும், போராட்டமானதாகவும் இருக்கலாம். ஆனால் உண்மையில் அது வேறு எவருக்காவது மாறுபட்டதாக உள்ளதா? பணம் இல்லாதவர்கள் பணம் உள்ளவர்களுடைய வாழ்க்கை மிகவும் சுலபமானதாக எண்ணுகின்றார்கள். செல்வமுள்ளவர்களும், மன அழுத்தம் தரும் வணிகத்தைச் செய்பவர்களும், ஒன்பது முதல் ஐந்து மணி வரை வேலை பார்ப்பவர்களின் வாழ்க்கை நிம்மதியானது என்று நினைக்கின்றார்கள். ஆரோக்கியமானவர்கள்…read more

1