ஓம் சுவாமி

மன அழுத்தத்தைக் கையாளுதல்

ஒரு மனிதன் மனஅழுத்தம் அடைந்ததே இல்லை. அவரது அண்டை வீட்டுக்காரர்களை இது குழப்பமடைய வைத்தது. மேலும் அறிந்து கொள்ள கதையைப் படிக்கவும்.

நமது உலகம் சில நேரங்களில் சமாளிக்க முடியாத இடமாக இருக்கக்கூடும். நாம் அதைக் கொஞ்சம் சிக்கலானதாகவும், கொஞ்சம் விரைவானதாகவும் ஆக்கி விட்டோம். எல்லாம் நேற்றே செய்யப்பட வேண்டியதாகி விட்டது. நாட்கள், வாரங்கள் மற்றும் மாதங்களில் திறனை அளவிடுவது போதாது என்பதைப் போல், நாம் மணி, நிமிடங்கள், சில நொடிகளில் திறனை அளவிடத் தொடங்கி விட்டோம். இது ஏன் இப்படி இருக்க வேண்டும்? இது நேரடியாக நமது உடல் மற்றும் உணர்வுப்பூர்வமான நலனைப் பாதித்து மன அழுத்தத்தைக் கொடுத்துவிட்டது. இந்த உலகத்தைத் திடீரென்று மாற்ற நம்மிடம் எந்த விசைக்கருவியும் இல்லை. உண்மையில், நம்மை உடனடியாக மாற்றிக் கொள்ள அழுத்தக்கூடிய எந்தப் பொத்தானும் இங்கு இல்லை. ஆனால் உங்கள் வாழ்க்கை, உங்கள் பயணம், உங்கள் முன்னுரிமைகள் இவற்றின் மீதான உங்களுடைய பிரதிபலிப்பினால் உங்களுடைய சொந்த வேகத்தைத் தீர்மானிக்க முடியும். நீங்கள்…read more

உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?

நம்பிக்கை என்றால் என்ன? ஒரு ரோஜா எப்படிப் பூக்கிறது? கதையைப் படிக்கவும்.

நம்பிக்கைக்கு, அறிவியல் அல்லது நியாயத்தின் அடிப்படையில் ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? உங்களுக்கு உண்மையிலேயே நம்பிக்கை இருக்கிறதென்றால் பிறகு எதிர்காலத்தைப்பற்றிய கவலைகள் உங்களை எப்படி இன்னும் பிடித்திருக்கிறது? நீங்கள் உங்கள் நம்பிக்கையை உறுதியாக்க விரும்பினால் எல்லாத் தர்க்கத்தையும் ஒதுக்கி வைக்க வேண்டும் என்று தனிப்பட்ட முறையில், நான் நம்புகிறேன். நீங்கள் உங்கள் பகுத்தறிவு மனத்தை உறுதியாக்க விரும்பினால் நம்பிக்கையை ஒதுக்கி வைத்து விடுங்கள். நம்பிக்கையில் காரணத்தைத் தூண்ட முயற்சிக்கும் போது நாம் இரண்டையும் மாசு படுத்துகிறோம். நம்பிக்கை உள்ளது அவ்வளவு தான், கடவுள் இருக்கிறார் அவ்வளவு தான், இயற்கை உள்ளது அவ்வளவு தான், நம்பிக்கை உணர்வு உள்ளது அவ்வளவு தான். நம்பிக்கை என்று வரும் போது “ஏன்” என்ற கேள்வி பதில் அளிப்பதில்லை . நிச்சயமாக, நம்மால் விளக்கங்களையும், கோட்பாடுகளையும் பொருத்த முடியும் ஆனால் அவை ஒரு தற்காலிக…read more

1