எது உங்களைத் தூண்டுகிறது?

தூண்டப்படும் போது, உங்களது பகுத்தறிவுத் திறனை இழப்பது மிகவும் எளிதானது. ஆத்திரமூட்டலுக்கான எதிர்மறை, கவனத்துடன் இருத்தலாகும்.

‘எல்லாச் சூழ்நிலைகளிலும் நடுநிலைமையில் நிலைத்திருக்க முடியுமா, அப்படி இருக்க முடியுமானால் அதற்கான பாதை என்ன?’, என்று என்னை அடிக்கடி கேட்கிறார்கள். பலர் தியானம், யோகா, சிகிச்சைகள், ஆலோசனைகள் மற்றும் இந்த உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் முயற்சித்திருக்கிறார்கள், ஆனால் எந்தப் பெரிய பலனையும் அடையவில்லை, ஏன்?இந்தப் பிரச்சனையின் வேர் வரை உங்களைக் கொண்டு செல்ல என்னை அனுமதியுங்கள். நம் உணர்ச்சிகள் மற்றும் மறுமொழிகள் ஆகியவை அவற்றுக்கென்று ஒரு தன்னிச்சையான உணர்வைக் கொண்டிருக்கின்றன. நீங்கள் ஏற்கெனவே அறிந்திருக்கும் ஒன்றிற்கு, ஏதாவது ஒரு செயற்கையான பிரதிபலிப்பை நீங்கள் திட்டமிடலாம், ஆனால் நிச்சயமில்லாத ஏதோ ஒன்றில், வரக்கூடிய ஒவ்வொரு தருணத்திலும் ஒரு ஆச்சரியம், ஒரு அதிசயம் உள்ளது. உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகள் தான் அந்த ஆச்சரியத்திற்கான நமது பதில் ஆகும். நீங்கள் உங்களது உணர்ச்சிகளைத் திட்டமிட முடியாது. ஒரு நல்ல அல்லது மோசமான…read more