எது அழகு?

அழகின் அடிப்படையில் இணைப்பின் உணர்வு ஒன்று உள்ளது. எவற்றுடன் உங்களால் இணைந்து கொள்ள முடியுமோ, அதை நீங்கள் அழகாக உணர்கிறீர்கள்.

எது அழகு? கவர்ச்சிகரமாக, பார்க்க மனம் மகிழும்படியாக உள்ள ஒன்றா அல்லது அதற்கு மேலும் ஏதாவது உள்ளதா? எந்தச் சந்தேகமும் இல்லாமல், முதன்முதலில் பார்த்தவுடன் தோன்றும் உணர்வு என்று வரும் போது, வெளிப்புறத் தோற்றத்தைத் தான் உடனடியாகப் பதிவுக் குறியீடு செய்ய முடியும். நீங்கள் அழகான ஒரு பெண் அல்லது மனிதரைப் பார்த்தால், அவர்கள் கவர்ச்சி உடையவராகத் தெரிவது இயற்கை தான். நீங்கள் திருமணமானவரோ, சமூகத்தில் அல்லது மதத்தில் உங்களது நிலைமையோ இவற்றைப்பற்றிப் பொருட்படுத்தாமல், செயற்கையாக அவர்களின் வெளிப்புற அழகை மறுக்க முடியாது. என்னைக் கேட்டால் அவ்வாறு நீங்கள் செய்தால், அது மிகவும் பரிதாபமானதாகும். வெளிப்புற அழகு அவ்வளவு தவிர்க்கமுடியாதது என்றால், நட்சத்திரங்கள், மேதைகள் மற்றும் செல்வாக்கு உரிய மக்களின் உறவுகளில் இவ்வளவு பிளவுகள் ஏன் ஏற்படுகிறது? அழகைப் பற்றிய விளக்கம், கோட்பாடு மற்றும் கருத்துக்களைப் பற்றிப்…read more