ஓம் சுவாமி

ஒரு குருவிடம் சரணடைதல்

ஏற்கனவே முழுமையாக உள்ள ஒரு கோப்பையை எப்படி நீங்கள் நிரப்ப முடியும்? நீங்கள் அதை ஏற்கனவே கண்டுபிடித்து விட்டதாக நம்பினால், யாரால் உங்களுக்கு உதவ முடியும்?

கிழக்கத்திய சிந்தனைகளை விவரிக்கும் ஆன்மீக மற்றும் மத நூல்களில் சரணடைதல் மற்றும் கீழ்ப்படிதல் பற்றியதான குரு-சிஷ்யர் கதைகள் நிறைய உள்ளன. ஆசிரமம் வருபவர்கள் மற்றும் எனக்கு எழுதும் பலர், ஒருவரின் பாதையில் ஒரு குருவின் பங்கு பற்றி அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர். சரணடைவது அவசியமா என்று அவர்கள் என்னிடம் கேட்கிறார்கள். மேலும், நிறையப் பேர் எந்த ஒரு குருவிடமும் பூரண சரணாகதி அடையும் முயற்சியில் தங்களுக்குப் பிரச்சனைகள் இருப்பதாக ஏற்றுக் கொள்கிறார்கள். முன்பு எழுதிய சரணாகதியைப் பற்றிய எனது பதிப்பின் தொடர்ச்சியாக, எனது எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். சரியான குருவின் முக்கியத்துவத்தைப் பற்றி பல்வேறு நூல்களில் ஆயிரக்கணக்கான மேற்கோள்கள் உள்ளன. இது உண்மையிலேயே மிக முக்கியமானதா? பதில் என்னவென்றால் அது உங்களின் தேவையைப் பொறுத்ததாகும். உங்களுக்கு வேதம் மற்றும் புத்தகங்களின் அடிப்படையில் சரியான ஓர் பாதையைச் சுட்டிக்…read more

வரையறுக்கப்பட்ட ஒழுக்கம்

ஒழுக்கம் பூரணமானதா? நீங்கள் ஐவரைக் காப்பாற்ற ஒருவரைக் கொல்வீர்களா? தள்ளுவண்டியைப் பற்றிய சிந்தனைச் சோதனையை வாசியுங்கள்.

அறநெறியைப் பற்றிய கேள்விகளை என்னிடம் அடிக்கடி கேட்கிறார்கள். மக்கள் இது சரியா அல்லது அது தவறா, அது நல்லதா அல்லது இது கெட்டதா என்றும் சில குறிப்பிட்ட செயல்கள் தார்மீகமானதா மற்றவை முறைகேடானதா என்றும் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறார்கள். எது நல்லது மற்றும் எது மோசமானது? நான் உங்களிடம் கேட்கிறேன் – தார்மீகமானது அல்லது முறைகேடானது என்று எப்படி நாம் வித்தியாசப்படுத்துகிறோம்? இது போன்ற கேள்விகளைக் கேட்பவர்கள் பெரும்பாலும் அறநெறியைப் பற்றிய வலுவான கருத்துக்களைக் கொண்டிருப்பார்கள். இது மோசமானதல்ல. அவர்கள் அதைப்பற்றி மிகத் தெளிவாக இருக்கிறார்கள் என்று அர்த்தம். இது அவர்களின் கருத்துக்கள் ஆனாலும், பெரும்பாலும் அவர்களுடைய சொந்த கருத்துக்களாக இருப்பதில்லை. இந்தச் சித்தாந்தங்கள் அவர்களுக்கு மற்றவர்களிடமிருந்து கொடுக்கப்பட்டவையாகும். ஒருவர் கண்டுபிடித்ததை பின்னால் வந்த ஒவ்வொரு தலைமுறையும் நம்ப முனைகின்றது. நீங்கள் பிரதிபலிக்க ஒரு கணம் எடுத்துக்…read more

1