விரிசல் பானை

நாம் நம்மிடமே நேர்மையாக இருக்கும் பொழுது நமது பலவீனமே நமது வலிமையாகிறது. கதையைப் படிக்கவும்.

சுய முன்னேற்றம் என்பது ஒரு முடிவற்ற முயற்சியா என்றும் நாம் வாழ் நாள் முழுவதும் முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டுமா என்றும் யாரோ ஒருவர் எனக்குக் கடிதம் எழுதிக் கேட்டிருந்தார். நாம் நமது தவறுகளைக் கண்டுபிடிப்பதையே நம் வாழ் நாள் முழுவதும் செய்து கொண்டிருந்தால் உண்மையில் எப்பொழுது வாழ்க்கையை அனுபவிப்பது என்பதை மறைமுகமாகக் கேட்டிருந்தார். வாழ்க்கை என்பது இழுபறியானதா? நாம் எப்படி நம்மை முன்னேற்றிக் கொள்வது என்று தொடர்ந்து ஆய்வு செய்து கொண்டே இருக்க வேண்டுமா? யோசித்துப் பார்த்தால்,  இது ஒரு அழகான கேள்வி. மற்றவர்கள் பூரணத்துவத்துவமானது என்று எண்ணும் எல்லைக்குள் உங்களை நீங்கள் பொருத்திக் கொள்ள வேண்டும் என்று நான் தனிப்பட்ட முறையில் நம்பிக்கை கொள்ளவில்லை. ஆனால் பூரணத்துவத்திற்கான இலக்கை எட்ட முயற்சிப்பது என்பது அவரவரின் தனிப்பட்ட விருப்பம் மற்றும் அவரவரின் தனிப்பட்ட உரிமை…read more