ஓம் சுவாமி

பித்துப் பிடித்த உலகம்

காட்டிலுள்ள மரங்களைப் பார்க்க வேண்டுமானால், மரங்களுக்கு மேல் சென்று வானத்திலிருந்து அல்லது காட்டிற்கு வெளியிலிருந்து பார்க்க வேண்டும். அப்பொழுது உண்மை மிகப் பிரகாசமாக ஜொலிக்கும்.

இந்த உலகில் வாழ்வது உங்களுக்கு எப்படி இருக்கிறது? கடினமானதாகவா, சரியானதாகவா, உத்தமமானதாகவா அல்லது தகுதியானதாகவா? உங்களுக்கு இதைப்பற்றிச் சிந்திக்க சந்தர்ப்பம் கிடைக்காமலும் இருந்திருக்கலாம். இந்த உலகம் பைத்தியக்காரத்தனமானது. சில சமயம் பைத்தியத்தின் எல்லைவரை அழகாகத் தோன்றுகிறது அல்லது அழகின் எல்லைவரை பைத்தியக்காரத்தனமாகத் தோன்றுகிறது. பித்துப் பிடித்த உலகமாகவே இருந்து விடுகிறது. அவ்வாறு இருப்பதே அதைத் தனித்தன்மை வாய்ந்ததாகவும், பரிணாம வளர்ச்சி அடைவதாகவும், அழகானதாகவும் ஆக்குகிறது. இது தவிர்க்க முடியாததாகவும், அவசியமானதாகவும் தோன்றுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், இந்தப் பைத்தியக்காரத்தனத்தின் உச்சக்கட்டமே அதன் அங்கமாக இருக்கும் ஒவ்வொருவரிடத்திலும் ஆழமாக மறைந்திருப்பதாகும். முன்னொரு காலத்தில் ஒரு அரசர் இருந்தார். அரச குல வழக்கப்படி புத்தாண்டு ஆரம்பத்தில் ஆஸ்தான ஜோதிடரிடம் பலன் அறிய விரும்பினார். ஜோதிடரும் அட்டவணைகளைப் பரிசோதித்துத் தன் கவலையை வெளிப்படுத்தினார். வரும் ஆண்டு இடையூறு விளைவிக்கும் ஆண்டாக இருக்கும்…read more

பிரச்சனையா அல்லது இடைஞ்சலா

வாழ்க்கை பல்வேறு நிறங்களின் ஒரு தொகுப்பு ஆகும்; கலவையை அனுபவிக்கவும். அனைத்தும் வெள்ளையாகவோ அல்லது அனைத்தும் கருப்பாகவோ நீங்கள் பெற முடியாது.

சத்தியத்தைத் தேடும் ஒரு மனிதர், ஒரு முனிவர்களின் மடாலயத்திற்கு வந்து சேர்ந்தார். அவர் குருவின் முன் விழுந்து வணங்கி, தஞ்சம் கோரினார். குரு அவரைச் சீடராக்கிக் கொள்ள இசைவதாகவும், ஆனால் சீடர் கடைப்பிடிக்க வேண்டிய சில கட்டுப்பாடுகள் அங்கு இருப்பதாகவும் கூறினார். “நீங்கள் மௌனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், ஆகையால், நீங்கள் ஒவ்வொரு பன்னிரண்டு வருஷத்திற்கும் ஒருமுறை தான் பேசுவதற்கு அனுமதிக்கப்படுவீர்கள், அதுவும் ஐந்து வார்த்தைகளுக்கு மேல் இல்லாத ஒரு வாக்கியம் மட்டுமே,” என்று குரு கூறினார்.சீடர் உடனடியாக ஒப்புக்கொண்டார். பன்னிரண்டு ஆண்டுகளாக அவர் தியானம் செய்ய முயன்றார், பேசுவதற்கான வாய்ப்புக்காக ஆவலுடன் காத்திருந்தார்.பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து கிடைத்த முதல் வாய்ப்பில் தனது குருவிடம், “படுக்கை மிகவும் கடினமாக உள்ளது,” என்று சீடர் கூறினார்.“ம் …” என்று குரு முணுமுணுத்தார்.இன்னுமொரு பன்னிரண்டு ஆண்டுகள் மௌனத்திற்குப்…read more

1