ஓம் சுவாமி

குளிரில் அதிகம் வலிக்கிறது

மென்மையான பனியை குளிரானது கடினமான, உடையக்கூடிய, குளிர்ச்சியான பனிக்கட்டியாக மாற்றுகிறது. நீங்கள் உள்ளே விறைத்திருக்கும் போது வலி அதிகமாகிறது, அதிகம் சிதையக் கூடியவராகிறீர்கள்.

ஒரு சமயம் ஒரு ஆராய்ச்சியாளர் இருந்தார். அவர் ஒரு மடத்தில் வாழ்ந்து வந்தார். அவரிடம் புத்தகத்திலிருந்து கிடைத்த அறிவுச் செல்வம் இருந்தது. நூல் மற்றும் மத விஷயங்களில் எந்த விவாதத்திலும் அவரை எதிர்த்து யாரும் வெற்றி பெற்றதில்லை. அவர் கடவுளிடத்தில் பிடிவாதமான அன்புடனும், சுய உணர்தலுடனும், பல்வேறு மத நூல்களைப் படிப்பதில் தனது முழு நேரத்தையும் செலவழித்தார். அவர் அலட்சியமான மற்றும் மேன்மையான உணர்வுடன் வாழ்ந்து வந்தார். அவருக்கு எல்லாமே கடவுள், தியானம் மற்றும் தன்னை உணர்தல் பற்றியதாகவே இருந்தது. அவர் சம்ப்ரதாய சடங்குகளைப் பிழையில்லாமல் நிறைவேற்றுவார். யாராவது பசியால் தவித்தாலும் அல்லது யாருக்காவது ஒரு சிறிய உதவித் தேவைப்பட்டாலும் அவர் அதை வழங்க மாட்டார். எது பற்றியும் அவரால் கவலைப்பட முடியவில்லை என்றும் தனது முக்திக்குத் தான் முன்னுரிமை கொடுப்பதாகவும் அவர் உணர்ந்தார். அவர் நன்கு…read more

நீங்கள் உங்களுடன் சகஜமாக இருக்கிறீர்களா?

ஒரு இலை, அதன் மூலத்தில் இருந்து துண்டிக்கப்பட்ட பின், காய்ந்து விரைவாகச் சிதைவு அடையத் தொடங்குகிறது. எல்லையற்ற மகிழ்ச்சி மற்றும் பேரின்பத்திற்குத் தொடர்ந்து இணைந்திருக்கவும்.

இந்த உலகத்தில் நாம் வாழும் வாழ்க்கையின் பெரும்பாலான விஷயங்கள் அனிச்சையாக எந்திரங்களைப் போல் இயங்குகின்றன. மக்கள் பிறக்கிறார்கள், வளர்கிறார்கள், கல்வியைப் பெறுகிறார்கள், வேலையை ஏற்கிறார்கள், திருமணம் செய்து கொள்கிறார்கள், குழந்தைகளைப் பெறுகிறார்கள், அவர்களையும் மற்றும் தங்களையும் பராமரித்துக் கொள்கிறார்கள், முதுமையை அடைகிறார்கள், பின் இறந்து போகிறார்கள். வெளியே செல்வது, திரைப்படங்கள் பார்ப்பது, இசையைக் கேட்பது மற்றும் மக்களுடன் பழகுவது என்று பெரும்பாலான மக்கள் ஏன் இவ்வாறு அனுபவிக்கிறார்கள் என்று நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா? பெரிய அளவிலான மக்களின் சேர்க்கை, கூட்டங்கள், கச்சேரிகளுக்குச் செல்வது முதலானவற்றில் ஏன் பலர் மகிழ்கிறார்கள்? சமூகம் மற்றும் பரிணாமம், தங்கள் மகிழ்ச்சியை வெளியே நாட மக்களைப் பெரிதும் பக்குவப்படுத்தி இருக்கிறது. மகிழ்ச்சிக்கான இத்தகைய வெளிப்புற நோக்கத்தால், உண்மையில் நீங்கள் யார் என்பதற்கும், நீங்கள் எப்படிப்பட்டவர் என்று காட்டிக் கொள்ள முனைகிறீர்கள் என்பதற்கும் இடையேயான…read more

1