ஓம் சுவாமி

கோபத்தைக் கடப்பது எப்படி

அடிவானத்தின் பின்னால் மறையும் கதிரவனைப் போல், உங்களது கோபத்தைக் கைவிடுங்கள். அதற்கான மூன்று வழிமுறைகள் இங்கே உள்ளன.

இன்று நான் கோபத்தை எப்படிக் கடப்பது என்பதைப் பற்றிய ஒரு முக்கியமான இடுகையை உங்களுக்குத் தருகிறேன். ஒரு முதன்மையான முறை மற்றும் சில துணைச் செயல்களின் உதவியால் நீங்கள் கோபத்தை வெல்ல முடியும். நான் அவற்றைக் கூறு முன் ஒரு சிறிய கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஒரு சீடர் ஒரு முறைத் தன்னையறிந்த ஒரு குருவை அணுகினார். அவர் பற்றுதலற்ற ஆழ்நிலை, அமைதி நிலை, வேறுவிதமாகச் சொல்ல வேண்டுமானால் சமாதி நிலையை எவ்வாறு அடைய வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பினார். “நீங்கள் சோர்வாக இருக்கும் போது தூங்குங்கள் மற்றும் பசியாக இருக்கும் போது சாப்பிடுங்கள். பெரும்பாலும் இதுவே தேவையானது,” என்று குரு கூறினார். “எப்படியானாலும் எல்லோரும் இதைத்தான் செய்கிறார்கள் அல்லவா?” என்று சீடர் கேட்டார். “அவர்கள் அவ்வாறு செய்ய வேண்டும் என்றே விரும்புகிறேன். தூங்க…read more

மூன்று வகையான கோபக்காரர்கள்

மண்ணால் ஆன அரண்மனை எவ்வளவு அழகானதானாலும் அது தற்காலிகமானது தான். அலைகள் அதை அழித்துக் கரைக்குத் தள்ளி விடும். நீங்கள் எதைப் பற்றிக் கொண்டிருக்கிறார்கள்?

முன் ஒரு காலத்தில் சில குழந்தைகள் ஒரு கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் மணலில் அரண்மனைகள் மற்றும் மற்ற அமைப்புகளை மும்முரமாகக் கட்டிக் கொண்டிருந்தார்கள். சிலரிடம் மற்றவர்களை விடச் சிறப்பான கரண்டிகள், வாளிகள், குவளைகள் மற்றும் பிற கருவிகள் இருந்தன. அவர்கள் தங்களது அரண்மனைகளைக் கட்ட பல மணி நேரம் செலவிட்டனர். அவர்களில் ஒருவன் இந்தக் கட்டிடங்கள் கட்டுவதில் ஆர்வம் இல்லாமல், கவனமாகப் பார்த்துக்கொண்டிருந்தான். பின்னர் அன்று மதியம், மற்றவர்கள் தங்களது அரண்மனைகளைக் கட்டி முடிக்கும் நிலையில், அவற்றை மிதித்து, ஒரே உதையில் அவற்றைத் தகர்க்கும் ஆசையை அவனால் அடக்கமுடியவில்லை. அந்த அரண்மனைகளில் ஒன்றை அவன் உதைத்துச் சிதைத்தான். மற்ற குழந்தைகள் ஒன்றாகச் சேர்ந்து அவனைப் பலமாக அடித்து, குத்தி, பிளாஸ்டிக் மண்வெட்டி கொண்டு அடித்து, அவன் மேல் மணலை வீசினார்கள். அது அவனது உடலில் காயங்களையும்,…read more

இரண்டு வகையான கோபம்

ஒரு அறையைச் சூடாக வைக்க உதவும் அதே நெருப்பால் வீட்டை எரிக்கவும் முடியும். தவறாகத் திருப்பப்பட்ட உணர்வுகளின் விளைவுகளே கோபம் ஆகும்.

என் முந்தைய இடுகையைத் தொடர்ந்து, இரண்டு வகையான கோபத்தைப் பற்றி இன்று நான் விரிவாக விளக்குவேன். கோபம் இயற்கையான ஒரு மனித உணர்வு ஆகும். எவரிடம் அன்பு, இரக்கம், கருணை ஆகிய உணர்வுகள் உள்ளனவோ அவர்களைச் சுற்றி கோபம், வெறுப்பு மற்றும் அவைகளது சுற்றமும் சூழ்ந்திருக்க முடியும். எனினும், கண்டிப்புடன் இருத்தல் என்பதற்குக் கோபமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எனவே, ஒழுக்கத்திற்கான ஒரு செயல் தேவையினால் செய்யப்படுகிறது, கோபத்தினால் அல்ல, என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? கோபமானது அதிகமான எதிர்மறை ஆற்றலை ஏற்படுத்துகிறது, அது உடனடியாக உங்களைப் பலவீனமாக ஆக்குகிறது, அனைத்திற்கும் மேலே, கோபம் மற்றும் ஒழுக்கம் ஆகிய இரண்டிற்கும் உள்ள அடிப்படை வித்தியாசம் என்னவென்றால், கோபம், எதிர்பாராமலும், திடீரென்றும், அநேகமாகக் கட்டுப்பாடற்றும் வருவதாகும். ஒரு முறை ஒரு இளைஞனும் அவனைச் சுற்றி உள்ளவர்களும்…read more

மக்கள் கோபத்தில் கத்துவது ஏன்?

கோபம் உங்களது கொதிநிலைப் புள்ளியின் குறியீடு. எவ்வளவு சீக்கிரம் நீங்கள் கொதிநிலைக்கு வருகிறீர்கள் என்பது, நீங்கள் எந்தத் திரவத்தால் ஆனவர் மற்றும் அதன் அடியில் இருக்கும் வெப்பத்தின் அளவைச் சார்ந்திருக்கிறது.

கோபம் என்பது அன்பின் மறு பக்கமா? உண்மையில் இல்லை. இது ஏற்பின் மறுபக்கம், அமைதியின் எதிர்மறை. நீங்கள் உங்களுடனேயே மனதில் சமாதானமில்லாமல் இருக்கும் போது தான் கோபப்படுகிறீர்கள். சிலுவையில் இருந்த போதும் கூடக் கிறிஸ்து கோபம் அடையவில்லை, புத்தர் மீது காறி உமிழ்ந்த போதும் அவர் கோபப்படவில்லை. சீக்கியர்களின் ஐந்தாம் குருவான குரு அர்ஜன் தேவ், சூடான தட்டின் மீது உட்கார வைக்கப்பட்டுக் கொதிக்கும் மணல் அவரது உடல் மீது கொட்டப் பட்டது. அப்பொழுதும் அவர் கோபப்படவில்லை. இவர்களை இந்த வேதனையில் உட்படுத்தப்பட்டது, சரி தான் என்றோ அல்லது எப்படியோ மிகப் பொருத்தமானது தான் என்றோ அர்த்தமா? நிச்சயமாக இல்லை. மிகச்சிறந்த துறவிகளில் பலர் கோபத்தைத் தவிர்த்து, எல்லாவற்றிற்கும் மேலே அமைதியைத் தேர்வு செய்ததில் ஏதோ ஒரு காரணம் இருந்திருக்க வேண்டும். மற்ற நபரை அல்லது அவரது…read more

உங்களையே மன்னியுங்கள்

நீங்கள் பாரத்தின் மேல் சவாரி செய்கிறீர்களா அல்லது அதைச் சுமந்து செல்கிறீர்களா? எந்த வழியானாலும் அதை விட்டு விடுங்கள். அமைதி மற்றும் பேரின்பம் அடைய உங்களையே மன்னியுங்கள்.

மன்னிக்கும் தன்மையைப் பற்றி நிறைய எழுதப்பட்டுள்ளது. ஒரு தெய்வீக குணமாக இது கருதப்படுகிறது. எனக்குத் தெரிந்தவரை, உலகின் அனைத்து மதங்களும் இதை ஊக்குவிக்கின்றன. மன்னிப்பது பெரும்பாலும் மிகப் புனிதமான செயலாகும். உங்கள் சுமையைக் குறைத்து உங்களை அது லேசாக ஆக்குகிறது. ஆனாலும் அது எப்போதும் எளிதானதல்ல. என் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு முன், ஒரு கதையைச் சொல்ல என்னை அனுமதியுங்கள். ஒரு மடத்தில் ஒருமுறை மடாதிபதி மன்னிப்பு பற்றிப் போதித்துக் கொண்டிருந்தார். ஒரு சில சீடர்கள் விட்டு விடுவது மிகச் சிறந்த செயல்தான் ஆனாலும் அது மிகக் கடினமானது என்று வாதிட்டனர். குறிப்பாக அவர்களின் தியான நிலைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றால், சில உணர்வுகளை நினைவில் பிடித்து வைத்திருப்பதால் என்ன தீங்கு நேரும் என்று அவர்கள் ஆச்சரியப்பட்டனர். மடாதிபதி பொறுமையுடன் அனைத்தையும் கேட்டார். ஒரு கையில்…read more

12