ஓம் சுவாமி

கவனச்சிதைவுகளைக் கடப்பது எப்படி?

கவனச்சிதைவுக்கு இரையாகும் முன்பு, உங்களைக் கேட்டுக்கொள்ளுங்கள்: இது என் சிறந்த நடவடிக்கையா?

நான் பெறும் ஒரு பொதுவான கேள்வி, மக்களின் உறுதி மொழி, அவர்களுடைய சபதம், அவர்களது இலக்கை அடைய இறுதி வரை உழைத்தல் ஆகியவற்றை நிறைவேற்ற முடியாத, இயலாமையையே சுற்றி வருகிறது. அவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள், அவர்களுக்கு ஞானம், வளங்கள், திறன்கள் இருக்கின்றன, இருந்தும் கவனச்சிதறல்கள் அவர்களின் சக்தியை ஒடுக்க, அவர்கள் அனுமதிக்கிறார்கள். இத்தகைய கவனச்சிதறல்கள், உணர்வுகளின் ஒரு பெரிய அலை எழும்பக் காரணமாகின்றன. ஆசைகள் ஆகிய சுனாமி, அவர்களது பாதையிலேயே தொடரும் மற்றும் நிலையாக நிற்கும் தீர்மானத்தை உலுக்கி, அவர்களின் வலிமையை நசுக்கி விடுகின்றன. யோக மற்றும் வேத நூல்கள் விக்‌ஷிப்ததா (vikshiptata), கவனச்சிதறல்கள், மற்றும் அவை எப்படிப் பெரிய தடைகளாக இருக்கின்றன என்பதைப் பற்றிப் பெரும் அளவில் பேசுகின்றன. அவையே வெற்றி மற்றும் தோல்வி, ஜெயித்தல் மற்றும் இழத்தலின் இடையே உள்ள வித்தியாசத்தின் காரணமாகும். கவனச்சிதறல்கள் மற்றும்…read more

சுய சந்தேகத்தைச் சமாளிப்பது எப்படி

குழிப்பந்தாட்டத்தில் - ஒரு போகியா அல்லது பேர்டியா பதுங்கு குழியா அல்லது வாய்ப்புக்களின் ஒரு கடலா - நீங்கள் விளையாடாத வரை இவற்றில் எது என்று உங்களுக்குத் தெரியாது. உங்களுடைய பயம் என்ன?

சுய சந்தேகமானது, பெரும்பாலானவர்களுக்குச் சில சமயமும், சிலருக்குப் பெரும்பாலான சமயமும் இருக்கிறது. இது பயத்தின் துணைத் தயாரிப்பு ஆகும் – தோல்வியின் பயம், இழப்பின் பயம், சாதனைகளைச் செய்ய முடியாதோ என்ற பயம். நீங்கள் எப்போதும் இதை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. சில நேரங்களில், அது ஒரு நியாயமான முடிவு, ஒரு தர்க்கரீதியான கட்டுமானம், ஒரு சரியான மதிப்பீட்டிலிருந்து வெளிப்படுகிறது. இது ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு ஏற்பட்ட மனத்தின் ஒரு நிலையாக இருக்கலாம். உங்கள் பயத்தைப் புறக்கணிப்பதால், அது மறைந்து விடுவதில்லை. தவறான உறுதிப்பாடு தோல்விக்கான சாத்தியத்தை அகற்றாது, மற்றும் உங்கள் முயற்சியில் ஏற்படும் வெற்றிக்கான பற்றாக்குறை ஆழ்ந்த பயம் மற்றும் அதிகமான சுய-சந்தேகத்திற்கு வழிவகுக்கும். எனவே, சுய-சந்தேகத்திற்கான காரணம் என்ன, அதற்காக நீங்கள் என்ன செய்ய முடியும்? தொடர்ந்து படியுங்கள். உங்கள் பயத்தை வெல்வதற்கான வழியும்,…read more

1