ஓம் சுவாமி

சகிப்புத் தன்மையை நடைமுறைப்படுத்துதல்

ஒரு மரத்தின் மீது நீங்கள் கல் எறியும் போது, அது கல்லை நிராகரிப்பது மட்டுமின்றிப் பதிலுக்கு நமக்கு ஒரு பழமும் கொடுக்கிறது. உணர்ச்சிக் கற்களை வைத்துக் கொள்ள வேண்டாம்.

நான் சகிப்புத்தன்மை பற்றி முந்தைய கட்டுரையில் சுருக்கமாகச் சொல்லியிருந்தேன். இன்று, நான் சகிப்புத்தன்மையை எவ்வாறு நடைமுறைப் படுத்துவது என்று தெளிவுபடுத்துகிறேன். இதை நீங்கள் கடைப்பிடித்து உங்களை உணர்வுப்பூர்வமாக மாற்றிக் கொள்ள முடியும். உணர்வுப்பூர்வமான சுமை இல்லாதவர்கள், பேரின்பமான மற்றும் அமைதியான நிலையில் எளிதாக இருக்க முடிகிறது. அடித்தளத்திலுள்ள தத்துவத்தை மறுபடி வலியுறுத்த விரும்புகிறேன். இந்த உலகத்தில் இரண்டு வகையான உணர்வுகள் மட்டுமே உள்ளன. அவை நேர்மறை மற்றும் எதிர்மறை ஆகும். நேர்மறை உங்களை வலுவாகவும், உயர்வாகவும், சந்தோஷமாகவும், எதிர்மறை உங்களை அதற்கு எதிர்மாறாகவும் உணர வைக்கிறது. உணர்ச்சிகள் உங்களின் முகமூடி இல்லாத இயற்கையான நிலையை, மற்றவர்களுக்கு மட்டுமில்லை, உங்களுக்குமே எடுத்துக்காட்டுகிறது. ஒருவருக்கு எண்ணங்கள் உள்ளவரை, உணர்ச்சிகளும் இருந்து கொண்டே இருக்கும். உங்களின் உணர்ச்சிப்பூர்வமான பக்கத்தை இழப்பது உங்களின் இலக்கு அல்ல, பதிலாக, உங்களுக்குத் தேவையான நேர்மறையான உணர்ச்சியை…read more

சகிப்புக் கலை

நமது கிரகமாகிய பூமியைப் பாருங்கள். அது சகிப்புத்தன்மை, நெகிழ்திறன் மற்றும் கருணையை எப்பொழுதும் அனைவருக்கும் வழங்குகிறது.

மிக்கப் புகழ் பெற்ற மராட்டிய மாமுனிவர், சந்த் ஏக்நாத் எந்த ஒரு சாதாரணத் துறவியும் இல்லை. ஒரு முழுமையான அவதாரமாகும். அவருடைய செயல்களும் அவரது வார்த்தைகளும் எந்த விதமான முரண்பாடுகளும் இல்லாமல் சரியாக ஒத்துப் போயின. உண்மையில் இந்த வழி —அதாவது போதிப்பதையே நடைமுறைப்படுத்துவது தான், சாதாரணப் போதகரிலிருந்து உண்மையான துறவியைத் தனிப்படுத்துகிறது. ஏக்நாத் அவர்களின் வாழ்க்கை நன்னடத்தை, குருபக்தி குறிப்பாக அவரது சகிப்புத்தன்மை ஆகியவற்றால் மிகப் புகழ் வாய்ந்ததாக இருந்தது. யாரும் அவருக்குக் கோபம் வந்து பார்த்ததில்லை. என்ன வந்த போதிலும் அவர் தனது மன அமைதியை இழந்ததில்லை. ஒவ்வொரு நாள் காலையிலும் அந்த முனிவர் தன் காலைக் கடன்களை முடிக்கக் கோதாவரி நதிக்குச் செல்வார். நதிக்குச் செல்லும் வழியில் வாழ்ந்த, அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு மனிதன், ஒருவரும் கோபப்படாமல் இருக்க முடியாது என்று…read more

நன்றியை நடைமுறைப் படுத்துதல்

மற்றவர்களிடம் நன்றியுடையவராக இருப்பது கடவுளிடம் நன்றியுடையவராக இருப்பதாகும். அமைதியை அனுபவிக்க உங்களைச் சுற்றி உள்ளவர்களிடம் நன்றியை வெளிப்படுத்துங்கள்.

நன்றியானது உங்களை எவ்வாறு வலுவாக உருவாக்க முடியும் என்பதைப் பற்றி முன்னால் நான் எழுதியிருக்கிறேன். நன்றியுடையவராக இருப்பதை எவ்வாறு நடைமுறையில் கொண்டு வருவது என்பது பற்றியும், இரண்டு வகையான நன்றியைப் பற்றியும், நன்றியுடையவராக இருக்க நீங்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது பற்றியும், இன்று நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் திரும்பவும் வலியுறுத்துகிறேன்; நன்றி, மிக ஆழமான உணர்வுகளில் ஒன்றாகும். நீங்கள் நன்றி செலுத்துபவராக இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் தானாகவே அன்பாக, பேரின்பமாக, அமைதியாக மற்றும் சாந்தமாக ஆகிறீர்கள். சாந்தமாக இருப்பது அல்லது அமைதியாக இருப்பது, எல்லோரிடமும் அன்பு செலுத்த முடிவது ஆகியவை நன்றி செலுத்தும் ஆன்மாவின் இயற்கையான வெளிப்பாடுகளாகும். ஒரு வழியில், நன்றியை வெறும் வாய்வார்த்தையாக இல்லாமல் சகிப்புத்தன்மையுடன் ஏற்றுக்கொள்ளுதலும், திருப்தியுடனும் மனநிறைவுடன் கூடிய நன்றியாக இருப்பதுவும் பற்றியதாகும். உணர்ச்சிகளின் மாற்றத்தின் ஒரு…read more

நன்றியுடையவராக இருக்கவும்

வாழ்க்கையின் நிறங்கள் அனைத்திற்கும் நன்றியுடையவர்களாக இருங்கள்; அது ஒன்றே வாழ்க்கையை மதிப்புடன் வாழவைக்கிறது. புகார் செய்வதை நிறுத்துங்கள்.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு நான் துறவறம் மேற்கொள்வதற்கு முன், வட இந்தியாவில் ஒரு முறை குளிர் அலை வந்தது. இந்தக் குளிரால் வீடற்ற மக்கள் பலர் இறந்த சம்பவங்கள் பற்றி செய்தித்தாள்களில் அறிவிக்கப்பட்டன. என் தந்தை என்னால் முடிந்த சிறிதளவு உதவியையாவது செய்யுமாறு என்னை ஊக்குவித்தார். இதன் விளைவாக, என்னுடைய நெருங்கிய நண்பரும் என்னுடைய நிறுவனத்தின் மேலாளருமாக இருந்தவரும், நானும் தேவையானவர்களுக்குப் போர்வைகள் வினியோகம் செய்யலாம் என்று முடிவெடுத்தோம். எனினும், சில நிறுவனங்களுக்குச் சென்று அவற்றைக் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை. உண்மையான தேவையுடன் இருந்தவர்களின் கைகளில் தான் அது நேரடியாகச் சென்றடைகிறது என்பதை நாங்கள் உறுதி செய்து கொள்ள விரும்பினோம். நாங்கள் சுமார் பதினைந்து டஜன் போர்வைகள் வாங்கினோம். ஒரே நேரத்தில் எழுபது போர்வைகள் வைக்க ஏதுவான ஒரு வாகனம் எங்களிடம் இருந்தது. என் நண்பர்,…read more

1