மகிழ்ச்சியா அல்லது வருத்தமா?
மகிழ்ச்சி மனத்தின் ஒரு நிலையாகும். நீங்கள் உங்களிடம் எவ்வளவு இதமாக இருக்கிறீர்களோ, அவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
மனித வாழ்க்கை ஒரு பெண்டுலம் (pendulum) போன்று தொங்கிக்கொண்டிருக்கிறது. நேர்மறை மற்றும் எதிர்மறை, நன்மை மற்றும் தீமை, சரி மற்றும் தவறு, உண்மை மற்றும் பொய், உயர்வு மற்றும் தாழ்வு, தடித்த மற்றும் மெல்லிய ஆகியவற்றைப் போன்ற இன்னும் பல இரட்டைகளின், ஒரு முழுக் குவியலின் இடையே ஊசலாடிக் கொண்டிருக்கிறது. எனினும் இவை அனைத்துமே அவரவர்களின் உள் உணர்வைச் சார்ந்தவாறே இருக்கிறது. நீங்கள் அதை அனுமதிக்காத வரை அதால் உங்களைப் பாதிக்க முடியாது. உங்களுக்கு நான் ஒரு சிறிய கதையைக் கூறுகிறேன்: ஒரு காலத்தில் ஒரு துறவி இருந்தார். பல ஆண்டுகளாக அவர் தியானம், மிகுந்த சிந்தனை மற்றும் பொறுமையுடன் பயிற்சி செய்தார், ஆனாலும் அவரால் ஞானத்தை அடைய முடியவில்லை. குறிப்பாக மக்கள் அவரது புனிதத் தன்மையைப் பார்க்கத் தவறின போதும், அவர் உண்மை என்று நினைத்ததை…read more