இரண்டு விதமான விதிகள்

மற்றவர்கள் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதையே நீங்கள் மற்றவர்களுக்கும் செய்யுங்கள். உங்களுக்கு என்ன விதிமுறையோ, அதே விதிகள் மற்றவர்களுக்கும் இருக்க வேண்டும் என்பது முக்கியமாகும்.

முல்லா நஸ்ருதின் அவருடைய அண்டை வீட்டுக்கதவைத் தட்டினார். அவர் கதவைத் திறந்து நஸ்ருதினை வரவேற்று அவருக்கு ஒரு இருக்கையை வழங்கினார். முல்லா அவரிடம் நான் உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும். நீங்கள் அதை விரும்பப் போவதில்லை ஆனால் உண்மையை எதிர் கொண்டே ஆக வேண்டும் என்றார். அண்டை வீட்டுக்காரர் “அது என்ன?” என்று ஆர்வமாகக் கேட்டார். உங்களது காளை என்னுடைய பசுவை மோசமாகத் தாக்கி காயப்படுத்தி விட்டது. இப்போதே அதற்குச் சிகிச்சை கிடைக்கவில்லை எனில், அது இறந்து விட வாய்ப்பு உள்ளது. நீங்கள் ஒரு புதிய மாடு வாங்க பணமோ அல்லது காயப்பட்ட பசுவிற்கு முழுமையான சிகிச்சை அளிப்பதோ நியாயமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன் என்று நஸ்ருதின் கூறினார். நீங்கள் கூறுவது முற்றிலும் அர்த்தமற்றதும், மடத்தனமும் ஆகும் என்று அண்டை வீட்டுக்காரர் கோபத்துடன் கூறினார். ஒருவரது விலங்கு…read more