ஓம் சுவாமி

உரையாடல்களில் இருந்து ஒருமுகச் சிந்தனைக்கு

நல்ல தியானம் மற்றும் பெரிய நினைவாற்றலுக்கு, ஒரு வில்லாளனுக்குத் தேவையான ஒருமுகச்சிந்தனையை (செறிவு), தியானிப்பவர் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு நல்ல தியானிப்பவர் ஆவதற்குப் பெரிய செறிவு தேவை ஆக உள்ளது, மிகப் பெரிய தியானிப்பவர் ஆவதற்கு உச்சக்கட்ட செறிவு தேவை ஆக உள்ளது. செறிவு, குறிப்பாக ஒரு கூரான செறிவு, பயிற்சியினால் வருகிறது. எவ்வளவு அதிகமாகப் பயிற்சிக்கிறீர்களோ, அவ்வளவு நேர்த்தியாக உங்களுக்குச் செறிவு அமையும். கிருஷ்ணரின் காலத்தில் இருந்த பெரிய வில்லாளனும், வீரனுமான அர்ஜுனன், ஐந்து சகோதரர்களில் ஒருவனாவான். அவனுடைய சகோதரன் பீமன் பெரும் பசி உள்ள, கிட்டத்தட்டக் கட்டுப்பாடில்லாமல், பெரிய பெரிய கவளங்களாக விழுங்குபவன். ஒரு அமாவாசை அன்று, கும்மிருட்டில் பீமன் நடு இரவில் பசியினை உணர்ந்தான். அவன் சமையலறைக்குள் புகுந்து உணவு மற்றும் இனிப்புகளைக் கண்டுபிடித்து, அங்கேயே சாப்பிடத் தொடங்கினான்; அவன் குழந்தைப் பருவத்தில் இருந்து இவ்வாறு செய்து வந்ததால், பீமனைப் பொறுத்தவரை இது ஒரு சாதாரணச் செயல். இந்தக் குறிப்பிட்ட இரவில்,…read more

கொடுக்கவா அல்லது எடுக்கவா?

கொடுக்கத் தயாராக இருக்கும் பொழுது நீங்கள் இயற்கையின் விளையாட்டில் தனித்து நின்று பிரகாசிக்கிறீர்கள். நீங்கள் பெறுவதற்கு தகுதியுள்ளவராகிறீர்கள்.

நீங்கள் விரும்புவதைத் தேர்வு செய்து பெற்றுக் கொள்ளலாம் என்ற ஒரு வாய்ப்பு உங்களுக்கு வழங்கப்பட்டது என்றால், கேட்டதையெல்லாம் கொடுக்க வல்லவர் ஒருவர் இருந்தால், அவரிடமிருந்து நீங்கள் என்ன கேட்டுப் பெறுவீர்கள். நிச்சயமாக, விழிப்புணர்வு பூர்வமான, நன்கு கட்டுப்பாட்டிற்கு பழக்கப்பட்ட இந்த மனம் உடனடியாக களத்திற்கு வந்து விருப்பங்களை மதிப்பீடு செய்யத் துவங்கும் வாய்ப்பு உள்ளது. அவரால் எவ்வளவு கொடுக்க முடியும். என்னவெல்லாம் கொடுக்க முடியும். இதை ஏன் என்னிடம் கொடுக்கிறார். நான் அதைப் பெற்ற பின் என்னவெல்லாம் செய்வேன். எவருடனெல்லாம் நான் அதைப் பகிர்ந்து கொள்ளப் போகிறேன் என்று மேலும் மேலும் யோசிப்போம். ஆழ்மனம் பலவற்றையும் கணக்கிடத் தூண்டும். ஆனால் உணர்ச்சிகள் கணக்கீட்டின் அடிப்படையில் யோசிக்காமல் உடனடியான புறத்தூண்டுதல் அற்ற இயல்பான எதிர் விளைவால் நடப்பதாகும். ஒரு சிறு குழந்தைக்கு கிச்சுகிச்சு மூட்டினால், அது உடனே சிரிக்கும்….read more

லேசான பயணம்

நீங்கள் வாழ்க்கையை எப்படிப் பார்க்கிறீர்கள் என்பது நீங்கள் பார்க்கும் கோணத்தைப் பொறுத்தது. நீங்கள் லேசாகப் பயணம் செய்யும் பொழுது நறுமணம் கொண்ட லேசான மலரைப் போல் ஆகிறீர்கள்.

முன்னொரு காலத்தில், ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் ஒரு பரிசுத்தமான மனிதன் வாழ்ந்து வாழ்ந்தார். சிலர் அவரை ஞானத்தைப் பெற்ற துறவி என்றும், மற்றும் பலர் அவரை முட்டாள்தனமான விசித்திரமான மனிதர் என்றும் நினைத்தனர். குழந்தைகளுக்குப் பொம்மைகள் மற்றும் மிட்டாய்கள் கொடுத்ததால் குழந்தைகள் அவரை கிலோனா பாபா என்று அழைத்தனர். ஒரு பிச்சைக்காரன் பாணியில் அன்றாடம் தனக்கு வேண்டியதை மட்டும் இறந்து பெற்றார்.தனக்கு எது கிடைத்ததோ அரிசியோ, காய்கறிகளோ, ரொட்டியோ அதைக் கருணையுடன் ஏற்றுக்கொண்டார். அவர் ஒரு போதும் பணம் ஏற்றுக் கொண்டதில்லை. கிடைத்ததில் நிறைவுடன் காணப்பட்டார். எனினும், அவர் பிச்சை கேட்டு வந்த பொழுது பொம்மைகளையும், இனிப்பையும் கூடக் கோரினார். கிராம மக்கள் அவரை மதித்ததால் பிச்சை கேட்டு வந்த பொழுது, பயன்படுத்திய பொம்மைகள் மற்றும் இனிப்பு உருண்டைகளைக் கொடுத்தனர். அதை அவர் ஒரு பெரிய பையில்…read more

1