ஓம் சுவாமி

தேர்ந்தெடுக்கப்பட்ட பாதை

நாம் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறோமோ அது நம் உள்ளிருந்து வரும் அழைப்பா அல்லது நம் தலைக்குள் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கும் சில வலுவான ஆசைகளா என்பது நமக்கு எப்படித் தெரியும்?

ஒரு வாசகர் பின்வரும் கேள்வியைக் கேட்டிருந்தார்: நாம், நமது அழைப்பைப் பற்றி எப்படி மற்றும் எப்போது குழப்பம் அடைகிறோம்? உண்மையான அழைப்பு மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப வாழ்வது, இவற்றை எப்படி நாம் வேறுபடுத்துவது? விரும்பிய பாதை அல்லது வாழ்க்கை வழிமுறை உங்களுக்காக விதிக்கப்பட்டது இல்லை என்றால் என்ன செய்வது? பிறகு ஏன் நாம் முன்னேறுவதற்கான முதற்படியை எடுத்து வைக்க வேண்டும் என்ற அத்தகைய வலுவான உணர்வு நமக்கு ஏற்படுகிறது. ‘நீங்கள் நிகழ் காலத்தில் எடுக்கும் முடிவு உங்கள் எதிர்காலத்தில் பிரதிபலிக்கும்’, என்று நீங்கள் கூறுகின்ற போது, அதை எப்படி நாங்கள் இதனுடன் தொடர்புப்படுத்துவது? தயவு செய்து விளக்கவும். ஏதாவது குழப்பம் இருக்குமானால், அது உண்மையான அழைப்பு அல்ல. உண்மையான தாகத்திற்கும், மாயையான தாகத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன? உண்மையான தாகத்தை ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே…read more

பூர்ண வடிவம்

“ஒப்புயர்வற்ற உண்மை அல்லது பூர்ண வடிவம் என்பது என்ன? அப்படி ஒன்று இருக்கிறதா?” என்று ஒரு வாசகர் என்னைக் கேட்டார்.

ஒரு வாசகர் சில நாட்களுக்கு முன் பின்வரும் கேள்வியைக் கேட்டிருந்தார். நீண்ட கருத்துடனான மதிப்புள்ள ஒரு கேள்வி: “கடவுள் – இராமா, கிருஷ்ணா, கிறிஸ்து அல்லது வேறு எந்த வடிவத்திலாவது இந்தக் கிரகத்தை அருள்பாலித்தார் என்ற நம்பிக்கை, உங்களது உள் அமைதியைக் கண்டறிய உதவுகிறது என்றால், அத்தகைய நம்பிக்கையானது நீங்கள் நேர்மையுடனும் கருணையுடனும் நடக்க உதவுகிறது என்றால், அந்த நம்பிக்கை உங்களை ஒரு நல்ல மனிதனாகவும், இந்த உலகத்தை ஒரு நல்ல இடமாக ஆக்க ஊக்கமூட்டுவதாகவும் உள்ளது என்றால் நீங்கள் அந்த நம்பிக்கையைப் பற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.” பிரபு, மேலே உள்ளவை உங்களுடைய வார்த்தைகள் ஆகும். இதைப்பற்றி என்னிடம் ஒரு கேள்வி உள்ளது. ஒரே ஒரு உண்மை தான் இருக்க முடியும் என்று நான் நம்புகிறேன். நல்லது அல்லது கெட்டது, உலர்ந்தது அல்லது ஈரமானது, இதில்…read more

திலகம், ஸ்ரீ வித்யா மற்றும் விண்ணுலக இசை

நான் என் நெற்றியில் இரண்டு திலகங்களை ஏன் அணிகிறேன், ஸ்ரீ வித்யா மற்றும் வானத்து இசையைப் பற்றிய சுருக்கமான பதில்கள்.

1