ஓம் சுவாமி

வாழ்க்கை ஒரு இசைக்கருவியைப் போன்றது

வாழ்க்கை உண்டுபண்ணும் ஒலிகள் மற்றும் இசைப்பாட்டுகள் அது உருவாக்கும் அந்த இனியகீதம் ஆகியவை உருவாக்கிய கருவியைவிட அதை இசைப்பவரையே அதிகமாகச் சார்ந்துள்ளது.

வாழ்க்கை ஒரு இசைக் கருவியைப் போன்றது. அது இசைப்பவரைப் பொறுத்து இனிமையான அல்லது அருவருப்புக்குரிய ஒலிகளைத் தருகிறது. சில கருவிகளுக்கு விரல்களின் சரியான ஸ்திரத்தன்மையும், மற்றவற்றுக்கு அதிகத் திறமையும் தேவையாக உள்ளது. சிலவற்றை அடிக்கவும் அதே நேரத்தில் பலவற்றை நீங்கள் ஊதவும் வேண்டி உள்ளது. ஒவ்வொன்றின் இசையும் தனித்தன்மை வாய்ந்ததாகும். அவற்றில் சில தலைசிறந்து தனித்துவமானதாக இருக்கிறது. சில எப்போதும் மற்றவற்றுடன் சேர்ந்து இசைக்க மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது. சிலவகை மிகவும் பலரறிந்தவை. மற்றவை பிரபலமானவை, இன்னும் பல மிகவும் தெளிவில்லாதவைகளே. ஒரு நிபுணரின் கைகளில், அந்தக் கருவி உயிரோட்டம் பெறுவதாகத் தெரிகிறது; அதனால், அந்தக் கருவியையா அல்லது இசைப்பவரையா யாரைப் பாராட்டுவது என்று தெரிந்து கொள்வது கடினமாகிறது. சில கருவிகள் சாதாரணத்தை விடப் பெரியதாகவும் பல தாளைத் தைக்கும் முள் கருவியை விடச் சிறியதாகவும் இருக்கின்றன; இதே…read more

மனஅழுத்தம்: யோகப் பார்வை

மனஅழுத்தத்தைப்பற்றிய தற்போதைய அறிவியலின் புரிதலை விட யோகப் பார்வை மிக ஆழமானதாகும். அறிவியல் மூளைக்குச் சிகிச்சை அளிக்கிறது ஆனால் யோக நூல்கள் மனதைப் பார்க்கின்றன.

இன்று நான் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவர் பற்றி அறிந்து கொண்டேன். நான் உண்மையில் அந்த நபரை நேரில் பார்த்து அவர் அதிலிருந்து வெளியில் வர உதவவேண்டும் என்று விரும்பினேன். நான் இப்பொழுது இருக்கும் இடத்திலிருந்து அங்கே செல்வது சாத்தியமில்லாததால், என்னுடைய செய்தியைத் தெரிவிப்பதற்கு இந்த வலைப்பதிவைத் தேர்வு செய்தேன். இந்த மனஅழுத்தத்தால் அவதிப்படும் பல மனிதர்களை எனக்குத் தெரியும். சிலர் மிக மோசமாகப் பாதிப்படைந்து தங்கள் வேலைகளை விட்டுவிட்டுக் கிட்டத்தட்ட தனிச்சிறையில் இருப்பது போன்று தங்கள் வீடுகளைப் பூட்டிக் கொண்டு உள்ளேயே தங்கிவிட்டனர். இந்த நிலையிலிருந்து வெளியே கொண்டு வருவதற்கு அவர்களில் சிலருக்கு பல மாதங்களாக மணிக்கணக்கில் உதவி செய்திருக்கிறேன். ஒருவர் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் போது, அவர்களுடைய உற்றார், உறவினர்களுக்கும் இதே அனுபவம் ஏற்படுகின்றது. ஆனால் குடும்பத்தில் உள்ள அனைவரும் அனுசரணையாக இருக்க வேண்டும். ஏனெனில் அவர்களும்…read more

இரண்டு ஆன்மீக அணுகுமுறைகள்

ஆன்மீகப் பாதையில் உங்கள் வாழ்க்கையை வாழ அல்லது நடத்த இரண்டு வழிகள் உள்ளன - அவை சிலந்தி வழி அல்லது தேனீ வழி.

காடுகளில் வாழும் வாழ்க்கை ஒரு தெய்வீகமான அனுபவம் ஆகும். அதாவது பூச்சிகள், கொசுக்கள் மற்றும் எலிகளின் உடன்பாடின்மையைத் தவிர்த்துப் பார்த்தால்! கொடிய மிருகங்கள் பட்டயம் பெற்ற சமுதாயத்தினரைப் போல நடந்து கொள்கின்றன, ஆனால் பூச்சிகள் மற்றும் எலிகள் காடுகளின் ஒரு பாதுகாப்பான இடத்திற்காகத் தங்கள் மனசாட்சியை அடகு வைத்து விட்டதைப் போல நடந்து கொள்கின்றன. அவை அனைத்தும் உங்களுக்குப் பயிற்சி அளிக்கவே அங்கு உள்ளன. அவற்றை அனுசரித்து வாழப் பழகிக் கொண்டு விட்டால், அதன் பின் மனிதர்களை அனுசரித்து வாழ்வது ஒரு குழந்தையின் விளையாட்டைப் போன்றதாகும். ஏழு மாதங்களுக்கான என் முக்கியத் தியானத்தின் போது, நான் ஒரு சிதிலமடைந்த குடிசையிலேயே வாழ்ந்தேன். அந்தக் குடிசை, உங்கள் வசம் உள்ள பல சாதனங்களைப் போல், பழைய மற்றும் கிட்டத்தட்ட கைவிடப்பட்டதாக இருந்தது. அந்த ஓலைக் கூரையில் புல்லைவிட மிக…read more

தியானம் மற்றும் எண்ணங்கள்

தியானம் செய்பவரை ஆரம்பத்தில் எண்ணங்கள் தொடர்ந்து தொந்தரவு செய்தல், தடுமாறும் தன்மையைத் தருதல், திசைதிருப்புதல் ஆகியவற்றைச் செய்கின்றன. ஒரு நல்ல தியானம் செய்பவர் விடாமுயற்சி மற்றும் பொறுமையைக் கொண்டு அவற்றைக் கடந்து உயர்கிறார்.

தன்னலமற்ற பங்களிப்பும், மிகைப்படுத்திச் சொல்ல முடியாத அளவு, ஆசிரமத்தின் திட்டத்தில் அதிகமான ஈடுபாடும் உள்ள ஒரு வாசகர் பின்வரும் கேள்வியைக் கேட்டுள்ளார். வேறுவிதமான சொற்களைப் பயன்படுத்தி இதேபோன்று பலர் கேட்டுள்ளனர். கீழே காண்க: பிரபு, மனதையும், எண்ணங்களையும் கட்டுப்படுத்தும் கலையைப் பற்றிய இன்னும் கொஞ்சம் வழிகாட்டுதலை, நீங்கள் எங்களுக்குக் கொடுக்க முடியுமா? ஒரு முறை அவற்றைத் தூக்கி எறிந்தாலும் பூமாராங்கைப் போன்று திரும்பி வருகின்றன. முயற்சி செய்து கட்டுப்படுத்தினாலும் மேலும் அதிகமானவை உள்ளே வந்து அமைதியின்மை, விரக்தி போன்ற விளைவுகளைத் தான் ஏற்படுத்துகின்றன. இது மிகவும் கடினமான பணியென்றும் ஆனால் சாத்தியமானது என்றும், ஒரு முறை கட்டுப்படுத்தினால் பேரின்பம் அடையலாம் என்றும் உங்களுடைய அறிக்கை கூறுகிறது. மனதைக் கட்டுப்படுத்தும் செயல் தான் ஒருமுகப்படுத்துதல் (தாரனா) ஆகும். இது போன்ற கட்டுப்பாட்டை நிலைநிறுத்தும் கலை தான் தியானம் (தியானா)….read more

சந்தோஷத்தைத் தேடுதல்

சந்தோஷம் என்பது ஒரு பயணமா அல்லது இலக்கா? இது ஒருவரது கண்ணோட்டத்தைப் பொறுத்தது. மேலும், கண்ணோட்டம் என்பது புரிந்துகொள்வதைப் பொறுத்தது.

ஒரு வாசகர் பின்வரும் கேள்வியைக் கேட்டிருந்தார்: நமஸ்காரம் சுவாமிஜி, உங்களுடைய வலைப்பதிப்பை படிக்க முடிவதிலிருந்து, என் பிரார்த்தனைகளுக்கு பதில் (சிறிதளவு) கிடைத்துள்ளதாகத் தெரிகிறது. என்னுடைய கேள்விகளின் தொகுப்பு: 1. சந்தோஷம் என்றால் என்ன? 2. சந்தோஷத்தை எப்படி நாம் அடைவது? 3. சந்தோஷத்தை அடைய எதை நாம் விட வேண்டும்? 4. சந்தோஷத்தை அடைய எதை நாம் விடக் கூடாது? வாழ்க்கையின் இந்தச் சூழ்நிலையில், (வாழ்க்கை மற்றும் மரணத்தைப் பற்றிய கேள்வியைப் போல் தெரிகிறது) சந்தேகங்களைப் போக்கவும், முன்னேறுவதற்கான பாதையைக் காட்டவும் உங்களின் சில வழிகாட்டுதல்கள் உதவக்கூடும். நமஸ்காரம் 1. பொய்யான மகிழ்ச்சியானது வெளிப்புற நிகழ்வுகளால் பெறப்படுகிற மற்றும் இயக்கப்படுகிற ஒன்றாகும். அதனால் உணர்வுகளின் தேவையைப் பூர்த்தி செய்வதோடு இணைக்கப்பட்ட, பொய்யான மகிழ்ச்சியின் மறுபக்கம் துக்கமாகும். உண்மையான மகிழ்ச்சியானது பேரின்பம் என்றும் அழைக்கப்படுகிறது. அது மனதின் இயற்கை…read more

1