ஓம் சுவாமி

வாழ்க்கை நான்கு பருவங்களைப் போன்றது

பல்வேறு வண்ணங்களும், வாழ்க்கையின் பருவங்களும் வாழ்க்கையை அழகாகவும், வண்ணமயமாகவும் ஆக்குகின்றன.

வாழ்க்கை சுழன்று வரும் நான்கு பருவங்களைப் போன்றதாகும். மனித மனத்தில் ஓய்வில்லாமல் ஒரு எண்ணம் தோன்றி மறைவதற்குள் அடுத்த எண்ணம் துளிர்க்கிறது. அதுபோல ஒவ்வொரு பருவமும் அதற்கான காலத்தில் தோன்றி பின்பு அடுத்ததற்கான சமயத்தில் யாருடைய விருப்பத்தையும் பொருட்படுத்தாமல் வழிவிடுகிறது. குளிர் காலத்தில் இயற்கையானவள் சுருங்கி; கார் காலத்தில் இலையுதிர்ந்து; கோடைக் காலத்தில் விரிவடைந்து; வசந்த காலத்தில் அவள் பூத்துக் குலுங்குகிறாள். நாம் விரும்பாத பருவங்கள் அதிக நாட்கள் நீடிப்பது போல் தோன்றுகின்றன. மலர்கள் வசந்த காலத்தில் பூக்கின்றன. பருவகாலங்களில் மழை பெய்கின்றது. உங்களின் சுவாசத்தில் உள்ள பிராண நிலையால் உங்களின் உணர்வுநிலை பாதிக்கப்படுவதைப் போல் தட்பவெப்பநிலையும் குளிர் காலத்தில் குறைந்தும், கோடைக் காலத்தில் உயர்ந்தும் காணப்படுகிறது. இவை அனைத்தும் நிலைப்படுத்தப்பட்ட அழகான தொகுப்பாகும். இதேபோல் நாம் அனைவரும் வாழ்க்கையின் பல்வேறு வண்ணங்களை அனுபவிக்கிறோம். நீங்கள் வருடத்தின்…read more

மனம், எண்ணங்கள் மற்றும் ஆசைகள்

கடலின் அலைகளைப் போல் மனித மனத்தில் எண்ணங்களும் தொடர்ச்சியானவை. நீங்கள் ஒன்றை அகற்றினால் அதன் பின்னாலேயே மற்றொன்று தொடர்கிறது.

ஒன்றிரண்டு வாசகர்கள் பின்வரும் கேள்விகளை எழுப்பியுள்ளனர்: கேள்வி: ஹரி ஓம் ஜி, ஆசையின் உண்மைத் தன்மையை விளக்கியதற்கும், பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி. இது ஒரு நீர்ச்சுழலைப் போன்றதாகும்; நாம் அனைவரும் ஒரு குறிப்பிட்ட ஆசையினுடைய தொடக்கப் புள்ளியின் ஆழத்தைப் புரிந்து கொள்ளாமல் அதில் சுழன்று கொண்டிருக்கிறோம். சுவாமிஜி, தயை கூர்ந்து அறிவுசார்ந்த ஆசைகளைப் பற்றி மேலும் நீங்கள் தெளிவுபடுத்த முடியுமா. இந்த விதமான ஆசைகள் சமுதாயத்திற்காக மதிப்புமிக்க ஏதாவது ஒன்றை உருவாக்குகிறது. ஒரு தொண்டு நிறுவனம் உருவாக்குதல், ஒரு பொருள் அல்லது ஆன்மீக கண்டுபிடிப்பை நோக்கி வேலை செய்தல், ஒரு சமூக அல்லது சமயத்தின் காரணத்திற்காக அர்ப்பணித்தல் இவையாவும் அறிவுசார் ஆசைக்கான உதாரணங்கள் ஆகும் என்றும் நீங்கள் அடிக்கடி கூறியுள்ளீர்கள். சமூகத்திற்கு எதாவது நல்லது செய்வதையோ, தேவையில் இருக்கும் யாருக்காவது எந்தப் பலனையும் எதிர் பார்க்காமல் உதவி…read more

ஆசை மரம்

ஆசைகள் நம்மைச் செயல்பட வைக்கின்றன. நாம் என்னவாக ஆகிறோமோ அந்த நிலையை அடையவைக்க உதவும் ஆசையின் மூலத்தை அறிவது உதவிகரமாக இருக்கிறது.

எப்படி தண்ணீரிலிருந்து ஈரப்பதத்தைப் பிரிக்க முடியாதோ, ஒளியிலிருந்து வெப்பத்தைப் பிரிக்க முடியாதோ, அதே போல் மனதிலிருந்து ஆசையைப் பிரிக்க முடியாது. கைவிடப்படாத எண்ணங்களே ஆசைகள் ஆகும். எண்ணங்கள் ஒரு சாதாரண நினைப்பே ஆகும். அவற்றில் நல்லவை அல்லது கெட்டவை, உயர்ந்தது அல்லது அபத்தமானது, சரியானது அல்லது தவறானது என்று எதுவும் இல்லை. இது போன்ற அடையாளங்கள் நிபந்தனையின் அடிப்படையில் உங்களால் கொடுக்கப்பட்ட பட்டங்களாகும். உள்ளார்ந்து பார்த்தால் எண்ணங்கள் யாவும் ஒரே மாதிரியானவை தான். உண்மையில், எண்ணத்தை விட அந்த எண்ணத்தைக் கொண்டு என்ன செய்தாய் என்பதே முக்கியமானதாகும். ஒரு எண்ணம் உதித்ததும் அதில் ஏற்படும் ஈடுபாடு ஆசையாகவோ, நேர்மறை அல்லது எதிர்மறை உணர்ச்சியாகவோ வடிவம் எடுக்கும். அனைத்து கர்மாவும் எண்ணங்களிலிருந்து உருவாகின்றன. அலைமோதும் சிந்தனையானது அமைதியான நிலையில் உள்ள உங்கள் மனத்தை, குளத்தில் ஏற்படும் சிற்றலையைப் போல்…read more

1