பக்தி

பக்தி என்பது உணர்ச்சிகளுக்கு அப்பால் செல்லும் மற்றும் சரணாகதி தொடர்பான ஒரு கலையாகும். சடங்குகளுடன் இதற்கான சம்பந்தம் மிகவும் குறைவு.

கடந்த வாரம் நடவடிக்கை நிரம்பியதாக இருந்தது. நிறைய மக்களைச் சந்திப்பது, சொற்பொழிவுகள் கொடுப்பது மற்றும் கீர்த்தனைகளை அனுபவிப்பதுமாக இருந்தது. மக்கள் அன்றாடம் அதிக அளவில் வந்து பல மணி நேரம் பஜனைகளைப் பாடினர். நான் மெய்மறந்த நிலையில் அமர்ந்து அதை அனுபவித்துக் கொண்டிருந்தேன். அவர்களின் பக்தி மற்றும் அன்பை ஆழமாக உணர்ந்தேன். அவர்கள் கரகரப்பான மற்றும் இனிமையான குரல்களில் இசை சேர்த்துப் பாடினார்கள். மகிழ்ச்சியை அது பேரானந்த நிலைக்கு அதிகரித்தது. தெய்வீக அன்பின் வெளிப்பாடுகளான கண்ணீர், சிரிப்பு, மயிர்க்கூச்செரித்தல், நடுக்கம் ஆகியவை புரண்டோடின. இப்பொழுது, நான் உடல் மற்றும் பிராணனை யோகப் பயிற்சியில் ஈடுபடுத்தி, தனிமையின் துணையுடன் இன்பமாக இருக்கப் போகிறேன். நான் இப்போது பக்தியைப் பற்றி விளக்க விரும்புகிறேன். பக்திப் பாதையானது, தியானம் மற்றும் ஒருமுகப் படுத்துதல் போன்று கடினமானது அல்ல. எனினும், பக்தியால் மட்டுமே…read more