இமாலய எதிர்பார்ப்புகள்

எதிர்பார்ப்புகள் என்றால் என்ன மற்றும் அவை ஏன் மனிதனின் பெரும்பாலான துயரத்திற்கு ஆதாரமாக உள்ளது — ஒரு கண்ணோட்டம்.

ஒவ்வொருவரும் ஒரு கண்ணுக்குத் தெரியாத சுமையைத் தாங்கிக் கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியும். அது கண்ணுக்குத் தெரியாததால் அப்படிப்பட்ட சுமையைப் பற்றியும், அது தொடர்ந்து கூடிக்கொண்டே இருக்கிறது என்பது பற்றியும், எதுவும் தெரிந்து கொள்ளாமலே இருக்கிறீர்கள். உங்களால் நினைவில் கொண்டுவரக்கூடிய தருணத்திலிருந்து, தற்போதைய நிலைவரை அது உங்களுடைய உணர்வில் இருந்து கொண்டே இருக்கிறது. அதனால், ஒரு குடிமகன் தான் வசிக்கும் நாட்டின் சட்டங்களை ஏற்றுக் கொள்வதைப் போல், நீங்கள் இதை முறையாக ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள். இது ஒரு தெளிவான, அமைதியான மற்றும் நிபந்தனையற்ற ஏற்றுக் கொள்ளலாகும். நீங்கள் ஏற்கனவே யூகிக்கவில்லை என்றால், ‘எதிர்பார்ப்புகள்’ என்ற பெரிய சுமையைத்தான் நான் குறிப்பிடுகிறேன். நீங்கள், உங்களுக்கு சில அடிப்படை மற்றும் யதார்த்தமான எதிர்பார்ப்புகள் அல்லது எந்த எதிர்பார்ப்புகளும் இல்லை என்று நம்பிக் கொண்டிருக்கலாம். பின்வரும் பகுதியைப் படித்த பின்னர் திரும்பவும் யோசியுங்கள்…read more