எனது உண்மை

கூட்டமான வாரணாசி மற்றும் இமாலய மலைகளைக் கடந்து, பேரின்பம் என்ற அமைதிக் கடல் இருக்கிறது. இங்கே என் ஆன்மீக பயணத்தை சுருக்கமாக அளிக்கிறேன்.

நான் எழுதி கொஞ்சம் காலமாகி விட்டது. நான் இப்பொழுது உங்களுடன் சில தகவல்களைப் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கிறேன். இங்கே நான் மூன்று இடைப்பட்ட காலங்களில் எப்படி இருந்தேன் (எப்படி, எப்போது, எங்கே, என்ன) என்ற தகவல்களைத் தருகிறேன். நான் அதை சுருங்கச் சொல்லி விளங்க வைக்க முயற்சி செய்கிறேன். மார்ச் மாதம் 15, 2010 அன்று பிற்பகலில் நான் என் ஆன்மீக பயணத்தைத் தொடங்கினேன். நான் வாரணாசி சென்றேன். மார்ச் 18 ல் வாரணாசிக்கு 80 கிலோமீட்டர் வடக்கில் ஒரு சிறிய கிராமத்தில் நான் என் குருவைக் கண்டேன். அவர் ஏப்ரல் 11 ஆம் தேதி எனக்கு சன்யாச வாழ்வை ஆரம்பித்து வைத்தார். எனது குரு எழுபத்து ஐந்து வயது நிறைந்த ஒரு நாகா துறவி ஆகும். நான்கு மாதங்கள் கழித்து அவரது ஆசிரமத்தை விட்டுச்…read more