விமர்சனம்; அது தவிர்க்க முடியாதது. அது எப்போதும் மற்ற நபரின் ஒரு கருத்தாகும். அவர்களின் தீர்ப்பை நீங்கள் ஏற்றுக் கொண்டால், அவர்களின் விமர்சனம் உங்களை மேம்படுத்திக் கொள்ள உங்களைத் தூண்டலாம். எனினும், உங்களுக்கு உடன்பாடு இல்லையெனில், நீங்கள் எதிர்மறையைத் தழுவ நேரலாம். எதிர்மறை உணர்வுகள் உங்களை வலுவிழக்கச் செய்கின்றன. சில நேரங்களில், விமர்சனங்களைச் சமாளிப்பது கடினமாக இருக்கக்கூடும், அதுவும் குறிப்பாக, உங்கள் அன்புக்குரியவர்களிடம் இருந்து அது வருகிற போது. மற்றவர்கள் அவர்களது எதிர்மறைகள் மற்றும் கருத்துக்களை உங்கள் மீது கொட்டிவிட முயற்சிக்கும் போது, அந்தச் சமயத்தில் அதை நிராகரிக்கவோ, மறுக்கவோ மற்றும் கைவிடவோ, தேவையானதைத் தேர்வு செய்யும் வாய்ப்பு உங்களிடம் உள்ளது. உங்களால் கைவிட முடிந்தால், நீங்கள் அமைதியுடன் இருக்கலாம்; உங்கள் இதயத்தை அதிகமாக, நிச்சயமாகக் காயப்படுத்த முடியாது. உங்களுடன் ஒரு கதையை நான் பகிர்ந்து கொள்கிறேன்:

ஜப்பானில் ஒரு குறிப்பிட்ட மடம் இருந்தது. நீண்ட நாட்களுக்கு முன்பு அது ஒரு சீன குருவால் நிறுவப்பட்டது. அந்த குருவும் அவரது ஆதரவாளர்களும், மத நூல்கள், புத்தரின் சிலைகள் மற்றும் சமயச் சார்பான குறியீடுகள் போன்ற வேறு பல கலைப்படைப்புகளை அழிப்பதில் பேர்போனவர்கள். எல்லா விதமான சீரமைப்பு மற்றும் இணைப்பிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ளவேண்டும் என்பதே அவர்களின் நியாயமாக இருந்தது. இது போன்ற குறியீடுகள் மற்றும் நூல்கள் மனதைச் சுதந்திரமாக்குவதற்கு பதிலாக, வடிவமைக்கின்றன மற்றும் கட்டுப்படுத்துகின்றன என்று அவர்கள் நம்பினார்கள். சீன குருவின் தீவிர முறைகள் ஆழ்நிலை மனத்தை அடைய, பலருக்கு உதவி உள்ளன. எனினும், அவர்களது முறைகளை ஏற்றுக் கொள்ளாதவர்கள், அவர்களைக் கடுமையாக விமர்சித்தனர்.

ஒருமுறை இரண்டு நன்கு படித்த ஞானம் தேடுவோர், அதில் ஒருவர் வடஅமெரிக்காவில் பேராசிரியர், அந்த மடத்திற்கு விஜயம் செய்தனர். அவர்கள் நன்கு படித்தவர்கள், அந்த இடம் மற்றும் அதன் நிறுவனர் பற்றிய முன்கூட்டிய ஒரு கணிப்பு, அவர்களிடம் இருந்தது. மடாதிபதி அவர்களை வரவேற்று அவர்களுக்கு அந்த மடத்தைச் சுற்றிக் காண்பித்தார். சுற்றுப்பயணத்தின் இறுதியில் அவர்களின் ‘ரோஷி’, மூத்த குரு, ஒரு விழா மண்டபத்திற்கு, அந்த மடத்தின் நிறுவனர் சிலையிடம், விழுந்து வணங்கி தூபம் காண்பித்து அஞ்சலி செலுத்த அழைத்துச் சென்றார். அந்த நிறுவனரைப்பற்றி மற்றும் அவரது தீவிரச் செயல்களைப்பற்றி நிறையப் படித்திருந்ததால், அந்த இருவரும் மனம் நிலைகுலைந்தனர். குழம்பி இருந்த போதிலும், அவர்கள் அமைதியாகத் தொடர்ந்து சென்றனர்.

அந்த ரோஷி, சிலைக்கு முன் வணங்கிய போது, அந்தப் பேராசிரியர் இனியும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் திடீரென்று , “நீங்கள் இவரை ஏன் உருவ வழிபாடு செய்கிறீர்கள்? இவர், புத்தர் சிலைகள் மீது துப்பினார் மற்றும் புத்தர் சிலைகளை எரித்தார்! ஏன் அவருக்கு முன்பாக வணங்குகிறீகள்?” என்று உளறினார்.
“நீங்கள் துப்ப விரும்பினால் துப்புங்கள், நான் அடிபணிய விரும்புகிறேன்” என்று ரோஷி அமைதியாகப் பதிலளித்தார்.

பார்தீர்களா?! நீங்கள் அடிபணிவது அல்லது துப்புவது உங்கள் தேர்வாக இருக்கிறது, அவர்கள் அடிபணிவது அல்லது துப்புவது அவர்களின் தேர்வாகும். உங்களுடையதை நீங்கள் கடைப்பிடியுங்கள், அவர்களுடையதை அவர்கள் கடைப்பிடிப்பார்கள். எனக்கு ஒரு மேற்கோள் நினைவுக்கு வருகிறது, “உங்களை நேசிப்பவர்களுக்கு ஒரு விளக்கமும் தேவையில்லை, நேசிக்காதவர்கள் எப்படியும் எதையும் நம்பப் போவதில்லை,” என்பதாகும். ஒரு விமர்சனம் வழங்கப்படுகின்ற போது, நீங்கள் உண்மையிலேயே அதைச் செய்ய விரும்பினால் மட்டுமே, நீங்கள் உங்கள் நிலையைத் தெளிவுபடுத்தத் தேர்வு செய்யலாம். அத்தகைய விமர்சனங்கள் உண்மையாகக் கூட இருக்கலாம்; அதனால் நீங்கள் அதை பற்றிச் சிந்திக்க விரும்பலாம். அதற்கும் அப்பால், பிறரது எண்ணங்கள் மற்றும் கருத்துக்களை நினைத்து, நினைத்து ஏங்கி உங்களுக்குத் துக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். அதை உடனடியாக நிராகரியுங்கள்.

உங்கள் சுதந்திரம், உள்மனப் பேரின்பம், உங்கள் சொந்தக் கைகளில் தான் முற்றிலும் உள்ளது. அது உங்கள் மனத்தின் ஒரு நிலையாக உள்ளது. நீங்கள் எதை ஏற்பதில்லையோ அது உங்களை ஒருபோதும் பாதிக்கிறதில்லை. உங்களைப் போல், ஒவ்வொருவருக்கும் அவர்களது கருத்துக்கான ஒரு உரிமை உண்டு. நீங்கள் விமர்சனத்திற்கும் மேலே உயரும் வரை, அதைச் சமாளிக்க உங்களுக்கென்று ஒரு சொந்த முறையைக் கண்டறிய வேண்டும். இங்கே பிரபலமான சில முறைகள் உங்களுக்காகக் கொடுக்கப்பட்டு உள்ளன:

1. நீங்கள் அங்கிருந்து சென்றுவிடவும்: நீங்கள் அங்கிருந்து சென்றுவிட முடியும் என்றால், அவர்களுடைய கருத்துக்களை உங்களால் கேட்க முடியாது. அவர்களால் சொல்ல முடிந்ததை உங்களால் கேட்க முடியவில்லை என்றால், நீங்கள் துக்கப்பட முடியாது. நீங்கள் வெளியே செல்ல அல்லது காலார நடந்துவிட்டு வரத் தேர்வு செய்யலாம்.
2. மனரீதியாக மறைந்துவிடுங்கள்: மனத்தைத் திருப்பி வேறு எதையாவது கண்டுபிடித்து கவனம் செலுத்த முடியுமானால், அதனால் நீங்கள் உங்கள் உள்மன இசையைக் கேட்டுக் கொண்டே, உங்களது பேரின்ப நிலையைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். அது மற்ற நபர் டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது, நீங்கள் உங்கள் ஐ-பாடைக் கேட்பதைப் போல் ஆகும். அவர்களுக்கு என்ன விருப்பமோ அதை அவர்களும், உங்களுக்கு என்ன விருப்பமோ அதை நீங்களும் செய்கிறீர்கள்.
3. கற்பனை செய்து காண்க: ஒரு காட்சியைக் கற்பனை செய்து கொள்ளுங்கள், அது உங்களுக்கு உதவலாம். யாரோ ஒருவர் அவர்களின் எஃப்-எம் அலைவரிசையை (சேனல்) வைக்க முடிவு செய்கின்ற போது, நீங்கள் அவர்களை ஒரு உளறுகின்ற குழந்தை, ஒரு வானொலி, அல்லது உங்களைச் சுற்றிக் காப்பு செய்கின்ற ஏதாவது ஒன்றாகக் காணலாம்.
4. பரிதாபப்படுதல்: நீங்கள் கவனம் செலுத்திப் பார்த்தீர்கள் என்றால், உங்களை விமர்சிப்பவர்கள் முழுமையாகச் சுயப் பாதுகாப்பின்மையுடன் இருப்பதை நீங்களே கண்டறிந்து கொள்ளலாம். பேரின்பம் மற்றும் அமைதியுடன் இருப்பவர்கள் விமர்சிக்கமாட்டார்கள். அவர்கள் பண்புடன் அவர்களுடைய கருத்துக்களை வழங்கலாம், ஆனால் அவர்கள் விமர்சனம் செய்வதை நீங்கள் பார்க்க முடியாது. அடுத்த முறை நீங்கள் விமர்சனத்தை எதிர்கொள்ளும் போது, அந்த நபருக்காகப் பச்சாதாபத்தை உங்கள் இதயத்தில் நிரப்பிக் கொள்ளுங்கள். அவர்கள் ஒரு கடினமான குழந்தைப் பருவம் அல்லது ஒரு திருப்தியற்ற வாழ்க்கையைக் கொண்டிருந்திருப்பார்கள். அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மற்றும் அவர்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்த இந்த ஒரு வழியையே கற்றுக் கொண்டிருந்திருப்பார்கள். அவர்களை ஆதரிக்கும் முறையே, மிகச் சிறந்த கருணை வழி ஆகும். இதை உங்களால் பயிற்சிக்க முடியும் என்றால், நீங்கள் பெரிய அமைதியை அனுபவிப்பீர்கள் என்பது மட்டுமல்ல, மற்ற நபரிடமும் கூட ஒரு நுட்பமான மாற்றத்தை ஏற்படுத்தத் தூண்டுவீர்கள்.

நீங்கள் ஒரு விமானத்தில் ஏறியபின் உங்கள் விதி விமான ஓட்டியின் (பைலட்) கைகளில் உள்ளது போல, நீங்கள் ஒரு விவாதத்தை ஆரம்பித்துவிட்டால் இனி அது உங்களைப் பற்றியதாக மட்டுமே இருப்பது அல்ல. விமர்சனத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க அல்லது பதிலளிக்க நீங்கள் தேர்வு செய்தால், நீங்கள் விரோதம் மற்றும் எதிர்மறைத் தன்மை ஆகிய புதிய ஒன்றை உருவாக்கிவிட்டீர்கள், நீங்கள் ஏற்கனவே அந்த விவாதத்திற்குள் அடி எடுத்து வைத்து விட்டீர்கள். கட்டுப்பாடு உங்கள் கைகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாகக் குறைகிறது. நீங்கள் அதிக அதிகாரம் செலுத்தினால், நீங்கள் மற்ற நபரின் பதிலை இயற்கைக்கு மாறாகத் தடுத்து இருக்கலாம், ஆனால் சேதம் ஏற்கனவே செய்யப்பட்டு விட்டது.

நீங்கள் விமர்சிக்கும் போது எப்படி இருக்கிறது? மற்ற நபர் உங்களுக்கு என்ன செய்கிறாரோ அதை அன்புடன் ஏற்கவோ அல்லது பெரிய மனத்துடன் பாராட்டவோ முடியவில்லை என்றால், சின்னத்தனமாக நீங்கள் விமர்சிக்கவும் வேண்டாம். யாரோ ஒருவரை மேம்படுத்த உதவி செய்வதற்கும், அவர்கள் என்ன செய்கிறார்களோ அதற்கு எதிர்மறையாக விமர்சிப்பதற்கும் இடையே ஒரு வித்தியாசம் உள்ளது. அவர்களின் பார்வை உங்களுக்குப் புரியவில்லை என்றால், அவர்கள் தவறு என்று அர்த்தம் இல்லை. நேர்மையாக இருங்கள். விதிகளைப்பற்றின இரண்டு தொகுப்புகள் நினைவில் உள்ளதா?

ஆமாம், நீங்கள் குறிப்பாக ஒன்றைச் சொல்ல விரும்புகிறீர்கள். ஆமாம், நீங்கள் உண்மையில் அடுத்தவரின் தவறு தான் என்று நம்புகிறீர்கள். நிச்சயமாக, அவர்களை மேம்படுத்திக்கொள்ள அவர்கள் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் பாரபட்சமற்றவர் மற்றும் உங்கள் அறிக்கைகள் உண்மையானவை என்பதில் உங்கள் மனதில் எந்தச் சந்தேகமும் இல்லை. உண்மை என்னவென்றால், மற்றவரும் தன்னைப் பற்றி அதே போலத் தான் உணருகிறார்.

இவை அனைத்தும் உங்களுக்குள் உள்ளன, ஆனல் அனைத்தும் உங்களைப்பற்றி அல்ல!

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email