உங்களால் ஒரு குறிப்பிட்ட சிந்தனை அல்லது உணர்வை அசைக்க முடியாது என்பது போல் உங்களுக்கு எப்போதாவது ஏற்பட்டிருக்கிறதா? உண்மையில், நாம் எண்ணிப் பார்க்க அக்கறை கொள்ளாத அளவுக்கு நம்மில் பல பேருக்கு அடிக்கடி இதுபோல் நிகழ்கிறது. எல்லாம் நன்றாகச் சென்று கொண்டிருக்கும்போது, திடீரென்று எங்கிருந்தோ சில எதிர்மறையான சிந்தனைகள் நமது மனதில் நிலை கெட்டு ஓடுகின்றன, ஒரு மதம் பிடித்த யானையைப் போல், நம் அமைதியையும், சாந்தத்தையும் ஒரே நொடியில் தகர்த்துவிடுகிறது.

நான் ஏன் இப்படி உணர்கிறேன், அல்லது இது போன்ற எண்ணங்களைச் சிந்திக்கவோ அல்லது இந்த விஷயங்களை உணரவோ நான் விரும்பவில்லை என்று வியப்படைந்து கொண்டிருக்கிறோம். இத்தகைய சிந்தனைகள் நம்மை முற்றிலும் தடம் புரள வைக்கின்றபோது, நாம் நம் சொந்த அழிவைப் பார்த்துக் கொண்டிருப்பது, ஒவ்வொரு நபரின் வாழ்விலும் ஒரு பொதுவான நிகழ்ச்சியாக உள்ளது. இந்தத் தருணங்களில், தியானம், ஞானம், உறுதிமொழிகள் போன்றவை, சுண்டி எறியப்படுகின்றன. ஒரு விஷயம் மட்டுமே நம் மனதின் பிரபஞ்சத்தை ஆளுகிறது: ஒரு மூர்க்கமான சிந்தனை.

நம் உணர்ச்சியின் கதவை உடைத்துக் கொண்டு பாயும், இந்த மூர்க்கமான சிந்தனையைக் கையாள, ஏதாவது ஒரு வழி உள்ளதா? ஆம் உள்ளது என்பது ஒரு நல்ல செய்தி. ஒரு மோசமான செய்தி என்னவென்றால், அது அவ்வளவு எளிதான ஒரு வழி இல்லை. அப்படியானால் இப்படிப்பட்ட எண்ணங்களில் இருந்து நாம் உயர்வது எப்படி?
முதலில், என்னுடைய பேச்சுக்கள் ஒன்றில் கூறிய ஒரு அழகான கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

புத்தர், ஒரு இளம் மனிதரைப் பற்றிய ஒரு கதையைக் கூறினார். அந்த மனிதர் ஒரு வியாபாரி, அவருக்கு ஒரு அழகான மனைவியும், குழந்தை மகனும் இருந்தனர். வருத்தப்படும் விதமாக, அவரது மனைவி உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார், அந்த மனிதர் தன்னுடைய எல்லா அன்பையும் தன் சிறிய குழந்தையின் மேல் பொழிந்தார். அவருடைய மகிழ்ச்சி மற்றும் சந்தோஷத்தின் மூலமே, அந்தக் குழந்தை தான் என்றானது.

அவர் ஒருமுறை வியாபார நிமித்தமாக வெளியூர் சென்று இருந்த போது, கொள்ளைக்காரர்கள் அவரது கிராமத்தைத் தாக்கி, எல்லாவற்றையும் எரித்து, அவரது ஐந்து வயது மகனையும் சிறைபிடித்தனர். அவர் திரும்பி வந்து, இந்த அழிவைக் கண்டபோது, மிகுந்த துக்கத்தால் பீடிக்கப்பட்டார். அவர் ஒரு சிறிய குழந்தையின் எரிந்து சிதைந்த சடலத்தைக் கண்டார். அவரது விரக்தியான நிலையில், அதை அவரது மகனின் உடல் என்றே நினைத்தார். அவரது தலை முடியைப் பிய்த்துக் கொண்டு, மாரில் அடித்துக்கொண்டு, கட்டுப்படுத்த முடியாமல் அழுதார்.

இறுதியாக, அவர் மகனின் உடல் தகனத்திற்கான ஒரு சடங்கை ஏற்பாடு செய்தார். சாம்பலைச் சேகரித்து அதை மிகவும் விலையுயர்ந்த பட்டுத் துணியில் செய்யப்பட்ட ஒரு பையில் வைத்தார். அவர் வேலை செய்யும் போது, தூங்கும்போது, சாப்பிடும்போது என்று எப்போதுமே அந்தச் சாம்பல் பையைத் தூக்கிக்கொண்டு செல்வார். அடிக்கடி அவர் தனியாக அமர்ந்து, பல மணி நேரத்திற்கு அழுது கொண்டிருப்பார்.

ஒரு நாள் அவரது மகன் கொள்ளையரிடம் இருந்து தப்பித்துத் தனது வீட்டைக் கண்டுபிடித்து வந்து சேர்ந்தான். அவன் தனது தந்தையின் புதிய வீட்டிற்கு வந்து கதவைத் தட்டியபோது நள்ளிரவாகிவிட்டது. சாம்பல் பையைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு, அந்த மனிதர் அப்போது படுக்கையில் படுத்து அழுதுகொண்டிருந்தார்.

“யார் அது?” என்று அவர் கேட்டார்.
“அப்பா, நான் தான் உங்கள் மகன். கதவைத் திறக்கவும்,” என்று அந்தக் குழந்தை பதில் அளித்தது.
அவரது வேதனையிலும், குழப்பத்திலும் சில விஷமத்தனமான சிறுவர்கள் அவரைக் கொடூரமாக ஏமாற்றி விளையாடுவதாக மட்டுமே அவரால் நினைக்க முடிந்தது.
“இங்கிருந்து போ, என்னைத் தனியாக விட்டு விடு,” என்று கத்திவிட்டு மீண்டும் அழத் தொடங்கினார்.

மீண்டும் மீண்டும் அந்தப் பையன் தட்டினான், ஆனால் அவனது தந்தை அவனை அனுமதிக்க மறுத்துவிட்டார். இறுதியாக, அவன் மெதுவாகத் திரும்பி அங்கிருந்து சென்றுவிட்டான். அதன்பிறகு அப்பாவும் மகனும் பார்த்துக் கொள்ளவே இல்லை.

புத்தர் தனது கதையின் முடிவிற்கு வந்தபோது, “சில சமயம், எங்காவது நீங்கள் எதையாவது சத்தியம் என்று எடுத்துக்கொள்வீர்கள். ஆனால் அதையே நீங்கள் வலுவாகப் பிடித்துக் கொண்டால், சத்தியமே உங்களிடம் நேரில் வந்து உங்கள் கதவைத் தட்டினாலும், நீங்கள் கதவைத் திறக்க மாட்டீர்கள்,” என்று கூறினார்.
(திக் நாட் ஹான்ஹ் – Thich Nhat Hanh. அமைதியாக இருங்கள்.)

நமது அமைதியைக் குலைக்கும், ஒரு நச்சரிக்கும் சிந்தனைக்கு இரண்டு முக்கியமான அம்சங்கள் உள்ளன. முதலாவது அந்தச் சிந்தனை, இரண்டாவது நமது அதிகப்படியான கற்பனை. சிந்தனையைக் கைவிடுவது, தியானத்தில் ஒரு பயிற்சியாகும். அதைக் கற்றுக்கொள்ளவும், வளர்த்துக் கொள்ளவும் முடியும். அதில் தேர்ச்சி பெற்றுவிட்டால், ஒரு சிறிய சுய உரையாடலை நடத்தி, மெதுவாக நேர்மறையான ஏதாவது ஒன்றில் உங்கள் கவனத்தை மாற்ற வேண்டும். மறுபுறம், மிதமிஞ்சிய கற்பனை ஒரு ஆன்மீகச் சீர்கேடு போன்றதாகும். இது அதிகப்படியான அல்லது கட்டாயச் சிந்தனைக்கு ஒத்ததாகும். நாம் விஷயங்களைக் கற்பனை செய்யத் தொடங்கும் போது, அந்த எண்ணம் ஒரு பலூனைப் போல் பெரிதாகி, நம் முழு மனதையும் ஆக்கிரமிக்கிறது. விரைவில் நாம் பார்க்கும், சிந்திக்கும், கேட்கும், கவனிக்கும் அனைத்தும் அந்த ஒரு சிந்தனையுடன் இணைக்கப்படுகிறது. ஏதேனும் ஒன்று இணைக்கப்படாத போதும், உங்கள் மனது அதை எப்படியாவது இணைத்துவிடும். அதுவே நமது உண்மையாக ஆகிவிடுகிறது. நம் வாழ்க்கையில் எல்லாவற்றிலும், நமது மனப்பான்மையையும், நடத்தையையும் அது நிர்வகிக்கத் தொடங்குகிறது. பயம், அளவுக்கு மீறிய அச்சம், பதட்டம் மற்றும் பிற மோசமான உணர்ச்சிகள் நம் மனதை நிரப்புகின்றன.

நீடித்த எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் பொதுவாக அலைகளைப் போல் வருகின்றன. ஒரு சராசரி நபர் தொடர்ந்து அலைக்கழிக்கப்படுகிறார். ஒரு நல்ல தியானம் செய்பவர் இந்த அலைகளின் மேல் மிதந்து செல்லக் கற்றுக் கொள்கிறார். ஒரு மூர்க்கமான சிந்தனையைப் பற்றிய முதல் விஷயம், அது தோன்றும் தருணத்தை அடையாளம் காண வேண்டும். அத்தகைய கவனம் இல்லாமல், அந்தச் சிந்தனையிலிருந்து விலகிச் செல்ல முடியாது, மற்றும் வேறு எங்காவது நம் கவனத்தை மாற்றிக் கொள்ள முடியாது. ‘மூர்க்கமான சிந்தனை என்பது என்னுடைய கண்டுபிடிப்பு அல்ல என்பதை நான் கூறிக்கொள்கிறேன். சுவாமி சங்கராநந்தாவின், ‘தி யோகா ஆஃப் காஷ்மீர் சைவிசம்’ (The Yoga of Kashmir Shaivism) மில் நான் முதலில் பார்த்தேன். அவர் இந்த எண்ணங்களைப் பற்றி என்ன எழுதுகிறார், பார்க்கலாம்:

நான் அடிக்கடி மூர்க்கமான எண்ணங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறேன். இவை, “நான் பலவீனமாக இருக்கிறேன், நான் உபயோகமற்றவன், நான் நல்லவன் இல்லை, என்னைவிட மற்ற நபர் சிறந்தவர்” என்பன போன்ற, நம்மைத் தாக்கும் எண்ணங்கள். மூர்க்கமான எண்ணங்கள் ஒரு அசாதாரண மன உளைச்சல் சம்பந்தமான நிகழ்வு ஆகும். செல்கள் தவறான பாதையை எடுத்து, அவை வாழும் உறுப்பைத் தாக்கத் தொடங்கும் போது, நாம் அதைப் புற்றுநோய் என்று சொல்கிறோம். மூர்க்கமான எண்ணங்கள், மனத்தின் ஒருவிதமான, தன் உடல் காக்கும் திறன் செயலிழப்பு ஆகும்.

பிரச்சினைகளைத் தீர்ப்பது, விஷயங்களைப் புரிந்துகொள்வது, கவிதை எழுதுவது என்று நம்முடைய நன்மைக்காகப் பயன்படுத்தப்பட வேண்டிய மனது, அதற்கு மாறாக, அது நமக்கு எதிராகத் திரும்பி பேரழிவு விளைவைக் கொடுக்கிறது. நம் சொந்த மனமே நம்மிடம் மூர்க்கமாக இருக்கும்போது, எதிரிகள் ஒரு பொருட்டே அல்ல.

உங்கள் சொந்த சக்திகளால் ஏமாற்றப்பட்ட ஒரு நிகழ்வு என்று ஒன்று இருந்தால், அது மூர்க்கமான சிந்தனையே ஆகும். ஒரு மூர்க்கமான சிந்தனை என்பது, ஏற்கனவே உங்களது ஆழ்ந்த பாதுகாப்பு முறையை ஊடுருவி, கெட்ட நோக்கத்துடன் உங்கள் சொந்த ஊரில் வாழ்கின்ற, ஒரு பயங்கரவாதியைப் போன்றதாகும். நீங்கள் இந்த ஒரு மனப்போக்கை நிறுத்த முடியும் என்றால் நீங்கள் முற்றிலும் மாறிவிடுவீர்கள். நாம் வாழ்க்கையில் ஒரு தோல்வியைச் சந்திக்கும்போது, அந்தத் தோல்வி நமக்கு அதிக மன அழுத்தத்தைத் தருவதில்லை, ஆனால் அதன் அர்த்தமாக நாம் எதை எடுத்துக் கொள்கிறோமோ அதுவே மன அழுத்தத்தைத் தருகிறது. ‘ஓ, அந்த விளையாட்டை நான் இழந்துவிட்டேன், எனவே நான் பயனற்றவன்’ என்று சொல்கிறோம். நாம் சண்டித்தனம் செய்கிறோம், நோயாளியைப் போல் தூங்குகிறோம், நம்மைச் சுற்றி உள்ள அனைவரையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறோம். நாம் தான் அதிகமாகப் பாதிப்படைகிறோம். இந்த மூர்க்கமான சிந்தனை இல்லை என்றால், “இதிலிருந்து இப்போது நான் என்ன கற்றுக் கொள்ள முடியும்? நல்லது, அடுத்த முறை நான் அதைச் செய்வேன்,” என்று சாதாரணமாகக் கூறிக்கொள்வோம். நாம் சுத்தமாகவும் தெளிவாகவும் அதைவிட்டு நகர்கிறோம்.

உங்கள் வாழ்க்கையின் சில அம்சங்களில் நீங்கள் வெற்றிகரமாக இருந்தால், உங்கள் மனத்தின் செயல்பாட்டை நீங்கள் ஆய்வு செய்தால், அந்த அம்சங்களில் நீங்கள் மூர்க்கமான சிந்தனைகளால் பாதிக்கப்படவில்லை என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். மூர்க்கமான சிந்தனைகளின் தீங்கு விளைவிக்கும் கீழ்நோக்கிய சுழற்சியில் சிக்கிக்கொண்டு நம்மை நாமே சிதைத்துக் கொள்கிறோம்.

(சுவாமி சங்கராநந்தா. ‘தி யோகா ஆஃப் காஷ்மீர் சைவிசம்: கான்சியஸ்னஸ் ஐஸ் எவ்ரிதிங்’ – The Yoga of Kashmir Shaivism: Consciousness is Everything.)

நமது வாழ்க்கை மற்றும் எண்ணங்களின் சுழற்சித் தன்மையை நாம் ஏற்றுக் கொள்ளும்போது, நாம் ஓரளவு அமைதி ஆகிறோம். வாழ்க்கையில் அனைத்துமே நாம் விரும்பும் வழியில் நடக்க முடியாது என்பதை உணர ஆரம்பிக்கிறோம். என் அனைத்துக் கனவுகளும் நிறைவேறாது. பிரபஞ்சமும் அதன் சொந்தத் திட்டங்களைக் கொண்டுள்ளது. ஒருமுறை இதைப் புரிந்து கொண்டுவிட்டால், மீதமுள்ளவை வெகு சுலபமானவை ஆகும். இங்கே வாழ்க்கையில் மூர்க்கமான சிந்தனைகளைக் கட்டுக்குள் வைக்க, என் சொந்த செயல் முறைக் குறிப்பு. தினமும் அதை உட்கொண்டு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். பின்வருமாறு:

ஓம் ஸ்வாமி புட்டிங்

எல்லாச் சூழ்நிலைகளிலும் உங்கள் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள உதவும் எந்த ஒரு தனி பிரார்த்தனையோ, தியானமோ அல்லது முறையோ இல்லை. வாழ்க்கையை அது எந்த வழிமுறையில் வருகிறதோ அப்படியே அனுபவிக்க வேண்டும். நம்மால் மாற்றக்கூடிய சில விஷயங்கள் உள்ளன, ஆனால் பெரும்பாலானவை எந்த விதமான சூழ்நிலையிலும், நமது நடத்தை மற்றும் நாம் தேர்ந்தெடுக்கும் வார்த்தைகளை அதிகாரம் செய்கின்ற வாழ்க்கையைப் பற்றிய நமது அணுகுமுறையைப் பொறுத்து இருக்கிறது. மற்றும் அணுகுமுறையானது நமது மனநிலை மற்றும் நம்பிக்கைகளால் தீர்மானிக்கப்படுகிறது. மனநிலையைத் தியானம், ஞானம் மற்றும் அகத்தாண்டுதல் மூலம் மாற்றலாம். கல்வி, அனுபவம் மற்றும் நுண்ணறிவினால் நம்பிக்கைகளை மாற்ற முடியும்.

நள்ளிரவில் ஒரு மனிதர் ஒரு கல்லறை வழியாகச் செல்ல வேண்டியிருந்தது. அவரைத் திகிலூட்டும் மற்றும் பிரமிக்க வைக்கும்படியாக கல்லறையில் இருந்து இசை வருவதைக் கேட்டார். யாரோ ஒருவர் மொஸார்ட்டின் ஒரு புகழ்பெற்ற சிம்பொனியைத் தலைகீழாக வாசித்துக் கொண்டிருந்தார். அதிர்ச்சியடைந்த அவர் அங்கிருந்து வேகமாக வெளியேறி, கல்லரை கவனிப்பாளரிடம் வந்தார்.

அந்த மனிதர் பயத்தினால் திக்கித்திக்கி , “கடவுளே, அந்தக் கல்லறை… அந்தக் கல்லறை… அந்தக் கல்லறையில் இருந்து இசை வெளிவருவதை நான் கேட்டேன்,” என்று கூறினார்.
“இதில் என்ன ஆச்சரியம் உள்ளது? அங்கே தான் மொஸார்ட்டின் புதைக்கப்பட்ட இடம் உள்ளது!” என்று கவனிப்பாளர் கூறினார்.
“அப்படி என்றால், அவரது ஆவி தலைகீழாகப் பியானோ வாசிக்கிறதா, என்ன? இது மிகவும் பயமுறுத்தும் விதமாக உள்ளது.”
“அதை எளிதாக எடுத்துக் கொள்ளுங்கள், அவர் சிதைந்து கொண்டிருக்கிறார்,” என்று காவலாளி பதிலளித்தார்.

நம் எண்ணங்களும் உணர்வுகளும் நம்மை உருவாக்குகின்றன, நம் செயல்களும் வார்த்தைகளும் நம்மைச் சிதைக்கின்றன. நம்முடைய எண்ணங்களிலும் உணர்வுகளிலும் எதை நாம் தெரிந்து கொண்டிருக்கிறோமோ, அதையே நம்முடைய செயல்களிலும் பேச்சுகளிலும் கையாளுகிறோம்.

உங்களுடைய மனம் மற்றும் இதயத்திற்கு, நல்ல எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளை ஊட்டினால், உங்கள் மனநிலை மற்றும் நம்பிக்கை தானே உன்னதமாக மாறிவிடும். இது ஒருவரின் அணுகுமுறை மாறுவதற்கு வழிவகுக்கிறது. தெய்வீகப் புட்டிங்கின் ஆறு பொருட்கள், ஒரு சிட்டிகை அளவிலான மூர்க்கமான சிந்தனையை எளிதில் அடக்குகின்றன. ஒரு புன்னகையால் அதை அழகுபடுத்தவும்.

பெருந்தன்மையுடன் இருங்கள்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email