நான் உன் மேல் அக்கறை கொண்டிருக்கிறேன். எந்த விஷயமானாலும் நான் எப்போதும் உன்னிடம் அன்பு செலுத்துவேன். ஆம், நாம் கண்டிப்பாக இந்த ஆண்டு ஒரு விடுமுறைக்குச் செல்வோம். நான் ஏழு மணிக்குச் சத்தியமாக வீட்டிற்கு வந்து விடுவேன். நான் மீண்டும் உன்னிடத்தில் கோபம் கொள்ள மாட்டேன். இது பேன்ற பல வாக்குறுதிகளை மக்கள் ஒருவருக்கொருவரும், தமது அன்புக்குரியவர்களிடமும், பொதுவாக யாரிடம் அக்கறை கொண்டுள்ளனரோ அவர்களிடமும் செய்கின்றனர். அவர்கள் கூறும் இது போன்ற வார்த்தைகளைப் பொய்யாக உரைக்கவில்லை. அவற்றை உணர்ந்து கடைப்பிடிக்க நினைக்கிறார்கள். இருந்தாலும், பலரால் தங்களால் உறுதியளிக்கப்பட்ட பெரும்பாலான வாக்குறுதிகளைக் கடைப்பிடிக்க முடிவதில்லை. அப்படியானால் இது போன்ற பெரிய வாக்குறுதிகளை ஒருபோதும் மதித்துக் கொடுக்கவில்லை என்று அர்த்தமா? உண்மையில் அவ்வாறு இல்லை.

உலகில் ஒன்றுதான் நிரந்தரமானது, அதுவே மாற்றம் என்பது. இந்த உலகம் உயிருள்ளவை மற்றும் உயிரற்றவற்றால் உருவாக்கப்பட்டுள்ளது. உயிருள்ளவை, உயிரற்றவற்றை மாற்றி, மாற்றத்தின் சுழற்சியைத் தொடர்ந்து இயக்கிக் கொண்டிருக்கிறது. எனவே, சாராம்சம் என்னவென்றால் மக்கள் மாறுகிறார்கள்; எப்போதும் அது நல்லதாகவோ அல்லது மோசமானதாகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் மாறுகிறார்கள். மேலும், அவர்கள் மாறும்போது, அவர்கள் முன்னால் செய்த வாக்குறுதிகள், இனியும் அதே விதமாக கடைப்பிடிக்க நினைப்பதில்லை. இதை நீங்கள் ஏற்றுக் கொண்டால் உங்களது வாழ்க்கை எளிதானதாக ஆகும். நீங்கள் ஒருவரை அவர்கள் ஒருமுறை கொடுத்த உறுதிமொழிக்காக பிடித்துக் கொள்ள விரும்பினால், நல்ல அதிர்ஷ்டத்திற்குக் காத்திருங்கள்!

ஒரு ஜோடி தங்கள் உறவில் சந்தோஷமாக இல்லை. அவர்கள் ஆசீர்வாதம் மற்றும் வழிகாட்டலைப் பெற தங்கள் ஆன்மீக குருவிடம் சென்றனர். அவர்கள் தங்களது பிரச்சனைகளின் நிலைமையை விவரித்து அவர்களுக்கு நல்ல பாதையைக் காட்டுமாறு குருவிடம் வேண்டினர். அவர் ஒரு நிமிடம் அவர்களது விவகாரத்தைப் பற்றி யோசித்து, நீங்கள் செய்ய வேண்டிய இரண்டு விஷயங்களை நான் சொல்வேன் என்றார். அதை ஒழுங்காகப் பின்பற்றினால் உங்கள் உறவில் நல்லிணக்கம் திரும்ப ஏற்படும் என்றார். ஆகவே:

“முதலில், எந்த விஷயமாக இருந்தாலும் எப்போதும் உங்கள் வாக்குறுதியைக் கடைப்பிடியுங்கள்” என்று குரு கூறினார்.
“இரண்டாவது, எந்த விஷயமாக இருந்தாலும் எப்போதும் வாக்குறுதி செய்ய வேண்டாம்” என்று அவர் முடித்தார்.

உங்களைச் சுற்றிப் பார்த்தால், உறவுமுறை அதிக நெருக்கமாக இருக்கும்போது மாற்றத்திற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது, இதனால் இன்னும் அதிகமான சரிவிற்கு வழிவகுக்கிறது. இப்படியாகத் தான் அது வேலை செய்கிறது. ஒவ்வொருவரும் தனக்கென்று ஒரு தனிமையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே முக்கியமான செயலாகும். ஒவ்வொருவரும் தடையின்றி எதையும் செய்ய அவரவர்க்குப் போதிய இடம் இருக்க வேண்டும். தில்லி, சாந்தினி சவுக்கில் பாலே நிகழ்ச்சி நடப்பதைப் போலவும், லண்டன், டோட்டன்ஹாம் நீதிமன்றம் சாலையில் கால்பந்து விளையாடுவது போலவும் கற்பனை செய்து பாருங்கள். கூட்டம் நிரம்பி வழியும்! உங்கள் உறவு எதிர்பார்ப்புகளின் கூட்டமாக ஆகிவிடும் போது, விளையாடுவதற்கு இடமில்லாமல் போகிறது.

மற்ற நபரை மாற்றுவது இலாபகரமானதாகத் தோன்றுகிறது; மற்ற நபரை உங்களுக்குத் தகுத்தாற் போல் மாற வைப்பது கூட சாத்தியமாகத் தோன்றுகிறது. உண்மை என்னவென்றால் அது பேராவலாக உள்ளது. உங்களது சொந்த மகிழ்ச்சிக்காக, உங்களது சொந்த நலனிற்காக, உங்களது சொந்த அமைதியான மனதிற்காக, உங்களையே மாற்றிக் கொள்வது மிகவும் எளிதானதாகும்.

நான் ஒரு முறை எங்கோ ஒரு அழகான வாசகத்தைப் படித்தேன். “ஒருபோதும் கோபமாக இருக்கும் போது எந்த முடிவையும் எடுக்காதீர்கள் மற்றும் ஒருபோதும் மகிழ்ச்சியாக இருக்கும் போது எந்த வாக்குறுதியையும் அளிக்காதீர்கள்.” இது தங்கத்தில் பொறிக்கப்பட்ட ஞான வார்த்தைகளாகும்.

சந்தோஷமாக இருங்கள்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook0Tweet about this on TwitterShare on LinkedIn0Google+0Email to someone