பஜ கோவிந்தம் தொடரின் ஆறு பகுதிகளின் கடைசி பகுதியாகும்.

गेयं गीता नाम सहस्रं ध्येयं श्रीपति रूपमजस्रम्। 
नेयं सज्जन सङ्गे चित्तं देयं दीनजनाय च वित्तम् ॥27॥
கேயம் கீதா னாம ஸஹஸ்ரம் த்யேயம் ஸ்ரீபதி ரூபமஜஸ்ரம் 
னேயம் ஸஜ்ஜன ஸங்கே சித்தம் தேயம் தீனஜனாய ச வித்தம் (27)
புனிதமான பெயர்களை உச்சரியுங்கள். இறைவனின் மகிமையைப் பாடுங்கள். உன்னதமானவர்களுடன் இணைந்திருங்கள் மற்றும் தேவையில் உள்ளவர்களுக்குக் கொடுங்கள்.

सुखतः क्रियते रामाभोगः पश्चाद्धन्त शरीरे रोगः। 
यद्यपि लोके मरणं शरणं तदपि न मुञ्चति पापाचरणम् ॥28॥
ஸுகதஃ க்ரியதே ராமாபோகஃ பஶ்சாத்தன்த ஶரீரே ரோகஃ  
யத்யபி லோகே மரணம் ஶரணம் ததபி ன முஞ்சதி பாபாசரணம் (28)
இன்பத்தைப் பெறுவதற்காக நீங்கள் பயன்படுத்தும் உங்கள் உடல் ஒரு நாள் நோயுற்றதாக ஆகும். இறுதியில் இறப்பில் அடைக்கலம் அடையப் போகிறது, ஒழுக்கக்கேடான மற்றும் பாவம் நிறைந்த நடத்தையில் ஏன் ஈடுபட வேண்டும்.

अर्थंमनर्थम् भावय नित्यं नास्ति ततः सुखलेशः सत्यम्। 
पुत्रादपि धनभजाम् भीतिः सर्वत्रैषा विहिता रीतिः ॥29॥
அர்தமனர்தம் பாவய னித்யம் னாஸ்தி ததஃ ஸுக லேஶஃ ஸத்யம் 
புத்ராதபி தனபாஜாம் பீதிஃ ஸர்வத்ரைஷா விஹிதா ரீதிஃ (29)
எல்லாப் பொருட்களும் துயரத்தின் விதைகளே ஆகும். அதைப்பற்றி சிந்தியுங்கள். எவ்வளவு அதிகமாக உங்களிடம் உள்ளதோ, அவ்வளவு அதிகமாக இழப்பின் பயம் உங்களிடம் இருக்கும். உலகளவில், செல்வந்தர்கள் தங்களிடம் சொந்தமாக உள்ளவைகளிடமே பயப்படுகிறார்கள்.

प्राणायामं प्रत्याहारं नित्यानित्य विवेकविचारम्। 
जाप्यसमेत समाधिविधानं कुर्ववधानं महदवधानम् ॥30॥
ப்ராணாயாமம் ப்ரத்யாஹாரம் னித்யானித்ய விவேக விசாரம்  
ஜாப்யஸமேத ஸமாதி விதானம் குர்வ வதானம் மஹதவதானம் (30)
இந்த உலகின் மாயத் தன்மையைப் பற்றி யோசியுங்கள். உங்கள் சுவாசம், உணவு மற்றும் உலகத்துடனான உங்களது ஈடுபாடு ஆகியவற்றை கவனமாக ஒழுங்குபடுத்திக் கொள்ளவும். எப்போதும் நிகழ் காலத்திலேயே இருந்து, ஒரு எச்சரிக்கையான மனதுடன், இறைவனுடன் இரண்டறக் கலந்து விடுங்கள்.

गुरुचरणाम्बुज निर्भर भक्तः संसारादचिराद्भव मुक्तः। 
सेन्द्रियमानस नियमादेवं द्रक्ष्यसि निज हृदयस्थं देवम् ॥32॥
குரு சரணாம்புஜ னிர்பர பக்தஃ ஸம்ஸாராத் சிராப்தவ முக்தஃ 
ஸேன்த்ரிய மானஸ னியமாதேவம் த்ரக்ஷ்யஸி னிஜ ஹ்றுதயஸ்தம் தேவம் (32)
உங்கள் குருவின் தாமரை போன்ற பாதங்களில் அடைக்கலம் புகுந்து முக்தி அடையுங்கள். கட்டுப்பாடான உணர்ச்சிகள் மற்றும் ஒரு தெளிந்த மனத்தோடு இருந்தால் உங்கள் இஷ்ட தெய்வம், உங்கள் இதயத்திலேயே பிரகாசிப்பார்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email