பஜ கோவிந்தம் தொடரின் ஆறு பாகங்களில் இது ஐந்தாவது பகுதியாகும்.
रथ्याचर्पट-विरचित-कन्थः पुण्यापुण्य-विवर्जित-पन्थः। योगी योगनियोजित चित्तः रमते बालोन्मत्तवदेव ॥22॥ ரத்யா சர்பட விரசித கன்தஃ புண்யாபுண்ய விவர்ஜித பன்தஃ யோகீ யோக னியோஜித சித்தஃ ரமதே பாலோன்மத்தவதேவ (22) உலகின் நீடித்த பழமை மரபுகளை விட்டுவிட்டு, உயர்ந்த பேரின்பத்தில் லயித்திருக்கும் ஒரு யோகி, பயமின்றி, சுதந்திரமாக ஒரு குழந்தையைப் போல் அலைந்து திரிகிறார். कस्त्वं कोऽहं कुत आयातः का मे जननी को मे तातः। इति परिभावय सर्वमसारम् विश्वं त्यक्त्वा स्वप्नविचारम् ॥23॥ கஸ்த்வம் கோஹம் குத ஆயாதஃ கா மே ஜனனி கோ மே தாதஃ இதி பரிபாவய ஸர்வம ஸாரம் விஷ்வம் த்யக்த்வா ஸ்வப்ன விசாரம் (23) யார் யாராக இருக்கிறார்கள்? நீங்களும் மற்றவர்களும் எங்கிருந்து வருகிறீர்கள்? புத்திசாலித்தனமான அறிவைக் கைவிட்டு விடுங்கள். இந்த உலகம் ஒரு கனவைப் போன்றே உண்மையானதல்ல மற்றும் கனவைப் போன்றே தற்காலிகமானது. त्वयि मयि चान्यत्रैको विष्णुः व्यर्थं कुप्यसि सर्वसहिष्णुः। सर्वस्मिन्नपि पश्यात्मानं सर्वत्रोत्सृज भेदाज्ञानम् ॥24॥ த்வயி மயி சான்யத்ரைகோ விஷ்ணுஃ வ்யர்தம் குப்யஸி ஸர்வஸஹிஷ்ணுஃ ஸர்வஸ் மின்னபி பஷ்யாத்மானம் ஸர்வத் தரோத்ஸ்ருஜ பேதாஞானம் (24) அதே கடவுள் அனைவருள்ளும் முழுமையாக வாழ்கிறார். ஒருவரும் விதிவிலக்கல்ல. அனைவருக்குள்ளும் ஒத்த ஆன்மாவைப் பாருங்கள். உங்கள் கட்டுப்பாடான சீரமைப்பில் இருந்து வெளியே வாருங்கள். शत्रौ मित्रे पुत्रे बन्धौ मा कुरु यत्नं विग्रहसन्धौ। भव समचित्तः सर्वत्र त्वं वाछंसि अचिराद् यदि विष्णुत्वम्॥25॥ ஶத்ரௌ மித்ரே புத்ரே பன்தௌ மா குரு யத்னம் விக்ரஹ ஸன்தௌ பவ ஸமசித்தஃ ஸர்வத் ரத்வம் வாச்ஸி அசிராத் யதி விஷ்ணுத்வம் (25) நீங்கள் சொந்தம் என்று அழைக்கிறவர்களுடன் மிகுந்த பற்றுதலுடன் இருக்காதீர்கள் அல்லது உங்கள் எதிரிகளை வெறுக்காதீர்கள். ஒரு நடுநிலையான மனத்துடன் அனைவருள்ளும் அதே தெய்வீகத்தன்மையைப் பாருங்கள், குறிப்பாக நீங்களும் தெய்வத்துடன் ஒன்றாக இருக்க விரும்பினால். कामं क्रोधं लोभं मोहं त्यक्त्वात्मानं भावय कोऽहम्। आत्मज्ञानविहीना मूढाः ते पच्यन्ते नरकनिगूढाः ॥26॥ காமம் க்ரோதம் லோபம் மோஹம் த்யக்த் வாத்மானம் பாவய கோஹம் ஆத்மஞான விஹீனா மூடாஃ தே பச்யன்தே னரக னிகூடாஃ (26) தற்காலிக இன்பத்திற்காக அழகான வடிவங்களின் பின்னால் செல்லும் மோகத்தை நிறுத்துங்கள். கோபம், பேராசை மற்றும் பற்றுதல்களைக் கை விடுங்கள். மெய்யான அறிவு மட்டுமே உங்களைத் துன்பங்களில் இருந்து காப்பாற்ற முடியும்.
அமைதி.
சுவாமி