இது பஜ கோவிந்தம் தொடரின் ஆறு பாகங்களில், நான்காவது பகுதி ஆகும். நான் இங்கு பஜ கோவிந்தத்தை என்னுடைய கருத்துக்களால் நிரப்பப்பட்டுள்ள மொழிபெயர்ப்பை எழுதுகிறேன்.

कुरुते गंगासागरगमनं व्रतपरिपालनमथवा दानम्। 
ज्ञानविहिनः सर्वमतेन मुक्तिः न भवति जन्मशतेन ॥17॥
குருதே கங்கா ஸாகர கமனம் வ்ருத பரிபாலன மதவா தானம் 
ஜ்ஞான விஹின􏰀ஃ ஸ􏰁ர்வமதேன முக்திஃ ன பவதி ஜன்ம ஶதேன (17)
ஒருவரின் முக்தி அவர்களின் உள் அறிவைச் சார்ந்துள்ளது. யாத்திரைகள் மற்றும் விரதங்கள் போன்ற வெளிப்புற நடவடிக்கைகளைச் சார்ந்து இருப்பதில்லை.

सुर-मन्दिर-तरु-मूल-निवासः शय्या भूतलमजिनं वासः। 
सर्व-परिग्रह-भोग-त्यागः कस्य सुखं न करोति विरागः ॥18॥
ஸுரமன்திர தரு மூல னிவாஸஃ ஶய்யா பூதலமஜினம் வாஸஃ  
ஸர்வ பரிக்ரஹ போகத்யாகஃ கஸ்ய ஸுகம் ன கரோதி விராகஃ (18)
பதுக்கல் மற்றும் உணர்வுகளின் திருப்தி ஆகியவற்றைத் துறந்த ஒரு வாழ்க்கையை வாழ்பவர்கள் ஒரு மகிழ்ச்சியான நிலையை அனுபவிப்பர்.

योगरतो वा भोगरतो वा संगरतो वा संगविहीनः। 
यस्य ब्रह्मणि रमते चित्तं नन्दति नन्दति नन्दति एव ॥19॥
யோகரதோ வா போகரதோ வா ஸங்கரதோ வா ஸங்கவிஹீனஃ 
யஸ்ய ப்ரஹ்மணி ரமதே சித்தம் னன்ததி னன்ததி னன்ததி ஏவ (19)
யோகாவின் பாதையில் போய்க் கொண்டிருந்தாலோ அல்லது பொருள் உலகில் உறுதியாக இணைந்திருந்தாலோ, கடவுளின் மீது நிலைபெற்றவராக இருக்கும் ஒருவர் உயர்ந்த பேரின்பத்தைக் காண்கிறார்.

भगवद्गीता किञ्चिदधीता गंगा-जल-लव-कणिका-पीता। 
सकृदपि येन मुरारिसमर्चा तस्य यमः किं कुरुते चर्चाम् ॥20॥
பகவத்கீதா கிஞ்சித தி􏰀தா கங்கா ஜலலவ கணிகா பீதா  
ஸக்றுதபி யேன முராரி ஸம􏰁ர்சா தஸ்ய யமஃ கிம் குருதே சர்􏰁சாம் (20)
சுய ஆய்வுகளில் நேரத்தைச் செலவிடுபவர்கள், புனிதப் பெயர்களை உச்சரித்துக் கொண்டிருப்பவர்கள், பக்தியின் தேனைக் குடித்துக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் விடுதலையைப் பெறுகிறார்கள். 

पुनरपि जननं पुनरपि मरणं पुनरपि जननीजठरे शयनम्। 
इह संसारे बहुदुस्तारे  कृपयापारे पाहि मुरारे ॥21॥
புனரபி ஜனனம் புனரபி மரணம் புனரபி ஜனனீ ஜடரே ஶயனம்  
இஹ ஸம்ஸாரே பஹு துஸ்தாரே க்றுபயாபாரே பாஹி முராரே (21)
கடவுளே! பிறப்பு மற்றும் இறப்புகளின் சுழற்சிகளின் வழியாக இனிமேலும் நான் செல்ல விரும்பவில்லை. பொருள்களின் இருப்பாகிய இந்த கடலைக் கடக்கத் தயவு செய்து எனக்கு உதவவும்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email