இது பஜ கோவிந்தத்தின் ஆறு பகுதித் தொடரின் மூன்றாம் பகுதி ஆகும். நான் இங்கு பஜ கோவிந்தத்தை என்னுடைய கருத்துக்களால் நிரப்பப்பட்டுள்ள மொழிபெயர்ப்பை எழுதுகிறேன்.

दिनमपि रजनी सायं प्रातः शिशिरवसन्तौ पुनरायातः। 
कालः क्रीडति गच्छत्यायुः तदपि न मुञ्चति आशावायुः ॥12॥
தினமபி ரஜனீ ஸாயம் ப்ராதஃ ஶிஶிர வஸன்தௌ புனராயாதஃ 
காலஃ க்ரீடதி கச்சத்யாயுஃ ததபி ன முஞ்சதி ஆஶாவாயுஃ (12)
ஒரு நாளின் நான்கு காலங்கள் மற்றும் பருவங்களின் மாற்றங்கள் ஒன்றை ஒன்று தொடர்கின்றன. வாழ்க்கையின் பிடிமானம், இறப்பின் விளையாட்டால் புரட்டப்படுகிறது. இருந்தாலும், நாமது ஆசை என்ற சுழல் காற்றினால் நாம் தொடர்ந்து சுழற்றி அடிக்கப்படுகிறோம்.

का ते कान्ता धनगतचिन्ता वातुल किं तव नास्ति नियन्ता। 
त्रिजगति सज्जन संगतिरेका भवति भवार्णवतरणे नौका ॥13॥
கா தே கான்தா தனகத சின்தா வாதுல கிம் தவ னாஸ்தி னியன்தா 
த்ரிஜகதி ஸஜ்ஜன ஸங்கதிரேகா பவதி பவா􏰁ர்ணவ தரணே னௌகா (13)
பெண் மற்றும் தனம் பற்றி நீங்கள் கொண்டிருக்கும் வீண் கவலைகளின் சுமையால் என்ன கிடைக்கப்போகிறது? உங்களை வழி நடத்த உங்களுக்கு ஒரு குரு இருக்கிறாரா? வாழ்க்கை என்னும் கடலை, ஞானிகளிடம் கொண்டுள்ள தொடர்பாகிய கப்பலைக் கொண்டு தான் கடக்க முடியும்.

जटिलो मुण्डी लुञ्चित केशः काषायाम्बर-बहुकृतवेषः। 
पश्यन्नपि च न पश्यति मूढः उदरनिमित्तं बहुकृत शोकः ॥14॥
ஜடிலோ முண்டீ லுஞ்சித கேஶஃ காஷாயாம்பர பஹுக்றுத வேஷஃ 
பஶ்யன்னபி ச ன பஶ்யதி மூடஃ உதரனிமித்தம் பஹுக்றுத ஷோகஃ (14)
ஒவ்வொரு மனிதனும் ஜடா முடியோ அல்லது மொட்டையோ, காவி உடையோ அல்லது சாதாரணமான எந்த உடையோ, எப்படி இருந்தாலும் அவர்கள் உழைப்பது உணவிற்காகவே. நீங்கள் அதைப் பார்த்தாலும், காணாதது போல் குருடாக இருப்பதையே தேர்ந்தெடுக்கிறீர்கள்.

अङ्गं गलितं पलितं मुण्डं दशन विहीनं जातं तुण्डम्। 
वृद्धो याति गृहीत्वा दण्डं तदपि न मुञ्चति आशापिण्डम् ॥15॥
அங்கம் கலிதம் பலிதம் முண்டம் தஶன விஹினம் ஜாதம் துண்டம்  
வ்றுத்தோ யாதி க்றுஹீத்􏰀வா தண்டம் ததபி ன முஞ்சதி ஆஶா பிண்டம் (15)
உடல் தளர்ந்து, தலை வழுக்கையாகி, பற்கள் விழுந்து — குச்சி இல்லாமல் நடக்கக் கூட முடியாமல் உள்ள ஒரு வயதான மனிதர், இந்தப் பொருள் உலகை விட இயலாமல், தனது ஆசைகளை பிடித்துக் கொண்டு இருக்கிறார்.

अग्रे वह्निः पृष्ठेभानुः रात्रौ चिबुक-समर्पित-जानुः। 
करतलभिक्षा तरुतलवासः तदपि न मुञ्चति आशापाशः ॥16॥
அக்ரே வஹ்னிஃ ப்றுஷ்டே பானுஃ ராத்ரௌ சுபுக ஸம􏰁ர்பித ஜானுஃ  
கரதல பிக்‌ஷா தருதல வாஸஃ ததபி ன முஞ்சதி ஆஶா பாஶஃ (16)
முன்புறம் நெருப்பும், பின்புறம் சூரியனும் உங்களது நேரத்தை எரித்துக் கொண்டிருக்கின்றன. மரத்தடியில் அமர்ந்து கடுந்தவம் செய்வதோ அல்லது பிக்‌ஷா எடுப்பதோ நம்மை இந்தத் தளையிலிருந்து விடுவிக்காது. 

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email