இது பஜ கோவிந்தத்தின் ஆறு பகுதித் தொடரின் இரண்டாம் பகுதி ஆகும். நான் இங்கு பஜ கோவிந்தத்தை என்னுடைய கருத்துக்களால் நிரப்பப்பட்டுள்ள மொழிபெயர்ப்பை எழுதுகிறேன்.

बालस्तावत् क्रीडासक्तः, तरुणस्तावत् तरुणीसक्तः। 
वृद्धस्तावत् चिन्तामग्नः पारे ब्रह्मणि कोऽपि न लग्नः ॥7॥
பால ஸ்தாவத் க்ரீடாஸக்தஃ, தருண ஸ்தாவத் தருணீஸ􏰀க்தஃ
வ்றுத்த ஸ்தாவத் சின்தாமக்னஃ பாரே ப்ரஹ்மணி கோஉபி ன லக்னஃ (7)
குழந்தைகள் எல்லோரும் விளையாடுவதில் மூழ்கி உள்ளனர். இளைஞர்கள் தன் புலன் இன்பத்தில் நேரத்தைக் கழிக்கிறார்கள். முதியவர்கள் கவலையில் மூழ்கி இருக்கிறார்கள். யாரிடமும் இறைவனை நினைக்க நேரமிருப்பதாகத் தெரியவில்லை. 

का ते कांता कस्ते पुत्रः, संसारोऽयं अतीव विचित्रः। 
कस्य त्वं कः कुत अयातः तत्त्वं चिन्तय यदिदं भ्रातः ॥8॥
கா தே கான்தா கஸ்தே புத்ரஃ, ஸம்ஸாரோக்ய் அதீ􏰀வ விசித்ரஃ 
கஸ்ய த்வம் கஃ குத அயாதஃ தத்வம் சின்தய யதித் ப்ராதஃ (8)
உன்னுடைய மனைவி (அல்லது கணவன்) மற்றும் மகன் யார்? இந்த விசித்திரமான உலகில் உன்னுடைய தோற்றத்தின் மூலத்தையும், உன்னுடைய  உண்மையான அடையாளத்தையும் பற்றி சிந்தித்துப் பார்.

सत्संगत्वे निःसंगत्वं, निःसंगत्वे निर्मोहत्वं। 
निर्मोहत्वे निश्चलतत्त्वं निश्चलतत्त्वे जीवन्मुक्तिः ॥9॥
ஸத்ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம், நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிஶ்சலதத்த்வம் நிஶ்சலதத்த்வே ஜீவன்முக்திஃ (9)
உயர்ந்தோர்களின் சேர்க்கை அமைதியான மனநிலையை உருவாக்குகிறது. அது பற்றற்ற தன்மைக்கு வழி வகுக்கிறது. பற்றற்ற தன்மையுடன் நிரந்தரத் தன்மையும் இறை ஞானமும் வருகிறது. அது விடுதலைக்கு வழி வகுக்கிறது.

वयसि गते कः कामविकारः शुष्के नीरे कः कासारः। 
क्षीणे वित्ते कः परिवारो ज्ञाते तत्त्वे कः संसारः ॥10॥
வயஸி கதே கஃ காமவிகாரஃ ஶுஷ்கே நீரே கஃ காஸாரஃ
க்ஷீணே வித்தே கஃ பரிவாரோ ஜ்ஞாதே தத்வே கஃ ஸம்ஸாரஃ (10)
நாம் ஆரோக்கியமாக இல்லையென்றால் நமக்குப் புலன்களின் இன்பம் கிடைக்காது. தண்ணீர் இல்லாத குளம் குளமல்ல. பணம் சிதறினால் எப்படி குடும்பம் சிதறுகிறதோ, அவ்வாறே ஞானம் பெற்றதுமே கற்பனை உலகிலிருந்து விடுதலை பெறுகிறோம்.

मा कुरु धन-जन-यौवन-गर्वं, हरति निमेषात्कालः सर्वम्। 
मायामयमिदमखिलं हित्वा ब्रह्म पदं त्वं प्रविश विदित्वा ॥11॥
மா குரு தன-ஜன-யௌவன-கர்வம், ஹரதி நிமேஷாத்-காலஃ ஸர்வம்
மாயாமயமிதமகிலம் ஹித்வா ப்ரஹ்ம பதம் த்வம் ப்ரவிஶ விதித்வா (11)
நமது நண்பர்கள், இளமை, சொத்து மற்றும் இந்தப் பெருமை - உங்கள் கர்வத்தைத் தூண்டும் அனைத்தையுமே இறப்பானது ஒரு நொடியில் அழித்துவிடும். இந்த உலகம் மாயையானது. பொருளில்லாமல் கட்டப்பட்ட விஸ்தாரமான கட்டிடமாகும். உயர்ந்த இலக்கை அடைய முயற்சி செய்யுங்கள்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook0Tweet about this on TwitterShare on LinkedIn0Google+0Email to someone