பஜ கோவிந்தம் அருள்மிகு சங்கராச்சார்யாரின் அழகான தொகுப்பாகும். பஜ கோவிந்தத்தை மோக முத்கரம் என்றும் அழைப்பார்கள். மோக முத்கரம் என்றால் பொருட்களின் மீதான உன்னுடைய பற்று மற்றும் தேக பந்தத்தைத் தகர்த்துவிடும் ஒன்று என்று பொருள். நான் இங்கு பஜ கோவிந்தத்தை என்னுடைய கருத்துக்களால் நிரப்பப்பட்டுள்ள மொழிபெயர்ப்பை எழுதுகிறேன். இது பஜ கோவிந்தத்தின் ஆறு பகுதித் தொடரின் முதல் பகுதி ஆகும்.

भज गोविन्दं भज गोविन्दं, गोविन्दं भज मूढ़मते। 
सम्प्राप्ते सन्निहिते मरणे, नहि नहि रक्षति डुकृञ् करणे ॥1॥
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம், கோவிந்தம் பஜ மூட மதே
ஸம்ப்ராப்தே சந்நிஹிதே மரணே, நஹி நஹி ரக்ஷதி டுக்ரிங்கரணே (1)
தவறான நம்பிக்கை கொண்டு ஏமாறும் மானிடனே, எப்பொழுதும் கடவுளின் நாமங்களை உச்சரிப்பாயாக! நீ உயிர் நீக்கும் தருணத்தில் உன்னுடைய இந்த இரண்டாம் பட்சமான உலக அறிவு மற்றும் இந்த உலகில் உள்ள எவராலும் உனக்குப் பயன் இல்லை.

मूढ़ जहीहि धनागमतृष्णां, कुरु सद्बुद्धिं मनसि वितृष्णाम्। 
यल्लभसे निजकर्मोपात्तं, वित्तं तेन विनोदय चित्तम् ॥2॥
மூட ஜஹீஹி தனாகம த்ருஷ்ணாம், குரு ஸத்புத்திம் மனஸி வித்ருஷ்ணாம்
யல்லபஸே நிஜகர்மோபாத்தம், வித்தம் தேன வினோதய சித்தம் (2)
இந்த உலகில் உள்ள பொருட்களின் மோக வலையில் சிக்கி வாழ்பவர்கள் இன்னும் அதிகம் வேண்டும் என்ற ஆசையினால் போராடிக் கொண்டே இருக்கிறார்கள். நீ நல்ல ஒழுக்கத்துடன் வாழ்ந்து, அந்த வாழ்க்கையின் வழியில் கிடைப்பதைக் கொண்டு மன நிறைவுடன் வாழவேண்டும். ஏனென்றால், நீ என்ன விதைத்தாயோ அதையே தான் அறுவடை செய்ய முடியும்.

नारीस्तनभरनाभीनिवेशं, दृष्ट्वा-माया-मोहावेशम्। 
एतन्मांस-वसादि-विकारं, मनसि विचिन्तय बारम्बाररम् ॥3॥
நாரீ ஸ்தனபர நாபீனிவேஶம், த்ருஷ்ட்வா மாயா மோஹாவேஶம்
ஏதன்மாம்ஸ வஸாதி விகாரம், மனஸி விசிந்தய பாரம் பாரம் (3)
நீ அழகான பெண் மீது மோகம் கொண்டு அலைகிறாய். எனினும் இந்த உடல் சதை, கொழுப்பு, எலும்பு போன்றவற்றால் தான் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை அறிவாயாக.

नलिनीदलगतसलिलं तरलं, तद्वज्जीवितमतिशय चपलम्।
विद्धि व्याध्यभिमानग्रस्तं, लोकं शोकहतं च समस्तम् ॥4॥
நளினீ தளகத ஸலிலம் தரலம், தத்வஜ்ஜீவித மதிஶய சபலம்
வித்தி வ்யாத்யபிமான க்ரஸ்தம், லோகம் ஶோகஹதம் ச ஸமஸ்தம் (4)
எப்படித் தாமரை இலையில் விழுந்த தண்ணீர்த் துளி மிக விரைவில் வழிந்தோடி அதன் இருப்புத் தன்மையை இழந்து விடுகிறதோ, அதே போல் நமது வாழ்க்கையும் நழுவக்கூடியதும் மற்றும் அற்ப ஆயுளில் அழியக்கூடியதும் ஆகும். உன்னைச் சுற்றி இருக்கும் பொருட்களால் ஆன இந்த உலகம் நோய்கள், நான் என்னும் அகங்காரம் மற்றும் துயரத்தினால் அவதிக்குள்ளாகிறது. அதில் அப்படிக் கவர்ச்சியானது என்ன உள்ளது?

यावद्वित्तोपार्जनसक्त: तावत् निज परिवारो रक्तः। 
पश्चात् धावति जर्जर देहे, वार्तां पृच्छति कोऽपि न गेहे ॥5॥
யாவத்வித்தோ பார்ஜன ஸக்த: தாவத் நிஜபரிவாரோ ரக்த:
பஶ்சாத் தாவதி ஜர்ஜர தேஹே, வார்த்தாம் ப்ருச்சதி கோபிந கேஹே (5)
நீ எந்தக் குடும்பத்திற்காக தொடர்ந்து சம்பாதித்தும், போராடியும் உன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்து வந்தாயோ, அந்தக் குடும்பம் நீ அவர்களுக்கு உபயோகமாக இருக்கும் வரையில் தான் உன் மீது ஆர்வமாக இருக்கும்.

यावत्पवनो निवसति देहे, तावत् पृच्छति कुशलं गेहे। 
गतवति वायौ देहापाये, भार्या बिभ्यति तस्मिन्काये ॥6॥
யாவத்பவனோ நிவஸதி தேஹே, தாவத் ப்ருச்சதி குஶலம் கேஹே
கதவதி வாயௌ தேஹாபாயே, பார்யா பிப்யதி தஸ்மின் காயே (6)
நீ மரணம் அடைந்த உடனேயே அவர்கள் உன்னுடைய இறுதிச் சடங்குகளை ஆரவாரமில்லாமல் செய்துவிடுவார்கள். நீ உன் வாழ்நாள் முழுவதும் நெருக்கமான நேரங்களை யாருடன் பகிர்ந்து கொண்டாயோ, அந்த உன்னுடைய மனைவி கூட உன் மரித்த உடலைப் பார்த்து அச்சம் கொள்வாள்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email