முன்னொரு காலத்தில் ஒரு மனிதன் இருந்தான். அவன் எப்போதும் நேர்மறையானவன். ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் போதெல்லாம், “இதைவிட மோசமாக இருந்திருக்கலாம்” என்று கூறுவான். இவ்வாறு அவன் சொல்லிக் கொண்டே இருப்பது அவனது நண்பர்களுக்கு எரிச்சலூட்டத் தொடங்கியது. ஒருவர் நேர்மறையாக எப்போதும் இருக்கும் போது, சுற்றியுள்ள சராசரியாக சிந்திப்பவர்களுக்குக் கோபத்தை மூட்டக்கூடும்.

ஒரு நாள், அவரது நண்பர் அவரிடத்தில் வந்து தான் கார் ஓட்டும்பொழுது ஒரு பயங்கரமான விபத்தில் சிக்கி அனைத்து எலும்புகளும் முறிந்துவிட்டது போலக் கனவு கண்டதாகக் கூறினார். என்னைக் குணப்படுத்த மருத்துவ உதவியாளர்கள் மிகவும் முயற்சித்துத் தோற்றனர். எனக்கு மின்சார அதிர்வுகளும் கொடுக்கப்பட்டன ஆனால் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன. இறுதியில், அவர்கள் நான் இறந்துவிட்டதாக அறிவித்தனர். மரண தூதுவர்கள் வந்து என்னை நரகத்திற்கு இழுத்துச் சென்றனர். அவர்கள் என்னைக் கடுமையாக அடித்ததில் தோல் உரிந்து நான் தாங்கமுடியாத வலியை அனுபவித்தேன். பிறகு என்னை அவர்கள் கொதிக்கும் எண்ணெயில் போட்டனர். என் உடல் எரிந்தது. நான் உதவிக்காக அழுதும் ஒருவரும் உதவவில்லை. இது போன்ற வலி முன்னால் ஒருபோதும் இருந்ததில்லை. நான் எழுந்த போது மிகவும் பயந்து போயிருந்தேன். இப்பொழுதும் பயத்துடன் இருக்கிறேன். இது ஒரு மோசமான அறிகுறியாகும் என்றார்.

ஓ, நீ பயப்பட வேண்டாம், இதைவிட மோசமாக இருந்திருக்கக்கூடும் என்றார் அவர். நீ என்ன சொல்கிறாய், இதைவிடமோசமாக இருந்திருக்கக்கூடுமா! இதைவிட மோசமாக எப்படி இருக்க முடியும்? என்று நண்பர் ஆச்சர்யமாகக் கேட்டார். அது உண்மையாகவே நடந்திருக்கலாம் அல்லவா என்று அவர் அமைதியாகக் கூறினார்.

அது உண்மையாக இருந்திருக்கலாம் — யோசித்துப் பார்க்க வேண்டிய அறிவிப்பாகும். அனைத்து உயிரினங்களுக்குள்ளும் பயம் என்ற உள்ளுணர்வு இருக்கிறது. அத்தகைய அச்சம் இயற்கையுணர்வாகவோ அல்லது கட்டுப்பாட்டிற்கு உட்பட்டதாகவோ இருக்கலாம். வரும் காலத்தில் அதைப்பற்றித் தெளிவாக விளக்குகிறேன். பயமானது ஒருவர் நேர்மறையாக இருப்பதைத் தடுக்கிறது. பலவீனமடையச் செய்கிறது. உங்களது கடந்த காலத்தைப் பார்த்தால், உங்களுக்கு ஏற்பட்ட அச்சங்களில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உண்மையில் பின்னால் நடந்தது என்றும், அதுவும் முழுமையாக நீங்கள் அச்சப்பட்டதைப்போல் நடக்கவில்லை என்றும் உணர்வீர்கள். இதுவே நீங்கள் முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டிய எண்ணமாகும். உங்கள் செயல்களைப்பற்றியோ அல்லது குறிக்கோள்களைப்பற்றியோ, நசிந்து போய் விடுவோம் என்ற பயத்தினால் நேர்மறையாக எண்ண முடியாமல் போகும் போது, கடந்த காலத்தில் இதே போல் உணர்ந்த பொழுது ஒவ்வொருமுறையும் உங்கள் பயம் தவறானது என்று நிரூபணமானதை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.

உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் காலத்தில், கணிதம் அல்லது அறிவியல் ஆசிரியரை மிக உயர்ந்தவராக, உங்கள் விதியை நிர்ணயிப்பவராக நீங்கள் பார்த்திருக்கலாம். எனினும், அவ்வாறில்லாமல் நீங்கள் அடுத்த வகுப்பிற்கும் முன்னேறியிருப்பீர்கள். ஒவ்வொரு செமஸ்டரும் அல்லது ஒவ்வொரு ஆண்டும் தேர்வுகளை எண்ணிப் பயந்திருப்பீர்கள். எப்போதும் இல்லையென்றாலும் பெரும்பாலும் தேறி இருப்பீர்கள்.

நிறுவனங்களின் நிலை இறங்குமுகமாக இருந்த போதும், பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்திருந்த போதும், பங்குச் சந்தைகள் இறங்கி இருந்த போதும், நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் நீங்கள் அந்த பாதிப்பிலிருந்து பிறகு விடுபட்டிருப்பீர்கள். அனைவருள்ளும் வாழும் அந்தத் தெய்வம், உங்களுக்கு உணவு, தங்குமிடம், உடை அல்லது மருத்துவ வசதி இவை கிடைக்கும் படியாகப் பார்த்துக் கொண்டது.

நேர்மறையாக இருப்பது மனதைத் தயார் படுத்தும் ஒரு விஷயமாகும். உங்களுக்காக இந்த உலகம் முடிவுக்கு வராது என்று அறிந்து கொள்ளுதலாகும். ஒவ்வொரு நாளும் ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என்ற வாய்ப்பை உங்களுக்கு அளிக்கிறது என்று நினைவில் கொள்ள வேண்டும். எல்லாம் ஒன்றையொன்று சார்ந்துள்ளது. நேர்மறை என்பது அந்தத் தருணத்தில் வாழ்வதாகும். எல்லாவற்றிற்கும் மேலாக, நேர்மறையாக இருப்பது நாம் தேர்ந்தெடுக்கும் ஒரு விஷயம், உண்மையில் உள்உணர்வின் தேடுதலாகும். நீங்கள் நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ இருக்க முடியும். இதன் சாராம்சம் என்னவென்றால், இந்த இருவிதமான உணர்வுகளுக்கும் எந்த உறுதியான அடிப்படையும் இல்லை. அவை நம்பிக்கையின் அடிப்படையில் பாரபட்சமான, தவறான எண்ணங்களால் உண்டானவை.

முட்டையிலிருந்து பொரிப்பதற்கு முன்னால் குஞ்சுகளைக் கணக்கெடுப்பதைவிட பொரித்த கோழிக் குஞ்சுகளைப் பராமரிப்பது முக்கியமாகும். இறுதியில் உங்களது திருப்தி, அமைதி, மகிழ்ச்சி எல்லாம் அந்த நிமிடத்தில் வாழ்வதில் தான் அடங்கியுள்ளது. கடந்த காலம் முடிந்து போனது. எதிர்காலம் நமக்குத் தெரியாதது. நன்றி, உங்களிடம் உள்ள அனைத்திற்கும் நன்றியுள்ளவராய் இருப்பதும், நம்பிக்கை, உங்களுக்குக் கிடைக்கலாம் என்பவை பற்றிய நேர்மறையான எண்ணத்துடன் இருப்பதும் மற்றும் ஒழுக்கம், உங்களுக்கு என்ன விருப்பமோ அதை அடைய இப்பொழுதே உழைப்பதும், நேர்மறையான வாழ்விற்குத் தேவையானவையாகும். நீங்கள் நன்றியுடனும், நம்பிக்கையுடனும் மற்றும் ஒழுக்கமுடனும் இருந்தால் இயல்பாகவே நேர்மறையாக உணர்வீர்கள்.

உங்களின் எல்லாவிதமான அச்சங்களோ அல்லது பெரும்பான்மையானவையோ கடந்த காலத்தில் நடந்திருந்தால் உங்கள் எதிர்காலத்தைப் பற்றியும், உங்கள் இலக்குகளைப் பற்றியும், உங்களைப் பற்றியும் சந்தேகமாகவும், எதிர்மறையாகவும் இருக்கக் காரணங்கள் உண்டு. நேர்மறையாக இருப்பதென்பது நீங்கள் அனைத்து நல்ல விஷயங்களும் தானாக நடக்கும் என்ற நம்பிக்கையுடன் ஒரு கூட்டிற்குள் மறைந்து கொண்டிருக்க வேண்டும் என்ற அர்த்தம் இல்லை. நடப்பதைப்பற்றிக் கவலைப்படாமல் இலக்கை நோக்கி வேலை ஆற்ற வேண்டும். நீங்கள் வெற்றிக் களிப்புடையவராக, வலுவானவராக, வெற்றியடைபவராக வெளி வருவீர்கள்.

நாம் அனைவரும் சாக்கடையில் இருக்கிறோம். ஆனால் ஒரு சிலர் நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று ஆஸ்கார் வைல்டு ஒரு முறை கூறினார்.

போங்கள்! விளையாடப் பழகுங்கள், வெற்றி பெறுவதற்காக விளையாடுங்கள் ஆனால் அனுபவிப்பதற்காக வெற்றி பெறுங்கள். நம்பிக்கையுடன் செயல் படுங்கள். உங்கள் கனவுகளின் பின்னால் செல்லுங்கள். அதற்கு இன்று ஒரு வாய்ப்பைப் பெற்றிருக்கிறீர்கள்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email