ஒரு வாசகர் பின்வரும் கேள்வியைக் கேட்டிருந்தார்:

நாம், நமது அழைப்பைப் பற்றி எப்படி மற்றும் எப்போது குழப்பம் அடைகிறோம்? உண்மையான அழைப்பு மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப வாழ்வது, இவற்றை எப்படி நாம் வேறுபடுத்துவது? விரும்பிய பாதை அல்லது வாழ்க்கை வழிமுறை உங்களுக்காக விதிக்கப்பட்டது இல்லை என்றால் என்ன செய்வது? பிறகு ஏன் நாம் முன்னேறுவதற்கான முதற்படியை எடுத்து வைக்க வேண்டும் என்ற அத்தகைய வலுவான உணர்வு நமக்கு ஏற்படுகிறது. ‘நீங்கள் நிகழ் காலத்தில் எடுக்கும் முடிவு உங்கள் எதிர்காலத்தில் பிரதிபலிக்கும்’, என்று நீங்கள் கூறுகின்ற போது, அதை எப்படி நாங்கள் இதனுடன் தொடர்புப்படுத்துவது? தயவு செய்து விளக்கவும்.

ஏதாவது குழப்பம் இருக்குமானால், அது உண்மையான அழைப்பு அல்ல.

உண்மையான தாகத்திற்கும், மாயையான தாகத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன? உண்மையான தாகத்தை ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே அடக்கிக் கொள்ள முடியும், அதேசமயம் மாயையான ஒன்றிலிருந்து மனத்தை மாற்ற முடியுமானால், மாயையானது உடனே மறைந்துவிடுகிறது. அழைப்பு உண்மையானதாக இருக்கும் போது, முடிவானது மிகவும் அரிதாக விதிக்கப்பட்டவரின் கைகளில் உள்ளது. இயற்கை தானாகவே அந்த நபரைத் தனது விளையாட்டு அரங்கிற்கு இழுத்துச் செல்லும். உண்மையான அழைப்பு, மனதின் ஒரு தயாரிப்பாக இருப்பது இல்லை. விரும்பிய வழியில் வாழ்வது அமைதியான சிந்தனையின் விளைவே ஆகும், இதில் தொடர்ச்சியாக உள்ள விருப்பங்களில் இருந்து ஒருவர் ஆய்வு செய்து சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறார். உண்மையான அழைப்பு, ஆழமான நிலையில் இணைகிறது. இது அனைத்து ஆழ்ந்த சிந்தனையையும் தள்ளி விடுகிறது.

நீங்கள் “விரும்பிய பாதையைத்” தேர்வு செய்து, அதில் செல்ல ஆரம்பித்த பின்னர் அது உங்களுக்கானது அல்ல என்று நீங்கள் கருதினால், நீங்கள் விரும்பிய பாதையை விட்டுவிடுங்கள். எளிய வழி! ஒருவரின் வாழ்நாள் முழுவதும் ஏதாவது ஒரு வழியையே பற்றிக் கொண்டிருக்க வேண்டும் என்று எவர் கூறுகிறார்? சோதனைக்கு ஒரு நல்ல வழி என்னவென்றால், அமைதியாக அதன்படி வாழத் தொடங்க வேண்டும். வெளியே அறிவிக்காமல் நீங்கள் விரும்பிய வழியில் வாழ்ந்து, இதுதான் உங்களுக்கு வேண்டியதா என்பதைக் கண்டு பிடியுங்கள். நேரம் எடுத்து முதலில் ஒரு குறுகிய காலத்திற்கு அவ்வாறு முழுமையாக வாழுங்கள். இதுதான் உங்களுக்கு விருப்பமானது என்பதை நீங்கள் உணர்ந்தவுடன், உங்களது முடிவைப் பொதுவில் அறிவிக்கலாம். பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் ஒரு வேடிக்கையான ஆனால் ஒரு உன்னதமான மேற்கோளைத் தற்செயலாகக் கண்டேன். அது “முதல் முறை நீங்கள் வெற்றி அடையவில்லை என்றால், யாரிடமும் சொல்ல வேண்டாம்,” என்பதாகும்.

ஏதாவது ஒரு புதிய பாதையில் பயணிக்க வேண்டுமானால், ஒருவர் தனது பழைய பாதையைக் கைவிட வேண்டும். படிக்கட்டுகளில் ஏறுவதைப் போல் கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒரு கட்டத்தில் அடுத்த படியில் ஏற, தற்போதைய படியை முழுவதுமாகக் கைவிட வேண்டும். ஒரு கால் முந்தைய படியிலும், மறு கால் அடுத்த படியிலும் வைத்துக் கொண்டு முன்னேறிச் செல்வது சாத்தியமற்றதாகும். தேடுபவர் தன்னுடைய கடந்த காலத்தின் மிக உன்னத நிலையைத் தனது நிகழ்கால (‘தேர்வு செய்த’ என்று வாசிக்கவும்) வாழ்க்கை முறையில் விரும்பும்போது ஒரு நிறைவேறாத தன்மை ஏற்படுகிறது. அது அந்த வழியில் வேலை செய்யாது. ஒரு புதிய வாழ்க்கை முறை என்பது ஒரு புதிய முறையாகவே உள்ளது. அதில் கடந்த காலத்தின் எந்தக் கூறுகளும் இல்லாமல் இருக்கலாம். ஒரு அடக்கப்பட்ட மனது எளிதாகத் தன்னை சரிசெய்து கொள்கிறது மற்றும் அதை விரும்புகிறது, ஆனால் வெளிப்புறத்தே கவனத்தைக் கொண்ட ஒரு மனது இரு உலகங்களில் இருந்தும் சிறந்தவற்றை விரும்புகிறது. பொருட்களை மையமாகக் கொண்ட வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் இதுவே உண்மையாக உள்ளது. மனது எப்போதும் நிகழ்காலத்தைக் கடந்த காலத்துடன் உங்களை ஒப்பிட வைத்து, உடனடி அல்லது தொலைதூர எதிர்காலத்தின் ஒரு படத்தை உருவாக்குகிறது.

உலகத்தை அல்ல, உங்களது ஆசைகளின் உலகத்தை நீங்கள் கைவிடத் தயாராக இருந்தால், எந்தப் பாதையிலும் பயணிப்பது எளிதாகிவிடும். “வைராக்கியா” (பொருட்களால் கிடைக்கும் வசதிகளிடம் விருப்பு வெறுப்பற்ற தன்மை மற்றும் நடுநிலை உணர்வு) இல்லாமல் எந்த ஆன்மீகப் பாதையிலும் செல்வது சாத்தியமற்றதாகும். மற்றும் “அப்யாசா” (ஆன்மீகப் பயிற்சி) இல்லாமல் இறுதிப்பயனைப் பெறச் சாத்தியமே இல்லை. பாதை கடினமானது ஆனால் ஒப்பற்ற வேலை, விலைமதிப்பற்ற வெகுமதிகளைச் சந்திக்கிறது!

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email