சில வாசகர்கள் பின்வரும் கேள்விகளை என்னுடைய மின்னஞ்சலில் அனுப்பியுள்ளனர்:

திலகம்

பலர் ஆஞ்ஞா சக்கரத்தின் மேல் சந்தனம் மற்றும் குங்குமத் திலகம் அணிந்து பார்த்திருக்கிறேன்.
நெற்றியின் மேல் பகுதியில் சந்தனத் திலகமும், ஆஞ்ஞா சக்கரத்தின் மேல் குங்குமத் திலகமும் அணிவதன் உட்கருத்து என்ன?

பாரம்பரியமாக, திலகம் ஒரு சின்னமாகும். இது ஒரு சௌபாக்கியத்தின் சின்னம், அர்ப்பணிப்பின் ஒரு முத்திரை, நம்பிக்கை மற்றும் தன்னம்பிக்கையின் ஒரு அறிவிப்பு. திலகம் என்ற நெற்றியில் இடும் குறி மற்றும் மௌலி என்ற புனித நூல் ஆகியவை சனாதன தர்மத்தின் அனைத்துச் சமயச் சடங்குகளிலும் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாகும். சமூகத்தில் மனைவியானவள், தனது திருமண அந்தஸ்த்தை அறிவிக்கத் திருமண உறவுக்கான ஒரு உள்ளார்ந்த அர்ப்பணிப்புடன் திலகத்தைத் தனது நெற்றியில் வைக்கிறாள். பெண், தனது அழகை அதிகரிக்க அதைத் தனது நெற்றியில் வைக்கிறாள், அதேசமயம் தனது தன்னம்பிக்கையை அமைதியாகத் தெரிவிக்கிறாள். மதத்தின்படி, பல்வேறு பிரிவுகளின் திலகம் வித்தியாசமாக இருக்கிறது, ஒவ்வொரு பிரிவையும் அடையாளம் கண்டுகொள்ள இந்தக் குறி அனுமதிக்கிறது. சிவனை ஆராதிப்பவர்கள் த்ரிபுண்டா, வைணவர்கள் ஊர்தவ் த்ரிபுண்டா மற்றும் ஷாக்தா சுற்று வட்டமும் அணியலாம். ஒவ்வொரு பிரிவிலும் இதன் பின்னால் ஒரு தத்துவம் இருப்பதாகத் தெரிகிறது.

எனினும் ஒரு உபாசகர் வெவ்வேறு காரணங்களுக்காக இதை வைக்கிறார். சகுண உபாசகர், வடிவத்தை வணங்குபவர், திலகத்தை ஒரு நினைவூட்டலுக்காக அணிகிறார். அவரது இஷ்ட தெய்வத்திடம் சரணாகதி, அடைக்கலம் அடைந்தவர் என்ற நிலையான நினைவை அவருக்கு அது அளிக்கிறது. நிர்குண உபாசகர், உருவமற்ற நிலையை வணங்குபவர், புருவங்களின் நடுவில் புனிதமான நரம்புகள் பின்னிக் கொண்டிருக்கும் சக்கரத்தின் இடத்தைச் சுட்டிக் காட்டும் படியாக, ஆஞ்ஞா சக்கரத்தின் மேல் வைக்கிறார்கள். ஒரு சிறந்த கவனத்தை அடைவதற்கு அவருக்கு அது உதவுகிறது.

மேலே கூறியவை யாவும் புத்தகத்தில் உள்ள காரணங்கள். இதற்காக நான் அதை அணியவில்லை. நான் எனது நெற்றியில் இரண்டு குறிகளை வைக்கிறேன். முதலாவது, புருவங்களின் நடுவில் உள்ள நெற்றிப் பகுதியின் மீது குங்குமத்தால் ஆன செந்நிறப் பொட்டு, இரண்டாவது நெற்றியின் மேல் பகுதியில் ஒரு சந்தனப் பொட்டு. கீழே உள்ளது விண்ணுலக அன்னை ஸ்ரீயையும், மேலே உள்ளது ஹரியையும் கௌரவிக்க. கீழே உள்ளதை ராதா, பாரா சக்தி அல்லது பிரகிருதி எனவும், மேலே உள்ளதை கிருஷ்ணா, சிவா அல்லது புருஷா எனவும் எடுத்துக் கொள்ளலாம். இவைகளுக்கு இடையே முற்றிலும் எந்த வித்தியாசமும் இல்லை என்று நான் ஆணித்தரமாகத் தெரியப்படுத்துகிறேன்.

அவர்கள் எல்லோரும் ஒரே கடவுளின் வெவ்வேறு வடிவங்களே. உங்களது சொந்த அமைப்பின் நம்பிக்கையின் அடிப்படையில் நீங்கள் தொடர்புபடுத்திக் கொள்வதற்கு உதவியாக நான் பல பெயர்களைப் பயன்படுத்தி உள்ளேன். எளிதாகப் புரிந்து கொள்ள, உங்களது உடலின் இடது பக்கத்தைப் பெண்மையின் அம்சமாகவும் (சக்தி), வலது பக்கத்தை ஆண்பாலாகவும் நினைத்துக் கொள்ளுங்கள். இரண்டும் ஒன்றாக இணைந்து ஒரு முழு உடலை உருவாக்குகிறது. கெளரவிப்பதற்கும் மேலாக, நான் என் இஷ்ட தெய்வத்தின் மேல் கொண்ட ஆழ்ந்த உணர்வால் இதைச் செய்கிறேன். கிட்டத்தட்ட என் தெய்வத்திற்காக அலங்காரம் செய்து கொள்வதைப் போல. மற்றொரு காரணமும் இருக்கிறது; நேரில் பார்க்கும் போது மட்டுமே அதைப் பகிர்ந்து கொள்ள முடியும். நாம் சந்திக்கும் போது தயவு செய்து எனக்கு ஞாபகப்படுத்தவும், நான் அதை வெளிப்படுத்துகிறேன்.

சௌந்தர்ய லஹிரி விளக்கவுரை

நமஸ்தே சுவாமிஜி, நாங்கள் அனைவரும் தவறாமல் உங்கள் பதிவுகளைப் படித்து வருகிறோம் மற்றும் மிகவும் அவைகளால் தூண்டப் பட்டிருக்கிறோம். உங்களுடைய பதிப்பிக்கிற்கான தகவல்களை நான் கோரலாமா? நீங்கள் ஒரு குறிப்பிட்ட வேதநூலை எடுத்து விளக்கவுரை/ வர்ணனை செய்தால், அது எங்களைத் தெளிவுபடுத்தும். உங்களது அனுப அறிவுடன் வேதநூலின்படி எங்களை வழிநடத்தினால் நாங்கள் பாக்கியசாலிகள் ஆவோம். சௌந்தர்ய லஹிரியில் இருந்து ஆரம்பிக்க முடியுமானால் எங்களுக்கு அது மிகவும் சந்தோஷமாக இருக்கும். ஒரு பதிப்பிற்கு 5 ஸ்லோகங்கள் என்று எடுத்துக் கொண்டால் 20 பதிப்புகளில் அதை முடித்து விடலாம். வணக்கம் மற்றும் ஆழ்ந்த நன்றி.

உங்களுடைய கருத்து மிகச் சிறந்ததாகும். ஏற்கனவே சௌந்தர்ய லஹிரியின் (அழகின் அலைகள்) வர்ணனைகள் நிறைய உள்ளன. இதுவரை எழுதப்பட்டுள்ள உரைகளுக்கு மேல் விமர்சிக்கவோ அல்லது வேறுவிதமாகவோ புதிதாகச் சொல்ல, என்னிடம் எதுவும் இல்லாமல் இருக்கலாம். தனிப்பட்ட முறையில், தேடுதல் உள்ளவர்களுக்கு கண்டுபிடிப்பிற்கான ஒரு ஒழுங்கு முறையை வெளிப்படுத்துவது நல்லதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இத்தகைய ஒழுங்கு முறையைப் பின்பற்றுவது, அவர்கள் தங்களது சொந்த உண்மையைக் கண்டறிய உதவும். சௌந்தர்ய லஹிரியில் உள்ள நூறு பாடல்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு ப்ரயோகம் (பயன்பாடு), அதனுடைய சொந்த யந்திரம் (விசித்திரமான வரைபடம்), மற்றும் விதி (வழிபடுவதற்கான செயல்முறை) உள்ளது.

ஸ்ரீ வித்யா உபாஸனை செய்யும் ஒருவரிடம், வெற்றிக்கான வாய்ப்பை உயர்த்தும் அதனுடைய ஆழ்ந்த இரகசியங்கள் மற்றும் சிக்கலான கட்டங்களைப் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கிறேன். சுருக்கமாக, எனது தனிப்பட்ட முறையில், லலிதா ஸகஸ்ரநாமமே போதுமானதாக நான் உணர்கிறேன். நூற்றி எண்பத்தி ஒன்று ஸகஸ்ரநாமப் பாடல்களே, உங்களால் கற்பனை செய்ய முடிந்த அனைத்தையும் அடைய உதவ முடியும். இதனுடன் மூலவித்யா, ஸ்ரீ யந்திரத்துடன் தேவியின் மூல மந்திரம், ஸ்ரீ ஸுக்தத்துடனான அவளது பிரார்த்தனை ஆகியவையே உங்கள் கண்களுக்கு முன்பாக அற்புதங்கள் நிகழ்வதைக் காணத் தேவையானவை. இது போன்ற விஷயங்கள் பாரம்பரியம் போற்றப்பட்ட காலத்தில் குருவிடமிருந்து சீடருக்கு அல்லது சித்தரிடம் இருந்து சாதகருக்கு வாய்மொழியாகக் கற்பிக்கப்பட்டது போல் கற்பிக்க முடியும்.

தேவியின் பாவனையில் திளைத்திருக்கும் ஒருவருக்கு உபகரணங்களோ, சூழ்நிலைகளோ தேவைப்படுவதில்லை. வழிபாட்டு அமைப்புப் பற்றி எதுவும் தெரியாத, ஆனால் அவளைத் தவிர வேறு ஒன்றும் தேவையில்லை என்று உள்ள ஒருவருக்கு, தேவி அவளது தரிசனத்தை உடனடியாக வழங்குகிறாள். எனினும், உங்களுக்கு உங்கள் தெய்வத்தின் தரிசனம் வேண்டும் என்றால், நீங்கள் ஆரம்பக் காலங்களில் ஒரு கடுமையான முயற்சியைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தத் தயவு செய்து என்னை அனுமதியுங்கள். நீங்கள் தொடங்கிய சாதனா முடிவுக்கு வந்த பின்னர், சௌந்தர்ய லஹிரியின் நூறு பாடல்களின் உண்மையான அர்த்தம் வெளிப்படும். ஏன், நீங்கள் உண்மையில் ஆனந்தம் (பேரின்பம்) மற்றும் சௌந்தர்யம் (அழகு) ஆகியவற்றின் அலைகளை அனுபவிப்பீர்கள். இதுவே, என் அன்புக்குறியவர்களே, அந்த வரிகளிலிருந்து கிரகிக்கப்படும் அறிவாற்றலை விட, மனநிறைவு தருகின்ற, திருப்தி அளிக்கின்ற மற்றும் நீடித்த அனுபவமாக இருக்கப் போகிறது. நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன்; இல்லை என்றால், உங்கள் எண்ணங்களைத் தயவு செய்து தயங்காமல் குறிப்பிடுங்கள். இது ஒரு முக்கியமான விஷயமாகும்.

வானத்து இசை

இசை என்பது ஒரு பேரின்பமாகும், அதனால் மனநிலைகளை மாற்ற முடியும்… இந்த இசை ஆன்மீக உலகத்துடன் எப்படி இணைக்கப் பட்டுள்ளது மற்றும் அது என்ன பங்கு வகிக்கிறது. சிலர் தியானத்திற்கு அதைப் பயன்படுத்துகின்றனர்.
உங்களது நிகழ்ச்சியுரை ஒன்றில் கந்தர்வர்களின் ஒலி பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். முடிந்தால் தயவு செய்து அதைப் பற்றி விவரிக்கவும் மற்றும் அதை எப்படி ஒருவர் உணரவோ அல்லது அனுபவிக்கவோ முடியும். எப்படி நீங்கள் கந்தர்வர்களின் இசையை நம்மைச் சுற்றிக் கேட்கும் இசையுடன் இணைக்கிறீர்கள்.

கந்தர்வர்களின் இசையைக் கேட்கும் என் அனுபவங்களைக் கூற ஆரம்பித்தால், என்னைப் பித்துப் பிடித்தவன் என்று பெரும்பாலோர் முத்திரை குத்தி விடுவார்கள். அதிர்ஷ்டவசமாக அதைப்பற்றிய கவலை தேவை இல்லை. என் அனுபவங்களை ஆவணப்படுத்துதல் மட்டுமே, எவருக்கும் எந்த ஒரு சாதனையையும் புரியப்படுத்தப் போவதில்லை என்று நான் நினைக்கிறேன். இது ஒருவேளை தவறாகக் கூட இருக்கலாம். தனிப்பட்ட முறையில், நேருக்குநேர் பேசும்போது எனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவதில் எனக்குச் சந்தோஷம். அவையோருக்கும், எனக்கும் இடையே நம்பிக்கை என்ற ஒரு பிணைப்பு உறுதியாக இருந்தால், நான் இந்தத் தலைப்பில் இன்னும் விரிவாகக் கூற முடியும்; தேடுதல் உள்ளவர்களை அது ஊக்குவிக்கும் என்று நான் நினைத்தால். உண்மையில், நான் அவர்களுக்குச் சரியான பாதையை, அவர்களும் அனுபவிக்க, சரிபார்க்க, அவர்களே அதை மதிப்பீடு செய்யக் காட்ட முடியும். மனித இசை அல்லது தெய்வீக இசை எதுவாக இருந்தாலும், இசையைப் பற்றி படிப்பதால் மட்டும் எந்த பயன்பாடும் இல்லை. உண்மையான அனுபவத்தைத் தேடி ஏன் போகக் கூடாது! மற்றும் நீங்கள் அதை அனுபவிக்கத் தீவிரமாக இருக்கிறீர்கள் என்றால், முதலில் தயவு செய்து அதற்குத் தகுதி ஆனவர் ஆகுங்கள். சுய சுத்திகரிப்பு மற்றும் சுய மாற்றம் இவற்றிற்கான உழைப்பு தேவைப்படுகிறது.

நீங்கள் உள்ளே உள்ள இசையுடன் இணய முடியும் காலம் வரை, வெளியே இருக்கும் இசையை உற்றுக் கேட்கவும், அனுபவிக்கவும் (சாதாரணமாகக் கேட்பது அல்ல) கற்றுக் கொள்ளுங்கள். உள்ளே உள்ள வானத்து இசை அனாஹத நாதம், அடிக்கப்படாத ஒலி, என அழைக்கப்படும்; அது ஒரு விலைமதிப்பற்ற யோக அனுபவம். ஓர் ஆண்டு காலம் தரமான தியானப் பயிற்சி செய்யும் எவராலும் இந்த அனுபவத்தை அடைய முடியும். அத்தகைய ஓர் ஆண்டில், ஆறு மாதங்களுக்கு உங்களுடைய முழு அர்ப்பணிப்பை, கட்டுப்பாட்டிற்கு வழங்க வேண்டும்.

நீங்கள் முயற்சிக்காத வரை, உண்மையான அனுபவங்கள் எதுவும் இருக்கப் போவதில்லை என்பதைத் தயவு செய்து தெரிந்து கொள்ளவும். உடைந்த பதிவு நாடாவைப் போல் திரும்பத் திரும்பச் சொல்வதில் எனக்குச் சந்தோஷம்: உங்கள் லட்சியத்திற்கு, ஓரளவிற்காவது அருகில் உள்ள ஒன்றின் பலனை அடைய, தீவிர முயற்சி என்ற விதையை விதைக்க வேண்டும்.

ஹரே கிருஷ்ணா
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email