ஒரு குடும்பத்தில், சமூகத்தில், இந்த உலகில் வாழ்பவர்கள், சில நேரங்களில், உங்களுடைய குறித்த எந்தத் தவறுதலாலும் அல்லாமல், மற்ற நபரின் எதிர்மறை, அலட்சியம், அளவுக்கு அதிகமான விமர்சனம், சற்று கூடுதலான உணர்வற்ற தன்மை மற்றும் இவற்றைப் போன்ற பல நிஜமான சூழ்நிலையில் உள்ளீர்கள். இப்படிப்பட்ட மக்களை மற்றும் இது போன்ற சூழல்களை எப்படிச் சமாளிப்பது என்று தெரிந்து கொண்டால், உங்களுடைய உள்மன மகிழ்ச்சி மற்றும் அமைதி பாதிக்கப்படாமல் அப்படியே இருக்கும். தற்போதைய விஷயத்தில் நான் என்னுடைய எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதற்கு முன், ஒரு உதாரணத்தின் உதவியுடன் என் அடிப்படைத் தத்துவத்தைத் தெளிவுபடுத்த அனுமதிக்கவும்:

காலையில் நடப்பதற்காக வெளியே வந்த ஒரு பாதசாரியாக உங்களைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒரு ஸ்கேட்போர்ட்(skateboard) செய்பவர் கட்டுப்பாட்டை இழந்து, பின்னால் இருந்து உங்களை இடித்துவிடுகிறார். இதன் விளைவாக, நீங்கள் கீழே விழுந்து, உங்களுக்குக் காயங்கள் ஏற்படுகின்றன. தெளிவாக, நீங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. இருந்தும், உங்களுக்கு அடிபட்டுள்ளது, நீங்கள் தான் வலி படுகிறீர்கள். நீங்கள் தான் பாதிக்கப்பட்டவராக இருப்பதால், உங்களுக்குத் தான் முதலுதவி, சிகிச்சை மற்றும் மீண்டுவர அவகாசம் தேவைப்படுகிறது. இது ஒரு விபத்தோ அல்லது வேண்டுமென்றே அவரால் செய்யப்பட்ட செயலோ, எதுவாக இருந்தாலும் ஸ்கேட்போர்ட் செய்பவருக்கு மருந்து கொடுப்பதால் அது உங்களைக் குணப்படுத்தவோ அல்லது காயத்தை ஆற்றப்போவதோ இல்லை.

மேலே கூறப்பட்டதை மனதில் வைத்து, ‘அவர்கள்’ என்ன செய்கிறார்கள், ‘அவர்கள்’ ஏன் இதைச் செய்கிறார்கள், எப்படி ‘அவர்கள்’ இந்த மாதிரி இருக்கிறார்கள், எப்போது ‘அவர்கள்’ மாறுவார்கள் என்பனவற்றில் என் கவனம் இல்லை, என் கவனம் ‘அவர்கள்’ மேல் இல்லை, என் கவனம் உங்கள் மேல் தான். நாம் அவர்களை மாற்ற முடியாது, நாம் ’உங்களை’ மாற்ற முடியும். அவர்கள் தவறானவர்களாக இருக்கலாம், அவர்கள் கெட்டவர்களாக இருக்கலாம், உண்மை என்னவென்றால் உங்களுக்கு அடிபட்டிருந்தால், எப்படி உங்களைக் குணம் அடையச் செய்வது, காப்பாற்றுவது மற்றும் வலுவானவராக்குவது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். விரும்பத்தகாத எது ஒன்று உங்களுக்கு நடந்தாலும், எதிர்காலத்தில் அதைத் தவிர்க்க விரும்பினால், நீங்கள் தான் நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.

உங்கள் உணர்ச்சிகளை ஆற்றல் இழக்கச்செய்யும், மனதளவில் சோர்வடையச் செய்யும், அவர்களது எதிர்மறைத் தன்மையை உங்களிடம் மாற்றும், உங்களைத் தாழ்வாக எண்ணவைத்து, சிறப்பில்லாமல், முக்கியத்துவமற்ற மற்றும் பிற தாழ்வான உணர்வுகளின் ஒரு முழுக் குவியலாக உணரச் செய்யும் மனிதர்களால் நீங்கள் சூழப்பட்டுள்ள போது, நீங்கள் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளவில்லை, யார் வேண்டுமானாலும் உங்களை எப்படி வேண்டுமானாலும் நடத்த அனுமதிக்கிறீர்கள், என்பதின் ஒரு பிரதிபலிப்பாகும். நீங்கள் அந்த விதமாக உங்களைப் பாதுகாப்பில்லாமல் வெளிப்படுத்திக் கொள்ளும் போது, வருத்தம் தோய்ந்த, காயப்படும்படியாக மற்றும் பலவீனமாக உணரும் விளைவை மட்டுமே அது ஏற்படுத்தும். நீங்கள் இது போன்ற சூழல்களைத் தவிர்க்க எடுக்க வேண்டிய சில வழிகள் உள்ளன, இதில் தான் இன்று நான் கவனம் செலுத்தப் போகிறேன் — மற்றவர்களின் எதிர்மறையைச் சமாளிப்பது எப்படி. உங்களால் செய்யக்கூடிய மூன்று விஷயங்கள் உள்ளன, அவை பரஸ்பரம் தனிப்பட்டவை அல்ல.

1. உங்களை வெளிப்படுத்துங்கள்

எவ்வளவு முடியுமோ அவ்வளவு அமைதியாக, அவர்களின் கருத்துகள், விமர்சனங்கள், அவர்களின் நடத்தை ஆகியவை உங்களுக்குப் பிடித்தமில்லை என்பதை, மற்ற நபரிடம் தெளிவாகப் புரிய வையுங்கள். நீங்கள் நேர்மறையாக இருக்கவே விரும்புகிறீர்கள் என்றும், உறவுமுறை நன்கு செழிப்புற, உங்களுக்கு ஓரளவு மரியாதை, ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் வேண்டும் என்றும் அவர்களிடம் சொல்லுங்கள். மற்ற நபருக்கு உண்மையில் உங்கள் மீது அன்பு இருந்தால், அவர்கள் நிச்சயமாக இதைக் குறித்துக் கொள்வார்கள். மேலும், அவர்கள் தங்கள் பழைய முறையையே தொடர்ந்தார்கள் என்றால், அதைத் தொடர்ந்து தாங்கிக்கொள்ள விருப்பமா, அல்லது விட்டுச் செல்வதா என்பதை நீங்களே முடிவு செய்ய வேண்டும். அவர்கள் மாற்றிக்கொள்ளப் போவதில்லை.

2. அங்கிருந்து அகன்று விடுங்கள்

நீங்கள் கடந்த காலத்தில் உங்களது எண்ணங்களைப் பல முறை வெளிப்படுத்தியும், அது எதையும் மாற்றவில்லை என்றால், அந்தச் சூழலிலிருந்து நீங்கள் வெளியேறிவிட்டால், அது உங்களுக்கு உதவலாம். உறவிலிருந்து விலகுவது மற்றும் பிரிந்து விடுவது சாத்தியமில்லாத போது, அங்கிருந்து எழுந்து, காட்சியமைப்பு மற்றும் சூழ்நிலையை மாற்ற வெளியே நடந்து விட்டு வரலாம். அது மற்ற நபருக்கு ஒரு குறிப்பைக் கொடுக்கலாம். உங்களின் இந்த அணுகுமுறையை, ஒவ்வொரு விரும்பத்தகாத உரையாடலின் போதும் கடைப்பிடிக்க வேண்டும் என்று நான் கருத்துத் தெரிவிக்கவில்லை, சில நேரங்களில் அது இயற்கையானது மற்றும் தேவையானது. எனினும், நீங்கள் நிலையான விமர்சனம் மற்றும் எதிர்மறையைச் சந்திக்கிறீர்கள் என்றால் அந்தச் சூழலிலிருந்து உடல் ரீதியாக அங்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவது ஒன்றே நல்ல தேர்வாக இருக்கும்.

3. உங்களைக் காத்துத் தனிப்படுத்திக் கொள்ளுங்கள்

ஒரு காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை யோசித்துக் கொள்ளுங்கள், இழுவைக் கட்டுப்பாட்டு அமைப்பு நேரடிப் பாதுகாப்பிலும், இருக்கை பெல்ட்கள் மறைமுகப் பாதுகாப்பிலும் பங்களிக்கின்றன. உங்களைச் சுற்றி ஒரு காப்பு அமைத்துக் கொள்வது, மறைமுகப் பாதுகாப்பு அமைப்பைப் போன்றதாகும். இதற்கு, ஏர்பேக்குகள் (airbags) போல் வெடிக்கத் தேவையில்லை. மற்ற நபரின் விமர்சனம், கருத்துகள், எதிர்மறையிலிருந்து காப்பு செய்துகொள்ளல் எளிதான வழியல்ல, ஆனால் உங்களைப் பாதுகாத்துக்கொள்ள உங்களிடம் இருக்கும் வழிகளில் இது சிறந்த ஒன்றாகும். சில நாட்களுக்கு முன் ‘விமர்சனத்தைச் சமாளிப்பது எப்படி’ என்பதைப்பற்றி எழுதியுள்ளேன், நீங்கள் மீண்டும் அதைப் படிக்க விரும்பலாம்; உங்களின் கவசம் போல் நீங்கள் பயன்படுத்தக்கூடிய நான்கு முறைகளைப் பற்றி அது கூறுகிறது. காப்பு மூலம் எந்த விதமான எதிர்மறை அல்லது விமர்சனத்தைச் சமாளிக்கும் போது, நீங்கள் பெரிய வலிமையைப் பெறுவது மட்டுமல்லாமல், மற்ற நபரை நடைமுறையில் வலுவிழக்கவும் செய்கிறீர்கள். உங்களிடமிருந்து எந்தப் பதிலையும் கோர முடியாததால் ஏற்பட்ட தோல்வி, உங்கள் மனநிலையை மாற்ற முடியாத அவர்களது இயலாமை, உங்களுக்கு ஒரு உறுதியான பிடிப்பை அளிக்கிறது, ஒரு குறிப்பிட்ட திட நம்பிக்கை, ஒரு சமாதானப் போர்வை, அச்சமற்ற ஒரு உணர்வைக் கொடுக்கிறது.

புத்திலிபாய், மகாத்மா காந்தியின் தாயார், காந்தி ஊதாரிகளுடன் நட்புப் பாராட்டுவதைக் கண்ட போது, ஒருமுறை காந்தியிடம் தனது கவலையைத் தெரிவித்தார். அவர்கள் மகன் காந்தி, அப்போது ஒரு இளம் பருவத்தினனாக இருந்ததால், அவர்களுக்குக் கவலையாக இருந்தது.

“நீ அவர்களைப் போல் ஆவதை நான் விரும்பவில்லை. நீ அந்தக் குழந்தைகளுடன் விளையாடினால், நீயும் ஊதாரி ஆகி விடுவாய்,” என்று அவர் கூறினார்.
“அம்மா, என்மீது நம்பிக்கை வையுங்கள். அவர்களை மாற்றலாம் என்று தான் நான் அவர்களுடன் இருக்கிறேன். அவர்களால் என்னை மாற்ற முடியாது. அவர்களை விட மனதளவில் உறுதியாகவும், உணர்வுப்பூர்வமாக வலுவாகவும் நான் இருக்கிறேன்.”

அந்தத் தாய் அங்குப் பிரமித்து நின்றார்கள், காந்தி தனது வாழ்நாள் முழுவதும் தனது வார்த்தைகளுக்குத் தகுந்தபடியே வாழ்ந்தார்.

எவரும் எக்காலத்திலும், உங்களை விட வலுவாக இருக்கும் போது தான், உங்களிடம் தங்கள் எதிர்மறையைக் காட்ட முடியும். இதனால் தான் உள் நோக்கித் திரும்பும் பயணமானது, உங்களை மாற்றுவது, உங்களை வலுப்படுத்துவதைப் பற்றியதாகும், இதன் மூலம் நீங்கள் பாதிக்கப்படாமல் இருக்கலாம். உங்கள் இதயத்தில் எந்த உணர்ச்சி முளை விடுவதை நீங்கள் அனுமதிக்கிறீர்கள், உங்கள் மனதில் நீங்கள் ஆதரிக்கும் சிந்தனை, எந்தச் சூழ்நிலையிலும் நீங்கள் தேர்வு செய்யும் பதில் ஆகிய இவை உங்களின் தனிப்பட்ட விவகாரம் ஆகும். அது, ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கலாம், இணைக்கப்பட்டு இருக்கலாம், தொடர்புடையதாக இருக்கலாம், ஆனால் அது ஒரு தனிப்பட்ட விஷயமாகவே இருக்கிறது. கவனமாக இருங்கள், விழிப்புடன் இருங்கள்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email